Published:Updated:

ஹோண்டா ஆக்டிவா - ரீடர்ஸ் ரிவியூ

என் கணவரின் ஆசைப் பரிசு!

ஹோண்டா ஆக்டிவா - ரீடர்ஸ் ரிவியூ

என் கணவரின் ஆசைப் பரிசு!

Published:Updated:

நா.சிபிச்சக்கரவர்த்தி   த.ரூபேந்தர் 

 ##~##

ரு நாள் இல்லை - ஒரு நாள்... நானும் சொந்தமாக ஸ்கூட்டர் வாங்கணும் என மனசுக்குள் ஒரு தீராத ஆசை இருந்தது. எனது ஆசைக்குப் பரிசாக, என் கணவர் சந்துரு வாங்கிக் கொடுத்ததுதான் இந்த ஹோண்டா ஆக்டிவா. ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஓசி வாங்கி ஏற்கெனவே ஓட்டி இருக்கிறேன் என்றாலும், இந்த ஸ்கூட்டர் வாங்கின பிறகுதான் இன்னும் நன்றாக ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக்கொண்டேன்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷோ ரூம் அனுபவம்

சென்னை அசோக் நகரில் உள்ள கேயுஎன் ஹோண்டா ஷோ ரூமில் போய் ஆக்டிவாவைப் பார்த்தோம். அங்கே எங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்தது. 'எந்த பிராப்ளம்னாலும் உடனே கொண்டு வாங்க மேடம், சரி செஞ்சுடலாம்’னு இனிக்க இனிக்க சொன்னாங்க.

டெஸ்ட் டிரைவ் பண்ணும் பொழுதும் ஸ்கூட்டர் நன்றாகத் தான் இருந்தது. நிறைய கலர் ஆப்ஷன்ஸ் இருந்தது. நான் ஸ்கூட்டரைத் தட்டு தட்டுன்னு தட்டுவேன் என்ற காரணத்தாலும், அழுக்கும் வெளியே தெரியக் கூடாதுன்னு கறுப்பு கலர் தேர்ந்தெடுத்தேன். ஸ்கூட்டர் வாங்கிய பின்னரும் ஒரு தடவைக்கு மூன்று முறை எல்லாமே சரியாக இருக்கானு செக் பண்ணித்தான் வாங்கினேன்.

ஹோண்டா ஆக்டிவா - ரீடர்ஸ் ரிவியூ

ஆனாலும் மூன்று நாள் முடிவதற்குள் சில பிரச்னைகள் வந்தது. ஸ்கூட்டரை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றபோது, அங்கே கூட்டம் முட்டி மோதிக்கொண்டு இருந்தது. திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசனம் செய்வதுபோல காத்திருந்து, சர்வீஸ் அட்வைஸரை அணுகியபோது, அவர் சிடுசிடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு வேண்டாவெறுப்பாகத்தான் பேசினார். ஸ்கூட்டரோட பல பாகங்கள்ல சத்தம் வருதுன்னு சொன்னேன். முக்கியமாக சைடு மிரர் 'கடகட’னு ஆட ஆரம்பிச்சதைச் சொன்னேன். அது எங்க தப்புனு சொல்லிட்டார். ஆனா, அதுக்கப்புறம் இதுவரைக்கும் எந்த பிராப்ளமும் வரலை.

ஏன் ஹோண்டா ஆக்டிவா?

முதலில் ஹோண்டா ஏவியேட்டர் (AVIATOR) அல்லது ஆக்டிவா வாங்க வேண்டும் என்பதுதான் திட்டம்.  மைலேஜ், டிரைவிங் ஸ்மூத்னஸ், லாங் லைஃப் மற்றும் என் எடைக்கும், உயரத்திற்கும் ஆக்டிவாதான் சரியான சாய்ஸ்னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. அதுவும் இல்லாமல், ஆக்டிவா மெட்டாலிக் பாடி. ஏதாவது அடிபட்டாலும் சேதம் கம்மியாக இருக்கும்னுதான் ஆக்டிவா செலக்ட் செய்தோம். முக்கியமா, ஹோண்டா கம்பெனி மேல் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது... அதுவும் ஒரு காரணம்.

ஹோண்டா ஆக்டிவா - ரீடர்ஸ் ரிவியூ

பெர்ஃபாமென்ஸ், மைலேஜ்

ஸ்மூத்தா இருக்கு! ஸ்கூட்டர் ஓட்டும்போது 'முன்தினம் பார்த்தேனே... பார்த்ததும் தோற்றேனே’னு சும்மா ஜாலியா இருக்கு. என் கணவரை வைத்து ஓட்டும்போதுகூட சூப்பரா இருக்கு. ரொம்ப லாங் போனால்கூட அலுப்பு தெரியவில்லை. வாங்கின புதிதில் 30 கி.மீ வரைதான் மைலேஜ் தந்தது. இப்ப ஓரளவுக்குப் பரவாயில்லை. 40 கி.மீ தருது. 70 கி.மீ ஸ்பீடில் டபுள்ஸ் அடிச்சாக்கூட எந்தச் சத்தமோ குலுங்கலோ இல்லை. ஆனால் ரொம்ப பிரமாதம்னு சொல்ல முடியாது. பட் ஓகே!

பிடிக்காதது

ஒவ்வொரு முறையும் பெட்ரோல் போடும்போதும் சீட்டைத் திறந்து மூட வேண்டியிருப்பது கொஞ்சம் சிரமமா இருக்கு. அதுவும் 5 லிட்டர்தான் டேங்க் கொள்ளளவு.

ஸ்கூட்டர் பார்க்கக் கொஞ்சம் கெத்தாக இல்லை. அதே போல, இந்த ஸ்கூட்டர்ல எல்லாமே பழைய ஸ்டைலில் இருக்கு. டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பின்பும்... இதில் ஸ்பீடோ, ஓடோ மீட்டர் எல்லாம் அதே ஓல்டு ஸ்டைலில் அனலாக் மீட்டர்களாகத்தான் இருக்கு. அதை மாற்றி அமைத்து இருக்கலாம். கால் வைக்கும் இடம் சௌகரியமாக இல்லை.

ஹோண்டா ஆக்டிவா - ரீடர்ஸ் ரிவியூ

பிடித்தது

இரண்டு பேர் தாராளமாகப் பயணிக்கும் அளவுக்கு இட வசதி இருக்கு. பெர்ஃபாமென்ஸ் நல்லா இருக்கு. அதேபோல் எடையும் பேலன்ஸ் பண்ணக்கூடிய அளவில்தான் இருக்கு. பிரேக், டயர் எல்லாம் டபுள் ஓகே. ஸ்டார்ட்டிங் டிரபிள்... மேடுகளில் ஏறும்போது பெர்ஃபாமென்ஸ் நல்லா இருக்கு.