Published:Updated:

''ஹோண்டா சிட்டியில் டீசல் வராது!''

''ஹோண்டா சிட்டியில் டீசல் வராது!''

''ஹோண்டா சிட்டியில் டீசல் வராது!''

''ஹோண்டா சிட்டியில் டீசல் வராது!''

Published:Updated:
''ஹோண்டா சிட்டியில் டீசல் வராது!''

அமேஸ் தந்த உற்சாகத்தில், புத்தம் புது திட்டங்களோடு தீவிரமாக இறங்கிவிட்டது ஹோண்டா. கடந்த மாதம் சென்னை வந்திருந்த ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹிரோனொரி கனயாமாவைச் சந்தித்தேன். ஹோண்டாவின் அடுத்த டீசல் கார்கள், புதிய ஹோண்டா சிட்டியின் அறிமுகம், வரப்போகும் ஜாஸ் மற்றும் எம்பிவி கார்கள் என கனயாமாவிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருந்தன. அனைத்து கேள்விகளுக்கும் வெளிப்படையாகப் பதில் அளித்தார் கனயாமா.

 ''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் வந்த நிறுவனங்கள், உங்களை முந்தும் நிலைக்கு வந்துவிட்டதே... ஹோண்டாவின் திட்டம் என்ன?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்களை யாரும் முந்தவில்லை. நாங்கள் தொடர்ந்து முதல் இடத்தில்தான் இருக்கிறோம். ஜேடி பவர் நிறுவனம் வெளியிட்டு வரும் சர்வே முடிவுகளில், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் நம்பர் ஒன் நிறுவனமாக தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்குமான உறவு எப்போதும் போல பலமாக உள்ளது. ஹோண்டா வாடிக்கையாளர்கள் யாரும் ஹோண்டா கார்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2014 - 2015-ம் ஆண்டுக்குள் நான்கு புதிய கார்களை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறோம். அடுத்த ஆண்டு துவக்கத்தில், புதிய ஜாஸ் கார் விற்பனைக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து 7 பேர் அமர்ந்து செல்லக்கூடிய எம்பிவி (டொயோட்டா இனோவாவுக்குப் போட்டி) காரைக் கொண்டுவருகிறோம். அதை அடுத்து மினி எஸ்யூவி (ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காருக்குப் போட்டி) காரும், புதிய செடான் காரும் விற்பனைக்கு வரும்.''

''ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோண்டா சிட்டியின் புதிய வெர்ஷனைக் கொண்டுவருவீர்கள். நீங்கள் சொல்லும் புதிய செடான் கார் என்பது இந்த ஆண்டு வரவேண்டிய ஹோண்டா சிட்டி காரா?''

''ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய வெர்ஷன் வெளியிட வேண்டும் என்கிற எந்தத் திட்டமும் இல்லை. இப்போதைய ஹோண்டா சிட்டிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நான் சொல்லும் புதிய செடான் கார், புதிய சிட்டியாகவும் இருக்கலாம். ஆனால், இந்த கார் அடுத்த ஆண்டு இறுதி அல்லது 2015-ம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வரும். இப்போதைய ஹோண்டா சிட்டியில் எந்த மாற்றமும் இல்லை.''

''ஹோண்டா சிட்டியில் டீசல் வராது!''

''அப்படியானால், இப்போதைய ஹோண்டா சிட்டியில் அமேஸின் டீசல் இன்ஜினை அறிமுகப்படுத்தும் திட்டம் இருக்கிறதா?''

''இல்லை. இப்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டாவின் பிரியோ, சிட்டி, சிஆர்-வி என எந்த

''ஹோண்டா சிட்டியில் டீசல் வராது!''

காரிலும் டீசல் இன்ஜின் பொருத்தப்போவது இல்லை. இந்த கார்கள் பெட்ரோல் இன்ஜினை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டவை. அதனால், இதில் மாற்றம் இருக்காது. புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மாடல்களில் மட்டுமே டீசல் இன்ஜின் பொருத்தப்படும்.''

''ஏன் ஹோண்டா சிவிக்கை விற்பனையில் இருந்து நிறுத்திவிட்டீர்கள். அது மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருமா?''

''சிவிக் விற்பனையாகும் சொகுசு செடான் கார் மார்க்கெட்டுக்கு இந்தியாவில் மார்க்கெட் இல்லை. அதனால், சிவிக்கை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரும் திட்டம் இல்லை.''

''டட்சன் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. ஆல்ட்டோ, இயான் போன்ற சின்ன கார்கள்தான் அந்த நிறுவனங்களின் சேல்ஸ் பூஸ்ட்டராக இருக்கின்றன. ஆனால், ஹோண்டாவில் சின்ன கார் எதுவும் கொண்டு வரும் திட்டம் இல்லையா?''

''பிரியோதான் எங்களுடைய சின்ன கார். இதற்குக் கீழ் ஒரு சின்ன காரைக் கொண்டு வரும் திட்டம் எதுவும் ஹோண்டாவிடம் இல்லை'' என்றார் கனயாமா உறுதியுடன்.

சார்லஸ்  பா.கார்த்திக்