Published:Updated:

''நாங்கள் தூதர்கள் அல்ல!''

MAD BULLS CLUB - மெட்ராஸ் புல்ஸ் கிளப்

''நாங்கள் தூதர்கள் அல்ல!''

MAD BULLS CLUB - மெட்ராஸ் புல்ஸ் கிளப்

Published:Updated:

-ர.ராஜா ராமமூர்த்தி  

 ##~##

'மேட் புல்ஸ்’ எனப்படும் மெட்ராஸ் புல்ஸ் கிளப்புக்கு இப்போது வயது 11. சென்னையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் அனைவருமே இணைய விரும்பும் கிளப் இது. புல்லட் வாடிக்கையாளர்கள் செல்ல விரும்பும் 'ரைடர் மேனியா’-வை முதன்முதலாகத் துவக்கியதும் இந்த மேட் புல்ஸ்தான். சில கிளப்புகள் உருவாகும்; ஆறே மாதங்களில் காணாமல் போய்விடும். ஆனால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, வயது வித்தியாசம் இன்றி, நாட்டின் நான்கு திசைகளையும் தங்கள் புல்லட்டுகளால் அளக்கும் மேட் புல்ஸின் எனர்ஜிக்கு என்ன காரணம்? மேட்புல்ஸின் 'தல’ ரங்கராஜன், 'டீசல்' ஹரி, புல்லட் 'போஸ்’ ஆகியோரிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''2002-ல் மேட்புல்ஸ் கிளப் துவக்கிய போது ஏழு பேர்தான் இருந்தார்கள். இப்போது 1,500 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நாங்கள் ரைடு போகும் போது போலீஸ் எங்களை நிறுத்தச் சொன்னால், நாங்கள் பைக்குகளை எவ்வளவு ஒழுங்காக சாலையில் நிறுத்துகிறோம் என்பதே, எங்களைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தை போலீஸுக்கு உணர்த்திவிடும்.

''நாங்கள் தூதர்கள் அல்ல!''

எங்கள் கிளப் உறுப்பினர்களாக இருக்கும் எவருக்கும் ஒரு அதீத தன்னம்பிக்கை உண்டு. நடுவழியில் ஏதாவது பிரச்னை என பைக் நின்றாலும், எங்களால் தனியாகச் சமாளிக்க முடியும். நாடு முழுக்கச் சுற்றி இருப்பதால், மற்ற நகரங்களின் புல்லட் கிளப்புகளும் எங்களுக்கு நன்கு பரிச்சயம். ஒருபோன் கால் போதும், பிரச்னைகள் பறந்துவிடும்'' என்றார் ரங்கராஜன்.

இப்போது மேட் புல்ஸுடன் ஜாவா கிளப்பும் சேர்ந்துவிட்டது. ஜாவா பைக் கிளப் உறுப்பினர்களான டி.எஸ்.கண்ணனும், சதீஷ§ம் பேசியபோது, ''முன்பெல்லாம் ஜாவா பைக் கிளப்புகள் தொலை தூர ரைடுகள் செல்வது குறைவு. இப்போது மேட் புல்ஸின் துணையோடு நாங்கள் 1,000 கி.மீ-க்கும் மேற்பட்ட தூரங்கள் செல்ல ஆரம்பித்துவிட்டோம். இதனால், இளைய தலைமுறையினருக்கு ஜாவா பைக்குகளின் மீது  அதிக ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது.'' என்றார்கள்.

''ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்காக நீங்கள் கிளப் எல்லாம் ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை ஒழுங்காகக் கவனிப்பதில்லை என்கிற பேச்சு இருக்கிறதே?''

''நாங்கள் தூதர்கள் அல்ல!''

''ராயல் என்ஃபீல்டில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னையே, ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைப்பதில் இருக்கும் திண்டாட்டமும், சர்வீஸ் தரமும்தான். எங்களுக்குள் சிலர் புல்லட் டீலர்ஷிப்புகளில் சர்வீஸ் விடுவதில்லை. ஏன், இலவச சர்வீஸ்களுக்குக்கூட விடுவதில்லை. ஏனென்றால், அவர்களுடைய சர்வீஸ் தரம் மிகச் சுமார்தான். கைதேர்ந்த புல்லட் மெக்கானிக்குகள் எந்த புல்லட் டீலர்ஷிப்பிலும் இல்லை. அவர்களெல்லாம் வெளியே வந்து விட்டார்கள். அதேபோல், எந்த ஒரு பைக்கோ, காரோ தனது தயாரிப்பில் ஒன்றை நிறுத்தினால், சில ஆண்டுகளுக்கு ஸ்பேர் பார்ட்ஸ்களைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தயாரிப்பு நிறுத்தப்பட்ட சில ராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இருந்தாலும், 'வீ லவ் புல்லட்.’ நாங்கள் நிறுவனத்தின் ரசிகர்கள் இல்லை. புல்லட்டின் ரசிகர்கள்'' என்றார் 'டீசல்’ ஹரி.

''ராயல் என்ஃபீல்டின் புதிய பைக்கான கஃபே ரேஸர் கான்டினென்ட்டல் ஜிடி-க்கு, புல்லட் ஆர்வலர்களிடம் எந்த அளவு எதிர்பார்ப்பு உள்ளது?''

''கஃபே ரேஸர் மீது இளைஞர்களைவிட, வயது அதிகம் உள்ள ராயல் என்ஃபீல்டு ஆர்வலர்கள்தான் இந்த பைக்கை ஓட்ட ஆர்வமாக உள்ளார்கள். கம்பெனியின் டார்கெட்டே இந்த பைக் மூலம் 40 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை ஈர்ப்பது தான். கொஞ்சம் ரிலாக்ஸ்டாகப் பயணிக்க வேண்டும் என்பவர்களுக்கான பைக் இது. புல்லட் என்றாலே ரிலாக்ஸ் ரைடிங்தானே. வீ ஆர் வெயிட்டிங்!'' என்றார் புல்லட் போஸ்.