Published:Updated:

வெற்றி பெறுமா கோ?

வெற்றி பெறுமா கோ?

வெற்றி பெறுமா கோ?

வெற்றி பெறுமா கோ?

Published:Updated:
வெற்றி பெறுமா கோ?
 ##~##

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பில் இருந்து நிறுத்தப்பட்ட டட்சன் பிராண்டுக்கு உயிர் கொடுத்திருக்கிறது நிஸான். 'கோ’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் டட்சனின் முதல் கார், உலக கார் என்று சொல்லப்பட்டாலும் முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களை மனதில்கொண்டே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 2016-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 சதவிகித மார்க்கெட் ஷேரைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் நிஸானின் திட்டம். அதனால், அது களமிறக்க இருக்கும் அத்தனை கார்களும் இந்திய வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவே தயாரிக்கப்பட இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 டட்சன் கோ, 2014-ம் ஆண்டு துவக்கத்தில் அதாவது, பிப்ரவரி மாதவாக்கில் விற்பனைக்கு வரும். '4 லட்ச ரூபாய்க்குள் இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வருவோம்’ என அறிவித்திருக்கிறார் ரெனோ - நிஸான் தலைவர் கார்லோஸ் கோன். இந்த காரின் பேஸிக் வேரியன்ட் 3 லட்ச ரூபாயில் இருந்து ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்டைல்

சின்ன கார், ஆல்ட்டோவுடன் போட்டி போடப் போகும் 3 லட்ச ரூபாய் கார் என காரைப் பார்த்துச் சொல்ல முடியாதபடி வடிவமைத்திருக்கிறது நிஸான். விலை குறைவான கார் போல இல்லாமல், முழுமையான காராக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அறிமுக விழா அன்றே உலகம் முழுவதும் பாராட்டுக்களை வாங்கிவிட்டது டட்சன் கோ. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நிஸான் மைக்ராவைவிட மாடர்னாக இருக்கிறது டட்சன் கோ.

நீள, அகல அளவுகளில் டட்சன் கோ, போட்டி கார்களான ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான் கார்களை விடப் பெரியது. ஹூண்டாய் இயான் 3495 மிமீ நீளமும், ஆல்ட்டோ 3395 மிமீ நீளமும் கொண்டுள்ளன. டட்சன் கோ 3785 மிமீ நீளம்கொண்ட காராக இருக்கிறது. அதேபோல், அகலத்தில் ஆல்ட்டோவை விட 145 மிமீ அதிகமாகவும், இயானைவிட 85 மிமீ அகலமாகவும் இருப்பதால், காருக்குள் இட வசதி அதிகமாக இருக்கிறது.

வெற்றி பெறுமா கோ?

காரின் முன் பக்கம், எந்த நேரமும் கல்யாண விருந்து சாப்பிட்டவரைப் போலவே உப்பலாக இருக்கிறது. அறுகோண வடிவ க்ரில், 'வி’ வடிவ பானெட், நீளமான ஹெட்லைட்ஸ் ஆகியவை, காருக்கு ஒரு புதிய தோற்றத்தைத் தருகின்றன. காரின் பக்கவாட்டு வடிவமைப்பும், கதவுக் கண்ணாடிகளின் டிசைனும் பார்ப்பதற்கு ஸ்டைலாகவே இருக்கின்றன. பின் பக்க டிசைனைப் பொறுத்தவரை சீட்டுக் கட்டில் இருந்து வெளியே வந்த ஒரு சீட்டைப் போல டெயில் லைட் மட்டும் வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், டட்சன் கோ காரில் பாடி கலர் மிரர்கள் இல்லை.

ஆனால், டயர் விஷயத்தில் ரொம்பவும் சின்ன கார் போல டட்சனை வடிவமைத்திருக்கிறது நிஸான். ஆல்ட்டோ மற்றும் இயானில் 12 இன்ச் டயர்கள்தான் இருக்கின்றன. டட்சனில் 13 இன்ச் டயர் என்று சொன்னாலும், பெரிய வீல் ஆர்ச்சுடன் பெரிய கார் தோற்றத்தில் இருக்கும் இந்த காருக்கு 15 இன்ச் டயர்கள் இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

பார்ப்பதற்கு மாடர்னாக இருக்கிறது என்பதற்காக, பாகங்களின் தரமும் சூப்பராக இருக்கும் எனக் கற்பனை செய்ய முடியாது. ரெனோ - நிஸான் எவ்வளவு 'சிக்கன’ கம்பெனி என்பது எவாலியா, டஸ்ட்டர் விஷயத்தில் பார்த்திருக்கிறோம். அந்த வகையில், கதவு கைப்பிடிகளின் தரம் ரொம்பவும் சுமாராக இருப்பதோடு, வெளியே கையை நீட்டித்தான் ரியர் வியூ கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அதேபோல், விண்ட் ஸ்கிரீனைச் சுத்தப்படுத்த ஒற்றை வைப்பர் மட்டுமே!

உள்ளே

வெளியில் இருந்து பார்த்ததுமே, உள்ளே எப்படி வடிவமைத்திருப்பார்கள் என்று காருக்குள் ஏறிவிடும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது டட்சன் கோ. முன்பக்க விண்ட் ஸ்கிரீன் மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகள் பெரிதாக இருப்பதால், காருக்குள் அதிக இட வசதி இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

கோ காரில் ஐந்து பேர் உட்கார்ந்து பயணம் செய்யலாம் என்கிறது நிஸான். ஆனால், 6 பேர் உட்காரும் அளவுக்கு இடம் இருப்பதுதான் ஆச்சரியம். கியர் லீவரை சென்டர் கன்ஸோலோடு இணைத்துவிட்டதால், முன் பக்க இருக்கைகளிலேயே மூன்று பேர் உட்காரும் அளவுக்கு இடம் இருக்கிறது. மேலும், ஆல்ட்டோ மற்றும் இயான் கார்களைவிட முறையே 90 மிமீ, 70 மிமீ வீல்பேஸ் அதிகம். அதனால், காருக்குள் இயல்பாகவே அதிக இடம் இருக்கிறது.  

டட்சன் கோ-வின் இரட்டை வண்ண டேஷ்போர்டு சிம்பிளாகவும், அதே சமயம் மூன்று லட்ச ரூபாய் காருக்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது. எப்போதுமே காருக்குள் உட்கார்ந்தவுடன் போனை எங்கே வைப்பது என்ற குழப்பம் வரும். இந்தக் குழப்பம் சின்ன கார்களில் உட்கார்ந்து ஓட்டும்போது இன்னும் அதிகமாகவே இருக்கும். அதற்கு விடை கொடுத்திருக்கிறது நிஸான்.

ஸ்மார்ட் போன்களை வைக்க வசதியாக சென்டர் கன்சோலில் போன் ஹோல்டர் வைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ ஏ.சி வென்ட்டுகளும், கதவுக் கைப்பிடிகளும் நிஸான் மைக்ராவில் இருப்பதுபோலவே இருக்கின்றன. ஒற்றை அனலாக் ஸ்பீடோ மீட்டர் டயலும், அதன் கீழே சின்ன டிஜிட்டல் டிஸ்ப்ளேவும் கொடுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மீட்டர் ஆல்ட்டோவில் இல்லை. இருக்கைகளில் மட்டும் அல்லாமல் பொருட்கள் வைக்கவும் அதிக இடம் கொடுத்திருக்கிறது நிஸான். முன் பக்கம் பெரிய பாட்டில்களை வைக்கும் அளவுக்கு கப் ஹோல்டர்களில் இடம் இருக்கிறது.  

ஆடியோ சிஸ்டத்தைப் பொறுத்தவரை ஹோண்டாவின் டெக்னிக்கைப் பயன்படுத்தி இருக்கிறது

வெற்றி பெறுமா கோ?

நிஸான். ஆடியோ ப்ளேயர் இல்லை. ஆனால், ஆக்ஸ் போர்ட் மற்றும் பென் டிரைவ் இணைக்கும் வசதி உண்டு. இதன் மூலம் பென் டிரைவில் பாடல்களை ஏற்றிவிட்டுக் கேட்க  வசதியாக வால்யூம் மற்றும் சவுண்ட் அட்ஜஸ்ட்மென்ட் பட்டன்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், வழக்கம்போல முக்கியமான சில விஷயங்களில் சொதப்பியிருக்கிறது நிஸான். க்ளோவ் பாக்ஸுக்கு கோ -வில் இடம் இல்லை. டாடா நானோவிலேயே க்ளோவ் பாக்ஸ் இருக்கும்போது, டட்சன் கோ-வில் இல்லை என்பது பெரிய மைனஸ்தான். மேலும், ஹேண்ட் பிரேக்கும் கறுப்பு வெள்ளைக் காலத்துக்குப் போயிருக்கிறது. சென்டர் கன்ஸோலில் கியர் லீவர் அருகே வைக்கப்பட்டிருக்கும் இந்த ஹேண்ட் பிரேக், பழைய டொயோட்டா குவாலிஸ் காரில் இருந்ததுபோல இருக்கிறது. ஹேண்ட் பிரேக்கைப் போட, லீவரை இழுத்துத் திருப்ப வேண்டும்.

இன்ஜின்

1 லிட்டர் இன்ஜின்தான் டட்சன் கோவில் இடம் பிடிக்கும் என எல்லோரும் எதிர்பார்த்திருக்க, இதில் 1.2

வெற்றி பெறுமா கோ?

லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்படும் என அறிவித்திருக்கிறது நிஸான். இதன்படி நிஸான் மைக்ராவில் இருக்கும் 3 சிலிண்டர் இன்ஜின்தான் இதில் பொருத்தப் படும். ஆனால், அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மைக்ராவைவிட இதன் பவர் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பவர் குறைவாக இருந்தாலும் நகருக்குள் வேகமாகப் பயணிக்க ஏதுவாக, இதன் இன்ஜின் ட்யூன் செய்யப்படும். கியர்களும் உடனுக்குடன் வேகமாக மாற்றும் வகையில் செட்-அப் இருக்கும். மைக்ராவை விட கிட்டத்தட்ட 100 கிலோ எடை குறைவான கார் டட்சன் என்பதால், மைலேஜ் அதிகமாக இருக்கும். டட்சன் கார் பிரிவின் செயல் தலைவர் வின்சென்ட் கோபி, ''கோ லிட்டருக்கு 20 கி.மீ வரை மைலேஜ் தரும் காராக இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார்.

''ஒருவர் வாங்கும் முதல் காரே மோசமான அனுபவத்தைத் தந்துவிட்டால், திரும்ப அந்த கார் நிறுவனம் பக்கம் எந்தக் காலத்துக்கும் வரமாட்டார். அதனால், டட்சன் கார்கள் நீண்ட நாள் பயன்படுத்தக்கூடிய தரமான கார்களாகத் தயாரித்திருக்கிறோம். தொடர்ந்து டட்சன், நிஸான் கார்களையே அவர்களை வாங்க வைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம்'' என்கிறார் வின்சென்ட் கோபி.

நீண்ட காலத்துக்குப் பிறகு மாருதி மற்றும் ஹூண்டாய்க்குச் சரியான போட்டியாக வந்திருக்கிறது டட்சன்!

வெற்றி பெறுமா கோ?

ன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் 10 புதிய கார்களை அறிமுகப்படுத்தி, இந்தியாவில் 10 சதவிகித மார்க்கெட் ஷேரைப் பிடிப்பதுதான் நிஸானின் திட்டம். தற்போது, 1.5 சதவிகித மார்க்கெட் ஷேர் வைத்திருக்கும் நிஸான், 10 சதவிகித மார்க்கெட் ஷேரைப் பிடிக்க வேண்டும் என்றால், ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3 லட்சம் கார்கள்வரை விற்க வேண்டும். ஆனால், கடந்த 2012 ஜூன் முதல் 2013 ஜூன் வரை நிஸான் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 36,639 கார்கள் மட்டுமே! வரப்போகும் 'டட்சன் கோ’ மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் வரை விற்பனை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது நிஸான்.

இது தவிர, டட்சன் பிராண்டில் இருந்து 2014-ம் ஆண்டின் இறுதியில் மாருதி எர்டிகா காருக்குப் போட்டியாக ஏழு பேர் உட்காரும் வசதி கொண்ட சின்ன எம்பிவி காரை டட்சன் கோ பிளாட்ஃபார்மிலேயே தயாரிக்கவும், அதனைத் தொடர்ந்து அதே பிளாட்ஃபார்மில் டிசையர், இண்டிகோ கார்களுக்குப் போட்டியாக சின்ன செடான் கார்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறது நிஸான். இது தவிர, நிஸானிடம் இருந்து 7 கார்கள் வர இருக்கின்றன. இந்த 7 கார்களில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எவாலியா மற்றும் சன்னி கார்களின் அப்டேட்டட் வெர்ஷனும் அடங்கும். செப்டம்பர் மாத இறுதியில் ரெனோ டஸ்ட்டரின் மறு உருவமான நிஸான் டெரானோ விற்பனைக்கு வர இருக்கிறது.

2014-ம் ஆண்டு ஜூன் - ஜூலை மாதவாக்கில், கிராஸ் ஓவர் காரான காஷ்காய் காரை விற்பனைக்குக் கொண்டுவருகிறது நிஸான். ஈரானில் நாடோடியாக வாழும் பழங்குடி இனத்துக்குப் பெயர்தான் காஷ்காய். இங்கிலாந்தில் அதிக அளவில் விற்பனையாகும் க்ராஸ் ஓவர் கார்களில் ஒன்று காஷ்காய். தற்போது ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் காஷ்காய் காராக இல்லாமல், புதிய டிசைனுடன் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இது தவிர, புதிய நிஸான் டீனா மற்றும் எக்ஸ்-ட்ரெயில் கார்களும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. 2015-ம் ஆண்டின் இறுதியில் மீண்டும் புதிய மைக்ராவையும், சன்னியைக் களம் இறக்க இருக்கிறது நிஸான். 2016-ம் ஆண்டின் இறுதியில் புதிய எம்பிவி காரை விற்பனைக்குக் கொண்டுவருகிறது. இது, தற்போது விற்பனையில் இருக்கும் எவாலியா காருக்கு மாற்றாக இருக்கும்.

 நிஸானுக்குக் காத்திருக்கும் சவால்கள்!

வெற்றி பெறுமா கோ?

 டட்சன் கோ காரை எல்லோரையும் கவரும் காராக வடிவமைத்துவிட்டது நிஸான். நிச்சயம் இந்த கார் மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆனால், நிஸானின் சர்வீஸ் மற்றும் டீலர்ஷிப் தரத்தில்தான் பிரச்னை இருக்கிறது. நிஸானின் சர்வீஸ் மற்றும் ஷோரூம் நெட்வொர்க்கை 'ஹோவர் ஆட்டோமோட்டிவ்’ எனும் நிறுவனம் கவனித்துக்கொள்கிறது. இது நிஸானின் நிறுவனம் அல்ல. இந்த ஹோவர் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துக்கும் டீலர்களுக்கும் இப்போது பல பிரச்னைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

இதனால், கார் டெலிவரி, சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் என முக்கிய விஷயங்களில் காலதாமதங்கள் ஏற்படுகின்றன. டீலர்களின் பிரச்னையைத் தீர்த்து, சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸுகள் தடை இல்லாமல் மார்க்கெட்டில் அதிக அளவில் கிடைக்கச் செய்தால் மட்டுமே, டட்சன் கார்கள் முழுமையாக வெற்றி பெற முடியும்.