Published:Updated:

ஹோண்டாவின் புதுக் கனவு!

ஹோண்டாவின் புதுக் கனவு!

ஹோண்டாவின் புதுக் கனவு!

ஹோண்டாவின் புதுக் கனவு!

Published:Updated:
ஹோண்டாவின் புதுக் கனவு!
 ##~##

அன்றாடப் பயன்பாட்டுக்கான பைக் என்றால், நமக்கு முதலில் தோன்றுவது ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர்தான். ஹீரோ - ஹோண்டா கூட்டணி முறிந்தபோது, ஸ்ப்ளெண்டரை ஹீரோவுக்குத் தாரை வார்த்துவிட்டது ஹோண்டா. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்பிறகு, 100 சிசி கம்யூட்டர் பைக் மார்க்கெட்டைப் பிடிக்க, ஹோண்டா தனது ட்ரீம் யுகாவை கடந்த ஆண்டு களம் இறக்கியது. ட்ரீம் யுகா மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதிரடியாக மார்க்கெட்டைப் பிடிக்க இந்த ஒரு பைக் போதாது என்பதால், அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மற்றும் ஒரு பைக்காக ட்ரீம் நியோவை ஹோண்டா அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஹீரோவின் ஸ்ப்ளென்டர் ப்ரோ மற்றும் பேஸன் ப்ரோ பைக்குகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ட்ரீம் நியோ மார்க்கெட்டைப் பிடிக்குமா?

ஹோண்டாவின் புதுக் கனவு!

டிசைன், இன்ஜினீயரிங்

ட்ரீம் நியோ, பார்ப்பதற்குத் தனது உடன்பிறப்பான ட்ரீம் யுகா போலவே இருக்கிறது. அன்றாடப் பயன்பாட்டுக்கான பைக் என்பதால், ஸ்டைலில் அதிக கவனம் செலுத்தவில்லை. பார்ப்பதற்கு 90-களில் வந்த ஸ்ப்ளெண்டர்போலவே இது இருக்கிறது. நியோ-வின் இன்ஜின், எக்ஸாஸ்ட் மற்றும் அலாய் வீல்கள் அனைத்துக்கும் கறுப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

ட்ரீம் நியோவின் ஹெட்லைட், பிகினி ஃபேரிங்கில் பொருத்தப்பட்டுள்ளது. வைஸருக்குப் பின்னால் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் பெரிய அனலாக் ஸ்பீடோ மீட்டரும், ஃபியூல் இண்டிகேட்டரும் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டும் பார்ப்பதற்குப் பெரிதாகவும் எளிமையாகவும் உள்ளன. நியோவில் 'பாஸ்-லைட்’ மற்றும் 'ஹை-பீம் லோ-பீம்’ சுவிட்ச் வசதி உள்ளன. ட்ரிப் மீட்டர் இருந்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.

ஹோண்டாவின் புதுக் கனவு!

இந்தியாவில் உள்ள மற்ற கம்யூட்டர் பைக்குகளைப் போலவே, நியோவிலும் டேங்க் மற்றும் சைடு பேனல்களில் கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. நகரப் பயன்பாட்டுக்குப் போதுமான 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கின் மூடி, திறந்தவுடன் கையோடு வந்து விடுவது சற்று அசௌகரியமே!

நியோவின் பின் பக்கத்தில், அரதப் பழசான டிசைன் கொண்ட கைப்பிடியும், டெயில் லைட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. ஹோண்டாவின் பெட்ரோல் சேமிப்புத் தொழில்நுட்பமான, 'ஈக்கோ டெக்னாலஜி’ நியோவில் கொடுத்திருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம். பைக்கின் ஃபிட் அண்டு ஃபினிஷ், ஹோண்டாவின் தரத்தோடு சிறப்பாக உள்ளது.

இன்ஜின், கியர்பாக்ஸ், பெர்ஃபாமென்ஸ்

ட்ரீம் நியோவில் இருப்பது, ட்ரீம் யுகாவில் உள்ள அதே 109 சிசி 4-ஸ்ட்ரோக் இன்ஜின்தான். இதில் ஸ்டாண்டர்டு கார்புரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டாவின் ஈக்கோ டெக்னாலஜிக்காக, இன்ஜின் பிஸ்டன் மற்றும் கம்ப்ரஷன் சேம்பர் டிசைனில் சின்ன மாற்றங்களைச் செய்து, இன்ஜின் திறனை அதிகரித்து இருக்கிறார்கள். ட்ரீம் நியோவின் இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 8.25 bhp சக்தியும், 5,500 ஆர்பிஎம்-ல் 0.88 kgm டார்க்கும் அளிக்கிறது. அதனால், லோ மற்றும்  மிட்-ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக உள்ளது. ட்ரீம் நியோவில் இருப்பது 4-ஸ்பீடு கியர்பாக்ஸ். கிளட்ச், பயன்படுத்த எளிதாக இருக்கிறது.

ட்ரீம் நியோ 0-60 கி.மீ வேகத்தை அடைய 7.83 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 95 கி.மீ.

ஹோண்டாவின் புதுக் கனவு!

ஓட்டுதல், கையாளுமை மற்றும் பிரேக்

ட்ரீம் நியோ, சிங்கிள் டவுன் டியூப், ட்யூப்ளர் ஸ்டீல் ஃப்ரேம் சேஸியைக் கொண்டுள்ளது. முன் பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கம் அட்ஜஸ்ட் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. ட்ரீம் யுகாவின் சீட் பெரிதாகவும், உட்கார்ந்து ஓட்டுவதற்கு வசதியாகவும் உள்ளது. ஹேண்டில்பார், எளிதாகப் பிடிக்கக்கூடிய வடிவில் இருப்பது சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தைத் தருகிறது. நகரம் மற்றும் நெடுஞ்சாலை என இரண்டிலும் சஸ்பென்ஷன் சிறப்பாக வேலை செய்கிறது. நியோவின் எடை மிகவும் குறைவு. அதாவது, வெறும் 105 கிலோதான். எம்.ஆர்.எஃப் ட்யூப்லெஸ் டயர்கள் போதுமான க்ரிப் கொடுக்கின்றன.

நியோவுக்கு முன் பக்கம் டிஸ்க் பிரேக் கொடுத்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஏனென்றால், 60 கி.மீ வேகத்தில் சென்று சடர்ன் பிரேக் பிடித்தால், 22.76 மீட்டர்கள் தாண்டித்தான் பைக் நிற்கிறது.

மைலேஜ்

கம்ப்யூட்டர் பைக் என்றாலே, நாம் முதலில் எதிர்பார்ப்பது மைலேஜ்தான். நியோ, நகருக்குள் லிட்டருக்கு 57.2 கி.மீ, நெடுஞ்சாலையில் 59.8 கி.மீ தருகிறது. இது, போதுமான மைலேஜ்தான். ட்ரீம் நியோ, கம்யூட்டர் மார்க்கெட்டைப் பிடிக்க உருவாக்கப்பட்ட மற்றும் ஒரு ஹோண்டா பைக்தான். போதுமான மைலேஜ் மற்றும் ஹோண்டாவின் ஈக்கோ டெக்னாலஜி இருப்பதன் மூலம், மார்க்கெட்டில் டஃப் ஃபைட் கொடுக்கும்.

 தொகுப்பு: மனோஜ்

ஹோண்டாவின் புதுக் கனவு!