Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:

அருள்குமார், கோபி செட்டிப்பாளையம்

மோட்டார் கிளினிக்

நான் அப்பாச்சி 180 வாங்க நினைக்கிறேன். வாங்கினால் பிற்காலத்தில் ரீ-சேல் வேல்யூ இருக்குமா? பைக்கில் பிரச்னை வருமா? பைக் பற்றித் தகவல் வேண்டும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் கிளினிக்

டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக்கைப் பொறுத்தவரை பெர்ஃபாமென்ஸிலும், சிறப்பம்சங்களிலும் சிறந்த பைக். லிட்டருக்கு 40 - 45 கி.மீ மைலேஜ் தரும். அப்பாச்சியில் இன்ஜின், கியர்பாக்ஸ் என எதிலும் பிரச்னை என்று புகார்கள் இதுவரை இல்லை. சின்னச் சின்ன குறைகள் உண்டு. டயர்கள் சிறப்பாக இல்லை என்பதால், ஸ்டெபிளிட்டியில் பின்தங்கிவிடுகிறது அப்பாச்சி. மேலும், வேகம் கூடக் கூட அதிர்வுகளும் அதிகம். ரீ-சேல் மதிப்பைப் பொறுத்த வரை ஹோண்டா பைக்குகள் அளவுக்கு அப்பாச்சிக்கு ரீ-சேல் மதிப்பு கிடையாது.

நாகநாதன், கரூர்

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

நான் புதிதாக ஹேட்ச்பேக் கார் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். பின் பக்கம் அதிக இடவசதி இருக்க வேண்டும் என்பதோடு, மைலேஜும் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வாகன் போலோ ஜிடி மற்றும் மாருதி ஸ்விஃப்ட் ஆகிய இந்த மூன்று கார்களில் எதை வாங்கலாம்?

ஃபோக்ஸ்வாகன் போலோ, ஜாலியாக ஓட்டுவதற்குச் சிறந்த டிரைவர்ஸ் கார். ஆனால், இட வசதியிலும் மைலேஜிலும் இது ஸ்விஃப்ட், ஐ20 ஆகிய கார்களுடன் போட்டி போட முடியாது. ஸ்விஃப்ட்டுடன் ஒப்பிடும்போது, ஐ20 காரின் பின்பக்க இருக்கைகளில் இடவசதி அதிகம் என்பதோடு, ஹெட்ரூமும் அதிகம். மைலேஜிலும் சிறந்த கார் ஹூண்டாய் ஐ20.

அரவிந்தன், சென்னை.

மோட்டார் கிளினிக்

என் வீட்டில் மொத்தம் ஆறு பேர். குடும்பத்துடன் பயணிக்க வசதியாக டொயோட்டா இனோவா டீசல் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், டொயோட்டாவில் சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் விலை அதிகம் என நண்பர் பயமுறுத்துகிறார். உண்மையிலேயே இனோவா சர்வீஸ் செலவு அதிகம் வைக்குமா?

உங்கள் தேர்வு சரியானதே! பெரிய எஸ்யூவி/எம்பிவி கார்களுடன் ஒப்பிடும்போது, டொயோட்டா இனோவாவின் சர்வீஸ் செலவுகள் மிகவும் குறைவு. 1 லட்சம் கி.மீ ஓடிய கார்களுக்கு சர்வீஸ் செலவுகள் அதிகபட்சம் 5,000- 6,000 ரூபாயைத் தாண்டுவது இல்லை. அதனால், இனோவா அதிக செலவு

மோட்டார் கிளினிக்

வைக்கும் கார் என்று உங்கள் நண்பர் சொல்வதில் உண்மையில்லை.

பரணி, கோவை.

மோட்டார் கிளினிக்

எங்கள் வீட்டில் புதிதாக கார் வாங்கலாம் என முடிவெடுத்து இருக்கிறோம். எங்களுடைய பட்ஜெட் 6-7 லட்சம். நகரம், நெடுஞ்சாலை என இரண்டுவிதமான சாலைகளிலும் பயணிக்க சிறந்த, மைலேஜ் அதிகம் தருகிற, பெர்ஃபாமென்ஸிலும் குறைவில்லாத கார் வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. எங்கு பார்த்தாலும் ஸ்விஃப்ட் தென்படுவதால், அதன் மேல் அதிக விருப்பம் இல்லை. ஃபோக்ஸ்வாகன் போலோ பிடித்திருக்கிறது. ஆனால், இதன் மைலேஜ் குறைவாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நிஸான் சன்னி எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய பெற்றோர் பின் சீட்டில் உட்கார்ந்து பயணிக்க வசதியாக இருக்கும். உங்கள் கருத்து என்ன?

நிஸான் சன்னி நல்ல கார். ஆனால், நீங்கள் பெட்ரோல் காரா அல்லது டீசல் காரா என்று குறிப்பிடவில்லை. நெடுஞ்சாலையில் அதிகம் பயணிப்பீர்கள் என்றால் டீசல் வாங்கலாம். ஆனால், நிஸான் சன்னி டீசல் காரின் விலை சென்னையில் 9.65 லட்சம். உங்கள் பட்ஜெட்டில் அது அடங்காது. பெட்ரோல் கார் என்றாலும், அதன் விலை 7 லட்சத்தில் இருந்துதான் துவங்குகிறது. ஃபோக்ஸ்வாகன் போலோவைப் பொறுத்தவரை அது நகருக்குள் 13.2 கி.மீயும், நெடுஞ்சாலையில் 16.5 கி.மீயும் மைலேஜ் தரும். நெடுஞ்சாலையில் மட்டுமே சன்னியும், போலோவும் மைலேஜ் விஷயத்தில் மாறுபடும். மேலும், போலோ டீசல் காரின் விலையும் 7 லட்ச ரூபாய்க்கும் அதிகம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். கார்களின் மைலேஜ் பற்றித் தெரிந்துகொள்ள 'கார் மேளா’ பகுதியைப் பாருங்கள்.

அனீஷ், காரைக்குடி.

மோட்டார் கிளினிக்

மாருதி ஸ்விஃப்ட் யூஸ்டு கார் வாங்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். இதற்காக பழைய கார் டீலர்கள், செய்தித்தாள் மற்றும் ஆன் லைனில் ஸ்விஃப்ட் எங்கெல்லாம் கிடைக்கிறது? எவ்வளவு விலை எனப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு 50,000 முதல் 1 லட்சம் வரை விலை வித்தியாசப்படுகிறது. இதனால், எப்படிப் பேரம் பேசுவது எனப் புரியவில்லை. காரணம், உண்மையான விலையை எதை வைத்துக் கணக்கிடுவது?

பொதுவாக 50,000 கி.மீ-க்கு மேல் ஓடிய கார்கள் என்றால், அது 2 ஆண்டு மாடல்தான் என்றாலும் மார்க்கெட்டில் குறைவான விலைக்குத்தான் கேட்க வேண்டும். சரியான இடைவெளிகளில் கார் சர்வீஸ் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சர்வீஸ் ஹிஸ்டரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பெரிய விபத்து அல்லது பெரிய மெக்கானிக்கல் மற்றும் இன்ஜினீயரிங் பிரச்னைகளில் சிக்கிய காரா என்பதை சர்வீஸ் ஹிஸ்டரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் வாங்கும் காரின் டயர் எந்த நிலையில் இருக்கிறது, ஏ.சி சரியாக வேலை செய்கிறதா? சஸ்பென்ஷன் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பழைய காரை வாங்கும்போது மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்துப் பார்த்தாலே, எந்த விஷயத்தில் விலையைக் குறைத்துப் பேசலாம் என்பது புரிந்துவிடும்.

மோட்டார் கிளினிக்

விவேக், சென்னை.

மோட்டார் கிளினிக்

நான் 125 சிசி பைக் வாங்கலாம் என இருக்கிறேன். ஹோண்டா சிபி ஷைன், பஜாஜ் டிஸ்கவர் 125 இரண்டு பைக்கில் எந்த பைக்கை வாங்கலாம். மைலேஜ் அதிகம் கிடைக்க வேண்டும். அதே சமயம், பெர்ஃபாமென்ஸிலும் குறைவில்லாத பைக்காக இருக்க வேண்டும். எந்த பைக் வாங்கலாம்?

ஸ்டைல் மற்றும் பெர்ஃபாமென்ஸுடன் ஒப்பிடும்போது, ஹோண்டா சிபி ஷைனைவிட பஜாஜ் டிஸ்கவர் 125 எஸ்டி சிறந்த பைக். ஸ்போர்ட்டியாகவும், அதே சமயம் சௌகரியமாக உட்கார்ந்து ஓட்டுவதற்கும் ஏற்ற பைக்காக இருக்கிறது. சிபி ஷைனைப் பொறுத்தவரை ஹோண்டாவின் இன்ஜின் என்பதால், நம்பகத்தன்மை பற்றிய பிரச்னை இல்லை. ஆனால், டிஸ்கவர் அளவுக்கு இதன் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இல்லை. மைலேஜைப் பொறுத்தவரை டிஸ்கவர் 125எஸ்டி, லிட்டருக்கு 50 கி.மீ வரை மைலேஜ் தரும். ஹோண்டா சிபி ஷைன், லிட்டருக்கு 55 கி.மீ வரை மைலேஜ் தரும்.