Published:Updated:

வணக்கம்!

வணக்கம்!

வணக்கம்!

வணக்கம்!

Published:Updated:
வணக்கம்!

கார் உற்பத்தியாளர்களுக்கு, இப்போது இது ஏறக்குறைய கொஞ்சம் பழைய கதையாகிவிட்டது. எரிபொருள் விலை ஏற்றம், வட்டி விகித உயர்வு போன்றவற்றால், தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்த கார் விற்பனை, இப்போது டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியால், மேலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

ரெனோவுக்கு டஸ்ட்டரும், ஃபோர்டுக்கு எக்கோஸ்போர்ட்டும், ஹோண்டாவுக்கு அமேஸும் கொடுத்த ஆக்ஸிஜன், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தொழிலுக்கே ஆக்ஸிஜனாகச் செயல்பட்டது என்றாலும், இப்போது ஆரம்பப் பரபரப்பெல்லாம் அடங்கி, சாதாரண விற்பனைச் சூழலுக்குள் இந்த கார்களும் வரத் துவங்கி இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து ஆடுகளத்தில் இயங்க வேண்டுமானால்... தள்ளுபடிகளையும் தவணைத் திட்டங்களையும் தாராளமாக வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு, அத்தனை கார் நிறுவனங்களும் தள்ளப்பட்டுவிட்டன.

கார் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, வாடிக்கையாளர்களுக்குப் பல வகைகளிலும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. தென்மேற்குப் பருவ மழையை மிஞ்சும் வகையில், திரும்பும் திசையெங்கும் தினுசு தினுசான திட்டங்கள்.

வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்குள் செடான் காரையும் எஸ்யூவி காரையும் எப்படி உருவாக்குவது என்ற சூத்திரத்தை, இந்த நெருக்கடி - கார் நிறுவனங்களுக்குக் கற்றுக் கொடுத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு நல்ல வாய்ப்பு.

இந்தச் சூழ்நிலையில், எண்ணிக் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற தரமான கார்களை நீங்கள் தேர்வுசெய்ய... Society of Indian Automobile Manufacturers (SIAM) வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் தகவல்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு, 'எந்த காரை வாங்கலாம்? எந்த காரைத் தவிர்க்கலாம்?’ என்ற கட்டுரையை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம்.

நீங்கள் வாங்க விரும்பும் கார், அதிகமாக விற்பனையாகும் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், 'நிச்சயம் அது பழுதில்லாத கார்’ என்ற விதியின் அடிப்படையில், அந்த காரை நம்பி வாங்கலாம். அதேசமயம், நீங்கள் வாங்க விரும்பும் கார், அதிகம் விற்பனையாகாத பட்டியலில் இடம் பெற்றிருந்தால்... இதன் மந்தமான விற்பனைக்கு என்ன காரணம் என்பதை அலசி ஆராய்ந்துவிட்டு, அதன் பின்னர் தெளிவான ஒரு முடிவெடுக்க இந்தக் கட்டுரை உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

Society of Indian Automobile Manufacturers (SIAM)அமைப்பின் முழு அறிக்கையையும் பார்க்க விரும்புகிறவர்கள், மோட்டார் விகடனின் இணையதளத்தில் அதைப் பார்க்கலாம்.

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்