Published:Updated:

பாயும் புலி!

பாயும் புலி!

பாயும் புலி!

பாயும் புலி!

Published:Updated:
பாயும் புலி!
 ##~##

லகின் அழகான கார்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜாகுவார் இ-டைப் காரின் வழித்தோன்றல்தான், புதிய ஜாகுவார் எஃப்-டைப். அநேகமாக, வெளிநாடுகளில் அறிமுகமான கையோடு நம் நாட்டில் விற்பனைக்கு வந்த முதல் ஸ்போர்ட்ஸ் கார் இதுவாகத்தான் இருக்கும். ஒருவேளை, ஜாகுவார் நிறுவனம் டாடாவின் கீழ் இருப்பது காரணமாக இருக்கலாம். விஷயத்துக்கு வருவோம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜாகுவார் இ-டைப் காரின் வெற்றிக்குக் காரணம், அதன் வடிவமைப்பு. அந்த நல்ல பெயரைக் கெடுக்காமல், புதிய எஃப்-டைப் காரை வடிவமைத்திருக்கிறார் இயான் கல்லம். '2013 வேர்ல்டு கார் டிசைன் ஆஃப் த இயர்’ விருதும் எஃப் டைப் மாடலுக்கே. ஹெட்லைட்ஸுக் கீழ் இருக்கும் க்ரில்கள், காருக்குப் படு மிரட்டலான தோற்றத்தைத் தருகின்றன.

கோடு ஒன்று சீராக பக்கவாட்டில் பயணித்து, பின் பக்க வீல் ஆர்ச்சுகளுக்கு மேலே லேசாக மேலெழுவது, கலை நுணுக்கத்தின் உச்சம். காரின் பின் பக்கத்தின் பக்கவாட்டு வடிவமைப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. பின் பக்கம் இருக்கும் டெயில் லைட்டுகளின் டிசைன் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், புதுமையாக இருக்கிறது.

பாயும் புலி!

உள்பக்கத்தையும் ரசித்து ரசித்து வடிவமைத்திருக்கிறார்கள் ஜாகுவாரின் வடிவமைப்புக் கலைஞர்கள். கேபினின் டிசைன், இதுவரை எந்த ஸ்போர்ட்ஸ் காரிலும் இல்லாத புது மாதிரியான டிசைன். ஸ்டீயரிங் வீல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் பிடிப்பதற்கு வசதியாகவும், கச்சிதமாகவும் உள்ளன. ஏ.சி திருகுகள்கூட தொடுவதற்குச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், உள்பக்க வடிவமைப்பில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம், காரை ஆன் செய்தவுடன் மேலே எழும் ஏ.சி வென்ட்டுகள்... சிம்ப்ளி சூப்பர்ப்!

பாயும் புலி!

காரின் இருக்கை அமைப்பும் சிறப்பாக இருக்கிறது. பொதுவாக, ஸ்போர்ட்ஸ் கார்களில் இருக்கைகள் தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கும். இதனால், நம் நாட்டில் ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டும்போது, சாலைகளில் உள்ள மேடு-பள்ளங்களைக் கவனிப்பது கடினம். ஆனால், எஃப்-டைப்பில் இருக்கை சரியான உயரத்தில் இருப்பதால், நம் ஊர் சாலைகளில் ஓட்டுவதற்கு எளிதாக உள்ளது. இருக்கை அமைப்பு ஏன் முக்கியம் என்றால், இது 488 bhp சக்திகொண்ட கார். டிராஃபிக்கில் ஆக்ஸிலரேஷனை நிதானமாகக் கையாள வேண்டும். முன்னே, எவ்வளவு தூரத்தில் அடுத்த வாகனம் இருக்கிறது என்று கண்ணுக்குச் சரியாகத் தெரிய வேண்டும். கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆக்ஸிலரேஷன் கொடுத்தாலும், கார் முன்னே சீறிவிடும் (இது எல்லா சூப்பர் கார்களுக்கும் பொருந்தும்). எஃப்-டைப் பெரும்பாலான ஸ்பீடு பிரேக்கர்களைச் சமாளித்தாலும், கவனமாகத்தான் கடக்க வேண்டியுள்ளது.

பிரிட்டன் சாலைகளுக்கு எஃப்-டைப் டியூன் செய்யப்பட்டு இருப்பதால், இங்கு ஓட்டும்போது சஸ்பென்ஷன் இறுக்கமாக இருக்கிறது. ஆனால், மற்ற ஸ்போர்ட்ஸ் கார்களுடன் ஒப்பிடும்போது, எஃப்-டைப் நம் ஊர் சாலைகளை ஓரளவு சமாளிக்கிறது.

ஜாகுவார் எஃப் டைப்பில் இருக்கும் வி8 இன்ஜின், கேட்கும் போதெல்லாம் சக்தியைக் தாராளமாகவே வழங்குகிறது. ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதும், எந்தவித சிரமமும் இல்லாமல், கார் முன்னே செல்கிறது. அதுவும் அதிக ஆர்பிஎம்-ல் வெளிப்படும் சக்தி, உங்களை வியப்பில் ஆழ்த்திவிடும். மேலும், இதன் எக்ஸாஸ்ட் சத்தம் மற்ற ஸ்போர்ட்ஸ் கார்களைவிட மிரட்டலாக உள்ளது. ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்ததும் 'பட்..பட்’ என்று சின்னச் சின்ன வெடிப்புகளோடு சத்தம் வருவது இசை. திரும்பவும் ஆக்ஸிலரேட்டரை மிதித்ததும் சங்கீதம் முதலில் இருந்து துவங்குகிறது. இந்த எக்ஸாஸ்ட் சத்தத்துக்காகவே இந்த காரை வாங்கலாம்.

பாயும் புலி!

'டைனமிக்’ மோட் செலக்ட் செய்தால், காரின் கையாளுமை ஷார்ப்பாக இருக்கிறது. காருக்கடியில் இருக்கும் பல மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக் சங்கதிகள் சாலையைப் பொறுத்து நொடிக்கு 100 முறை தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன. இதனால், கையாளுமை செம சூப்பர்! ஜாகுவார் நிறுவனம் மிகக் கச்சிதமாக காரின் அலுமினியம் சேஸியையும் காரின் மற்ற தொழில்நுட்பங்களையும் இணைத்திருக்கிறது.

இது எல்லாவற்றையும்விட மிக முக்கியமான விஷயம், எவ்வளவு எளிதாக எஃப்-டைப் காரை ஸ்போர்ட்டியாக ஓட்ட முடிகிறது என்பதுதான். எல்லா ஸ்போர்ட்ஸ் கார்களையும் எளிதாக ஓட்டவே முடியாது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், போர்ஷேவின் ஸ்போர்ட்ஸ் கார்கள் பரிசுத்தமான ஓட்டுதல் உணர்வைத் தருபவை. இவை ஓட்டுதலின் ஒவ்வொரு நொடியையும் உங்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். அதனால், அதிக வேகங்களில் போர்ஷேவின் கார்களை எடுத்துச் செல்லும்போது மன திடமும், உடல் திடமும் கண்டிப்பாகத் தேவை. ஆனால், ஜாகுவார்  எஃப்-டைப் ரொம்பவே 'டிரைவர் - ஃப்ரெண்ட்லி’யாக உள்ளது. இதன் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் நல்ல ஃபீட்பேக் அளிப்பதால், காரை மேலும் மேலும் விரட்டவே மனசு துடிக்கிறது. காரை விரட்டினாலும், நம் மனது மிரளவில்லை. அதுதான் எஃப்-டைப். இந்தியாவுக்கான சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் ஜாகுவார் எஃப்-டைப்!

பாயும் புலி!