Published:Updated:

பேஸிக் பிஎம்டபிள்யூ!

பேஸிக் பிஎம்டபிள்யூ!

பேஸிக் பிஎம்டபிள்யூ!

பேஸிக் பிஎம்டபிள்யூ!

Published:Updated:
பேஸிக் பிஎம்டபிள்யூ!
 ##~##

ம் நாட்டின் கார் சந்தை, மிக இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. கார்களின் விற்பனை மந்தமாக இருந்தாலும், புது கார்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கார் நிறுவனங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே இருக்கும் செக்மென்ட்டில் ஒரு காரை அறிமுகப்படுத்தி போட்டியைச் சமாளிப்பதைவிட, புதிதாக ஒரு செக்மென்ட்டை உருவாக்கி, அதில் ராஜாவாக இருக்கவே விரும்புகின்றன பல கார் நிறுவனங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இதற்கு சிறந்த உதாரணம், மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ். 'சொகுசு ஹேட்ச்பேக்’ என்ற ஒரு செக்மென்ட்டை உருவாக்கிவிட்டது பென்ஸ்.

இதோடு போட்டிப் போட, வால்வோ, 'வி-40 க்ராஸ் கன்ட்ரி’ எனும் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதேபோல, பிஎம்டபிள்யூ, விரைவில் 1 சீரிஸ் காரை அறிமுகப்படுத்த இருக்கிறது.

எப்படி இருக்கிறது பிஎம்டபிள்யூ 1 சீரீஸ் ஹேட்ச்பேக்?

பிஎம்டபிள்யூவின் மற்ற கார்களின் வடிவமைப்பில் இருக்கும் கிக், 1 சீரிஸ் ஹேட்ச்பேக்கில் இல்லை. பென்ஸ் ஏ-கிளாஸின் வடிவமைப்பில் இருக்கும் 'ஸ்மார்ட் லுக்,’ வால்வோ வி40 க்ராஸ் கன்ட்ரி காரின் விநோதமான ஸ்டைலிங் போன்ற எந்த தனித்துவமான விஷயங்களும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸில் இல்லை. இதன் பின் பக்க டிசைனிலும் எந்த தனித்துவமும் இல்லை. அதனால், பார்க்க மிகச் சாதாரணமாகத் தோற்றமளிக்கிறது பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்.

பேஸிக் பிஎம்டபிள்யூ!

உள்பக்க இட வசதியிலும் 1 சீரிஸ் சுமார்தான். குறிப்பாக, பின் பக்க இருக்கைகளில் கால் வைக்க இடம் குறைவு. 1 சீரிஸ் ரியர்-வீல் டிரைவ் கார் என்பதால், ப்ரொபெல்லர் ஷாஃப்ட், டிரான்ஸ்மிஷன் டனல் வழியாக காரின் நடுவில்தான் சென்றாக வேண்டும். அதனால், காரின் உள்பகுதியில் இது கொஞ்சம் இடத்தை அடைக்கிறது. எனவே, 1 சீரிஸ் பின்னிருக்கையில் மூன்று நபர்கள் அமர்ந்து பயணிப்பது சற்று சிரமம். டிக்கியில் 360 லிட்டர் கொள்ளளவு உண்டு.

முன் பக்க கேபின் படு சூப்பராக இருக்கிறது. பிஎம்டபிள்யூ கார்கள் ஓட்டுதலுக்குச் சிறப்பு பெற்றவை என்பதால், எப்போதும் மற்ற இருக்கைகளைவிட ஓட்டுநர் இருக்கைதான் சிறப்பாக வடிமைக்கப்பட்டு இருக்கும். 1 சீரிஸும் இதற்கு விதிவிலக்கல்ல. 1 சீரிஸின் ஓட்டுநர் இருக்கை எல்லோருக்கும் பிடிக்கும். சற்று பெரியதாக இருக்கிறதோ என எண்ண வைக்கும் ஸ்டீயரிங்கை, நம் வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளலாம். பிஎம்டபிள்யூ கார்களில் எதிர்பார்ப்பது போலவே, சென்டர் கன்ஸோல் ஓட்டுநரை நோக்கி இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் உள்ள டயல்கள் படிப்பதற்குத் தெளிவாக உள்ளன. ஐ-டிரைவ் கன்ட்ரோலரும் பயன்படுத்த எளிதாக இருக்கிறது. ஆனால், மெர்சிடீஸ் பென்ஸ் ஏ-கிளாஸின் உள்பக்கத்தில் காணப்படுவதைப் போல எந்தவிதமான 'ஸ்டைல் ஸ்டேட்மென்’டும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸில் இல்லை.

பேஸிக் பிஎம்டபிள்யூ!
பேஸிக் பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், நம் நாட்டுக்கு 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினைக் கொண்டுவர இருக்கிறது. இது 3 மூன்று விதமான டியூனிங்கில் வருகிறது. 143 bhp சக்தி கொண்ட 118d மாடல்தான் நம் நாட்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், நாம் ஓட்டியது 181 bhp சக்தியை அளிக்கும் 120பீ மாடல். இதே இன்ஜின்தான் 3 சீரீஸ் மற்றும் 5 சீரீஸ் கார்களில் பயன்படுத்தப்படுகிறது. 1 சீரிஸ் ஹேட்ச்பேக் எடையும் குறைவு என்பதால், ஏற்கெனவே சிறப்பாக பேலன்ஸ் செய்யப்பட்டு இருக்கும் சேஸியுடன் குறைந்த எடையும் இருப்பதால், சக்தியை நன்றாக உணர முடியும்.

பேஸிக் பிஎம்டபிள்யூ!

1-சீரிஸில் இருப்பது சூப்பர் ஸ்முத் ZF 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ். மிட்-ரேஞ்சில் சிறப்பாக வெளிப்படும் சக்தியை, மிக அருமையாகக் கையாள்கிறது இந்த கியர் பாக்ஸ். நன்றாக வளைந்து செல்லும் சாலைகளில், மேலும் மேலும் நம்மை ஓட்ட தூண்டிக்கொண்டே இருக்கிறது இன்ஜினின் சக்தி. ஆனால், 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் என்பதால், 'கம்ஃபர்ட்’ மோடில் ஓட்டும்போது அடிக்கடி கியர் மாற்றிக்கொண்டே இருப்பது சற்று கடுப்பேற்றுகிறது.

பேஸிக் பிஎம்டபிள்யூ!

ரியர்-வீல் டிரைவ் என்பதால், வளைவுகளில் திருப்பி ஓட்டுவதற்குச் சிறப்பாக இருக்கிறது. இதன் எலெக்ட்ரோ- மெக்கானிக்கல் ஸ்டீயரிங் மிக அருமை. கொஞ்சம்கூட பிசிறில்லாமல் நாம் சொல்வதைக் கேட்கும் இந்த ஸ்டீயரிங், ஓட்டுதல் அனுபவம் மற்ற பிஎம்டபிள்யூ கார்களைப் போலவே சிறப்பாக இருக்கிறது.

பேஸிக் பிஎம்டபிள்யூ!

சஸ்பென்ஷன், ஸ்போர்ட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சற்று இறுக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், குறைவான வேகங்களில், சின்னச் சின்னப் பள்ளங்களுக்குக்கூட குலுங்குவது போலத் தெரிந்தாலும் வேகம் பிடித்ததும் காரின் ஓட்டுதலும், கையாளுமையும் 'பக்கா’வாகிவிடுகிறது. இதில் இருப்பது ரன் - ப்ளாட் டயர்கள்.

முதல் தீர்ப்பு

பேஸிக் பிஎம்டபிள்யூ!

உள்பக்க இட வசதி மற்றும் ஸ்டைலிங் போன்ற விஷயங்களில் 1-சீரிஸ் ஹேட்ச்பேக் சொதப்பல்தான் என்றாலும், பிஎம்டபிள்யூ கார்களின் டிஎன்ஏ, சூப்பரான ஓட்டுதல் மற்றும் கையாளுமை இந்த காரில் குறிப்பிடத்தக்க அம்சங்கள். எதிர்பார்த்ததுபோல 25 லட்ச ரூபாய்க்கு இது விற்பனைக்கு வந்தால், விலை குறைந்த ஸ்போர்ட்டியான ரியர்-வீல் டிரைவ் கார் இதுதான். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்லோகனான 'டிசைன்டு ஃபார் டிரைவிங் ப்ளெஷர்’ என்ற வாக்கியத்துக்குச் சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது 1 சீரிஸ்!

பேஸிக் பிஎம்டபிள்யூ!