Published:Updated:

காட்டுப் பயல்!

காட்டுப் பயல்!

காட்டுப் பயல்!

காட்டுப் பயல்!

Published:Updated:
காட்டுப் பயல்!
 ##~##

பிஎம்டபிள்யூவின் அங்கமான 'மினி’ நிறுவனத்தின் கார்கள், சிஙிஹி (CBU (Completely Built Unit)  வாக இறக்குமதி செய்யப்பட்டதால், விலை அதிகமாக இருந்துவந்தது. இப்படியே போனால், மினி கார்களுக்கான வரவேற்பு குறைந்துவிடும் என்பதை உணர்ந்த பிஎம்டபிள்யூ, தற்போது சென்னையில் உள்ள தொழிற்சாலையில் மினி கார்களை அசெம்பிள் செய்கிறது. அதில், மினி கூப்பர் கன்ட்ரிமேன் டி கார்தான் முதன்முதலில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கும் கார். இதனால், மினி கூப்பர் கன்ட்ரிமேன் டி காரின் பேஸ் வேரியன்ட்டின் விலை 25.6 லட்ச ருபாயாகக் குறைந்திருக்கிறது. அதனால், இதே செக்மென்ட்டில் இருக்கும் பென்ஸ் ஏ கிளாஸ், வால்வோ வி40 க்ராஸ் கன்ட்ரி, விற்பனைக்கு வர இருக்கும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் போன்ற சொகுசு ஹேட்ச்பேக் கார்களோடு போட்டியிட இருக்கிறது கன்ட்ரிமேன் டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இதன் பலம் என்ன, பலவீனம் என்ன?

'மினி’ என்றாலே எல்லோரும் சின்ன காராகத் தான் இருக்கும் என நினைத்துக்கொள்கின்றனர். அதுதான் இல்லை. கன்ட்ரிமேன், பார்ப்பதற்கு ஹேட்ச்பேக்போல இருந்தாலும், நான்கு மீட்டர்களுக்கு மேல் நீளம்கொண்ட கார். மேலும், கன்ட்ரிமேன்தான் முதன்முதலில் 5 கதவுகள் கொண்டு வெளிவந்த முதல் 'மினி’ கார். எனவே, வடிவமைப்பாளர்கள் பாரம்பரியம் மிக்க 'மினி’ டிசைனை விட்டுக்கொடுக்காமலும், அதே சமயம் பெரிய காராகவும் தெரிவதற்கு நிறையவே முயற்சி செய்திருக்கிறார்கள். உதாரணமாக, எடுப்பாக இருக்கும் காரின் பேனட், ஹெட் லைட்ஸை அலங்கரித்திருக்கும் விதம் எனச் சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால், மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸின் வடிவமைப்பில் இருக்கும் கிக், வால்வோ வி40--யின் விநோதமான, ரசிக்கும்படியான டிசைன், கன்ட்ரிமேன் காரில் இல்லை.

காட்டுப் பயல்!

உள்ளே...

கன்ட்ரிமேன் காரின் அகலம், வழக்கமான மினி ஹேட்ச்பேக்கைவிட 100 மிமீ அதிகம். உயரம் 150 மிமீ அதிகம். இதனால், காரின் உள்ளே நிறைய இடம் இருக்கிறது. உள்ளே அமர்ந்ததும் நம் கண்ணில் முதலில்படுவது, இதன் விநோதமான டேஷ்போர்டுதான். ரொம்பவே ஓவராக உணர்ச்சிவசப்பட்டு வடிவமைத்துவிட்டார்கள் போல. சென்டர் கன்ஸோலில் இருக்கும் ஸ்பீடோ மீட்டர், நீங்கள் அதைப் பார்க்கக் கூடாது என நினைத்தாலும் உங்கள் கண் அங்குதான் செல்லும். அவ்வளவு பெரிதாக வடிவமைத்துள்ளார்கள். காரின் கேபினில் சின்னச் சின்ன அம்சங்கள் கண்ணைப் பறிக்கின்றன. வித்தியாசமான ஹேண்ட் பிரேக் லீவர், சுவிட்சுகள் என நிறைய சொல்லலாம்.

காட்டுப் பயல்!

ஆனால், இவ்வளவு இன்ட்ரெஸ்டிங்காக இருக்கும் கேபினின் 'எர்கானமிக்ஸ்’ சுமார்தான். ஏதாவது பட்டன்களைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. வார்னிங் லைட்டுகளில் சில ஸ்பீடோ மீட்டரில் உள்ளன. சில டேக்கோ மீட்டரில் உள்ளன. இது போன்ற கேபின் மற்ற 'மினி’ கார்களில் இருந்தாலும், வழக்கமான டேஷ்போர்டையே பார்த்துப் பழகிய நமக்கு இந்த கார் பழக  கொஞ்ச நாட்கள் எடுக்கும்.

உள்பக்க இட வசதியில் எந்தக் குறையும் இல்லை. இருக்கையும் ஓட்டுவதற்கேற்ப சரியான உயரத்தில் உள்ளது. பின் பக்கம் இரண்டு பெரியவர்கள் உட்கார்ந்து பயணிக்க தாராளமான இட வசதியும், கால் வைக்க வசதியும் உள்ளது. 40:20:40 அமைப்பில் உள்ள பின்னிருக்கையில், மூன்று பேர் அதிக நேரம் அமர்ந்து பயணிப்பது சிரமமாக இருக்கும். மற்ற ஹேட்ச்பேக் கார்களுடன் ஒப்பிடும்போது, கன்ட்ரிமேன் காரின் டிக்கி அளவு 350 லிட்டர். மேலும், பின்னிருக்கையை மடித்துக் கொள்ளலாம் என்பதால், நிறைய பொருட்களைக் கொண்டு செல்வது சுலபம்.

காட்டுப் பயல்!

கன்ட்ரிமேன் தரும் வசதிகளையும் குறை சொல்ல முடியாது. கிளைமேட் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்டர், சன் ரூஃப், ப்ளூடூத், ஹார்மன் கார்டொன் ஆடியோ சிஸ்டம், பிஎம்டபிள்யூ ஐ டிரைவைப் போன்ற ஒரு இன்டர்ஃபேஸ் என நிறையச் சொல்லலாம். ஆனால், சில அத்தியாவசிய வசதிகளான, இருக்கைகளுக்கான ஆட்டோமேட்டிக் அட்ஜஸ்ட்மென்ட், ஸ்டீயரிங் ஆட்டோமேட்டிக் அட்ஜஸ்ட்மென்ட், பின் பக்க ஏ.சி வென்ட், சாட்டிலைட் நேவிகேஷன் போன்றவற்றைக் காணவில்லை.

இன்ஜின்

மினி கூப்பர் கன்ட்ரிமேன் டி (டி என்றால் டீசல்) காரில் இருப்பது 4 சிலிண்டர், 1995 சிசி காமன் ரெயில் டீசல் இன்ஜின். இதன் சக்தி வெறும் 110 bhpதான் என்றாலும், இதனுடைய டார்க் 27.5 kgm. அதனால், குறைந்த ஆர்பிஎம்-ல் இன்ஜினின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.

விளைவு, ஆக்ஸிலரேட்டரை லேசாக அழுத்தியதுமே கார் மெள்ளச் சீறுவது டிராஃபிக்கில் சிரமத்தைக் கொடுக்கலாம். மிட்-ரேஞ்ச் செயல்பாடும் நன்றாகவே உள்ளது. இதன் மொத்த எடையான 1,310 கிலோவையும் இந்த இன்ஜின் நன்றாகவே இழுக்கிறது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 180 கி.மீ. இதில் இருக்கும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் சமயத்தில் கடுப்பேற்றினாலும், 0 - 100 கி.மீ வேகத்தை இது ஜஸ்ட் 11.8 விநாடிகளில் அடைவதில் கியர்பாக்ஸுக்குப் பெரும் பங்கு உண்டு.

காட்டுப் பயல்!

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

எல்லா 'மினி’ கார்களும் எப்படி ஓட்டுதலில் நமக்கு ஜாலியான அனுபவத்தைத் தருகிறதோ, அதேபோலத்தான் கன்ட்ரிமேனும். ஸ்டீயரிங் மிகச் சரியான முறையில் இயங்குகிறது. இறுக்கமாக அமைக்கப்பட்ட சஸ்பென்ஷன், காருக்கு நல்ல பாடி கன்ட்ரோலைத் தருகிறது. இன்ஜினும் நன்றாகச் செயல்படுவதால், நகரச் சாலைகளில்கூட ஜாலியாக ஓட்டலாம்.

காட்டுப் பயல்!

பல நல்ல விஷயங்களைக்கொண்ட மினி கூப்பர் கன்ட்ரிமேனுக்கு, திருஷ்டியாக அமைந்திருப்பது ஓட்டுதல் அனுபவம்.

ஷார்ப்பான மேடு - பள்ளங்களில் ரொம்பவே குலுங்குகிறது. சஸ்பென்ஷனும் அமைதியாக இயங்காமல், அவ்வப்போது சத்தம் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. காரணம், காரில் இருக்கும் 18 இஞ்ச் ரன் - ஃப்ளாட் டயர்களும்தான். சஸ்பென்ஷனும் பள்ளங்களைச் சுமாராகத்தான் சமாளிக்கிறது. வேகம் பிடிக்க பிடிக்க... கார் நன்றாக ஓடினாலும் பெரிய பள்ளங்களில் கார் சற்று தடுமாறவே செய்கிறது. இதன் போட்டி கார்களில் இந்த அளவுக்குப் பிரச்னைகள் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

மைலேஜ்

இன்ஜினின் குறைந்த ஆர்பிஎம் செயல்பாடு நன்றாக இருப்பதால், அடிக்கடி ஆக்ஸிலரேட்டரை ஏறி மிதித்து வேகம் பிடிக்கத் தேவையில்லை. இதனால், காரின் மைலேஜ் நன்றாக இருக்கிறது. நகரச் சாலைகளில் லிட்டருக்கு 10.5 கி.மீ செல்லும் கன்ட்ரிமேன், நெடுஞ்சாலையில் நல்ல மைலேஜ் தருகிறது. ரொம்பவும் விரட்டாமல் ஓட்டினால், 47 லிட்டர் கொண்ட ஃபுல் டேங்கில் 700 கி.மீ வரை ஓட்ட முடியும்.

காட்டுப் பயல்!

மினி கூப்பர் கன்ட்ரிமேன் காரின் மிகப் பெரிய ப்ளஸ், இதன் இட வசதியும் ஸ்டைலான உள்பக்க டிசைன் மற்றும் இன்ஜினும் தான். ஆனால், இந்த ப்ளஸ்களுக்காக இதன் பெரிய மைனஸ் ஆன ஓட்டுதலையும், எர்கானமிக்ஸையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சரி, மற்ற சொகுசு ஹேட்ச்பேக் கார்களவிட இட வசதி தாராளம்தான், அழகாகத்தான் உள்ளது. ஆனால், இதே 30 லட்ச ரூபாய்க்குப் போட்டியாளர்கள் தரும் கார்கள் காசுக்கேற்ற மதிப்பை அளிக்கின்றனவே!

காட்டுப் பயல்!