Published:Updated:

ஆடி ஏ4 (டீசல்) - ரீடர்ஸ் ரிவியூ

ஆடி ஏ4 (டீசல்) - ரீடர்ஸ் ரிவியூ

ஆடி ஏ4 (டீசல்) - ரீடர்ஸ் ரிவியூ

ஆடி ஏ4 (டீசல்) - ரீடர்ஸ் ரிவியூ

Published:Updated:
ஆடி ஏ4 (டீசல்)  - ரீடர்ஸ் ரிவியூ

ங்கள் குடும்பம் பெரிய விவசாயக் குடும்பம். கம்பத்தில் தோட்டமும், கேரளாவில் ஏலக்காய் எஸ்டேட்டும் இருக்கிறது. அங்கே சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளும் வயதிலேயே, நான் கார் ஓட்ட ஆசைப்பட்டேன். எந்த காரைப் பார்த்தாலும் அந்தச் சின்ன வயதிலேயே அந்த காரின் பெயர், கம்பெனி பெயர் போன்ற விவரங்களைச் சொல்லிவிடுவேன். சின்ன வயதிலேயே கார் ஓட்டப் பழகிவிட்டாலும் கல்லூரிக்குச் சென்ற பிறகுதான், எனக்கு என கார் வாங்கினேன். என்னுடைய முதல் வாகனம் மாருதி ஜிப்ஸி. 

 ##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்பு மாருதி 800, ஃபோர்டு ஃப்யூஷன், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா எனத் தாவி, தற்போது ஆடியில் வந்து நிற்கிறேன்.

ஏன் ஆடி?

ஆடியை மற்ற கார்களுடன் ஒப்பிட முடியாது. காரணம், இது சொகுசு காரா என்று கேட்டால்... ஆம், சொகுசு கார்தான். ஸ்போர்ட்டியான காரா என்று கேட்டால்... ஆம், ஸ்போர்ட்டியான கார்தான் என்று சொல்வேன். பிராண்ட் இமேஜ், லக்ஸ¨ரி, பெர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் அனுபவம் என எந்த ஏரியாவாக இருந்தாலும் கில்லியாக இருப்பதுதான் ஆடியின் பலம்.

ஷோரூம் அனுபவம்

பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகிய கார்கள் சில விஷயங்களில் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவே, ஆடி வாங்க முடிவெடுத்து கோவையில் உள்ள ஆடி ஷோ ரூமுக்குச் சென்றேன். அங்கிருந்த சேல்ஸ் மேனேஜர்களான சஞ்சய் மற்றும் வைஷ்ணவி ஆகிய இருவரும், எனக்கு ஆடி மீது இருந்த மதிப்பை மேலும் அதிகமாக்கினார்கள்.

ஆடி ஏ4 (டீசல்)  - ரீடர்ஸ் ரிவியூ

டெஸ்ட் டிரைவ் காரை அவர்கள் பராமரித்து வைத்திருந்த விதமே என்னை மயக்கியது. டெஸ்ட் டிரைவ் முடிந்ததும், அப்படியே இந்த காரை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடலாமா எனத் தோன்றும் அளவுக்கு இருந்தது ஆடியின் டெஸ்ட் டிரைவ் அனுபவம்.

ஆடியை புக் செய்த பிறகு மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டுமே என்ற கவலை. ஆனால், எனக்குப் பிடித்தமான வெள்ளை வண்ண காருக்காகக் காத்திருக்கச் சம்மதித்தேன். புத்தம் புதிய ஆடி ஏ4, என் வீடு வந்து சேர்ந்த தினம் என்னுடைய எட்டாவது திருமண தினம். ஆடியில் முதல் பயணமாக, மனைவியுடன் கோவிலுக்குச் சென்றேன்.

ஆடியில் பயணம் செய்வது ஒரு சுகமான அனுபவம். அது, நீண்ட தூரப் பயணமாக இருந்தாலும், வளைத்து நெளிந்து மேலேறும் மலைப் பாதையானாலும் கச்சிதமாக இருக்கிறது ஆடி ஏ4. சஸ்பென்ஷன் அவ்வளவு ஸ்மூத். மிதக்கும் கப்பலில் பயணம் செய்வதுபோன்ற அனுபவம்.

ஆடி ஏ4 (டீசல்)  - ரீடர்ஸ் ரிவியூ

பிடித்தது

இதே பட்ஜெட்டில், பெர்ஃபாமென்ஸில், வசதியில் பிஎம்டபிள்யூ - பென்ஸ் ஆகிய கார்கள் இருந்தாலும், ஆடியின் ஸ்டீயரிங் வீல் உடலின் எந்த பாகத்திலும் படாமல் தனியாக இருப்பது எனக்குப் பிடிக்கும். அதேபோல், இன்ஜின் - அதிக சத்தம் போடாமல் அமைதியாக இருக்கும். மேலும், இதில் இருக்கும் 8 ஸ்பீடு மல்டிட்ரானிக்ஸ் கியர்பாக்ஸ் ரொம்பவே ஸ்மூத். எந்த ஜெர்க்கும் இல்லாமல் கியர் மாற்ற முடியும். 'டே டைம் ரன்னிங் லைட்’ இந்த காருக்கு அத்தனை அழகு. சாலையில் செல்வோரைத் திரும்பிப் பார்க்கவைக்கும் வசீகரம் இந்த லைட்டுக்கு இருக்கிறது. பிறகு, காரில் அமரும் அனைவருக்குமே தாராளமான இட வசதி இருப்பது பெரிய ப்ளஸ். காரின் இன்டீரியர், லெதர் சீட், டேஷ் போர்டு போன்றவை உறுத்தாமல் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கின்றன. ஆடியின் சிறப்பம்சங்களின் பட்டியல் பெரிது. இவற்றைப் பயன்படுத்த எளிமையாகவும், குழப்பம் விளைவிக்காமலும் இருப்பது ஆடியின் பலம். இதன் தாராளமான டிக்கி, வெளியூர் பயணத்துக்கு ஏற்ற வகையில் இருக்கிறது.

ஆடி ஏ4 (டீசல்)  - ரீடர்ஸ் ரிவியூ

பிடிக்காதது

மிகவும் ரசித்து, பிடித்து வாங்கிய கார்தான். ஆனாலும் இதில் உள்ள மனக் குறைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. முக்கியமாக, இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் நம் நாட்டுக்கு ஏற்ற வகையில் இல்லை. ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டால் பம்மிப் பதுங்கித்தான் செல்ல வேண்டி இருக்கிறது.

அதேபோல், பேடில் ஷிஃப்ட் வசதி ஸ்டீயரிங்கில் இருந்தால், இன்னும் வசதியாக இருக்கும். இவ்வளவு பட்ஜெட் கொண்ட காரில் ஜிபிஎஸ் வசதி இல்லை. மேலும், இதே செக்மென்ட்டில் இருக்கும் பிஎம்டபிள்யூ காரின் சக்தி 184 bhp. பென்ஸ் காரில் 170 bhp. ஆடியில் இருக்கும் 2 லிட்டர் இன்ஜின் அளிப்பது வெறும் 141 bhp சக்திதான். இது, எனக்குக் குறையாகத் தெரிகிறது. ஆனால், பென்ஸ் காரின் சொகுசும், பிஎம்டபிள்யூ காரின் ஸ்போர்ட்டி ஃபீலும் ஆடியில் ஒருங்கே கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஆடி ஏ4 (டீசல்)  - ரீடர்ஸ் ரிவியூ

சர்வீஸ்

இன்னும் சர்வீஸுக்கு விடவில்லை. முதல் சர்வீஸுக்கு 15,000 ரூபாய்தான் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள். தற்போது சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால், கோவை அல்லது சென்னைக்குத் தான் செல்ல வேண்டும். விரைவில் மதுரையில் ஷோ-ரூம் திறக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். மதுரைக்கு சர்வீஸ் சென்டர் வந்து விட்டால், எனக்கு ஈஸியாகிவிடும்.

ஆடி ஏ4 (டீசல்)  - ரீடர்ஸ் ரிவியூ