Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

ரே ஸ்கூட்டர்களைத் திரும்ப அழைக்கிறது யமஹா!

மோட்டார் நியூஸ்

 கிட்டத்தட்ட 50 ஆயிரம் 'ரே’ ஸ்கூட்டர்களைத் திரும்ப அழைத்திருக்கிறது யமஹா. ஹேண்டில் பார் சரியாக வெல்டிங் செய்யப்படாததால், அதைச் சரி செய்வதற்காக இந்த 'ரீ-கால்’ அறிவிப்பு. மொத்தம் 56,082 ரே ஸ்கூட்டர்களில் இந்தப் பிரச்னை இருப்பதாக அறிவித்திருக்கிறது யமஹா. நீங்கள் யமஹா ரே வைத்திருப்பவர் என்றால், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரிக்குச் சென்று, உங்கள் ரே-வின் Chassis/Frame நம்பரைத் தட்டினால், உங்கள் ஸ்கூட்டரில் பிரச்னை இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலக பெட்ரோல் விலை நிலவரம்!

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

பெட்ரோல் விலை மாதந்தோறும் இரண்டு முறை மாறும் அளவுக்கு நிலமை மோசமாகிவிட்டது. கார், பைக்குகளின் விலை ஒரு பக்கம் உயர்ந்துகொண்டே போக... பெட்ரோல் - டீசல் விலையும் உயர்ந்துகொண்டே போவதில், மிஸ்டர் பொதுஜனம் செம கடுப்பில் இருக்கிறார். உண்மையில் உலகம் முழுக்க பெட்ரோல், டீசல் விலை நிலவரம் எப்படி இருக்கிறது என்று அலசினோம். வெனிசுலாவில் பெட்ரோல் விலை வெறும் 5 ரூபாய் மட்டுமே என்பது நம்மில் பலருக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பலாம். ஆனால், இதுவே துருக்கியில் பெட்ரோல் விலை 156 ரூபாய் என்பதைப் பார்த்து நாம் பரவாயில்லை என்று ஆறுதல் அடையலாம்.

டிஸ்கவரில் மேலும் ஒரு மாற்றம்!

பஜாஜ் நிறுவனத்தின் 'டிஸ்கவர்’ மாடல் பைக்குகளான 100டி மற்றும் 125எஸ்டி மாடல் வரிசையில், புதிதாக '125டி’ என்ற பைக்கை கடந்த மாதம் சென்னையில் அறிமுகப்படுத்தியது பஜாஜ். இதில் இருப்பது, 125 எஸ்டி-யில் உள்ள அதே 124.6 சிசி, 4 வால்வ் DTSi இன்ஜின்தான். இது 9000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 12.3 bhp சக்தியையும், 6500 ஆர்பிஎம்-ல் 10.8Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. கியர்பாக்ஸ் 125 எஸ்டியில் இருந்த அதே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான்.

மோட்டார் நியூஸ்

பின் பக்க சஸ்பென்ஷனில் மட்டும் மோனோ ஷாக் சிஸ்டத்துக்குப் பதிலாக, கேஸ் சார்ஜ்டு நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப் பட்டுள்ளது. இது மட்டும்தான் 125 எஸ்டி பைக்குக்கும் 125டி பைக்குக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம். சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை

மோட்டார் நியூஸ்

65,217.

புதிய ஆக்டிவா!

மோட்டார் நியூஸ்

ஸ்கூட்டர் விற்பனை இந்தியா முழுக்க உயர்ந்து கொண்டே வருவதால், பவர்ஃபுல் ஸ்கூட்டரைக் களம் இறக்குகிறது ஹோண்டா. ஏற்கெனவே மார்க்கெட்டில் ஹிட் அடித்திருக்கும் ஆக்டிவாவில், தற்போதைய 110 சிசி இன்ஜின் மாடலோடு சேர்த்து, 125 சிசி இன்ஜின்கொண்ட புதிய ஆக்டிவாவை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா. விரைவில் இந்தப் புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கிறது!

கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைந்தது!

எஸ்யூவி கார்களுக்கு அதிக வரி விதித்து, எஸ்யூவி கார்களுக்கான வரையறையையும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தது மத்திய அரசு. பெரிய கார்களுக்கு 27 சதவிகிம் வரி என்றால், எஸ்யூவி கார்களுக்குக் கூடுதலாக 3 சதவிகிதம் கலால் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மோட்டார் நியூஸ்

மத்திய அரசின் கொள்கைப்படி, 'எஸ்யூவி என்றால் இன்ஜின் திறன் 1500சிசி-க்கு மேல் அதிகமாகவும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ-க்கு அதிகமாகவும், காரின் மொத்த நீளம் 4 மீட்டருக்கு மேலும் இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்று குறைவாக இருந்தாலும், அந்த கார் எஸ்யூவி காருக்கான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதனால், XUV 500 காரின் கிரவுண்ட் கிளியரன்ஸைக் குறைக்கத் திட்டமிட்டது மஹிந்திரா. 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும் எக்ஸ்யூவி 500 கார், இப்போது 160 மிமீ ஆகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், 3 சதவிகித வரி குறைவதால், காரின் விலை 33,000 ரூபாய் வரை குறையும். ஆனால், உண்மையில் XUV 500 காரில் 40 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை மஹிந்திரா குறைக்கவில்லை. இதற்கு முன்பு வரை ஐரோப்பிய அளவீட்டு முறையான 'ஆர்க்’ முறைப்படி XUV 500 காரின் கிரவுண்ட்

மோட்டார் நியூஸ்

கிளியரன்ஸ் 200 மிமீ என்று அளந்து சொன்ன மஹிந்திரா, தற்போது இந்திய முறைப்படி (காரின் கீழ்ப்பகுதியின் குறைவான பாகத்தில் இருந்து தரைக்கு அளவிட வேண்டும்) எக்ஸ்யூவி 500 காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீதான் என்றும், வரி விலக்குக்காக கூடுதலாக 10 மிமீ மட்டுமே குறைக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்கிறது மஹிந்திரா.

மூன்று மாத வெயிட்டிங் பீரியட்...

கேடிஎம் 390 பைக் சென்னையில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால், மூன்று மாத வெயிட்டிங் பீரியட் என்பதுதான் கேடிஎம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான தகவல். சென்னையில் மட்டும் இதுவரை 66 பைக்குகள் புக் செய்யப்பட்டுள்ளன. கேடிஎம் 390 பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை 2,04,970 ரூபாய்.

வருகிறது டாடா நானோ டீசல்...

மோட்டார் நியூஸ்

டாடா நிறுவனம் புதிய டீசல் இன்ஜினுடன் நானோவை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு விற்பனைக்குவர இருக்கும் டாடா நானோவின் டீசல் இன்ஜின், டாடா ஏஸ் எல்சிவியில் உள்ள 700 சிசி DICOR இன்ஜினை அடிப்படையாகக்கொண்டது. இதில் பொருத்தப்பட இருக்கும் டர்போ சார்ஜரை கேர்ரட் (Garrett)நிறுவனத்திலிருந்தும், ஃப்யூல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தை பாஷ் நிறுவனத்தில் இருந்தும் பெற்றிருக்கிறது டாடா. இந்த டீசல் இன்ஜின் 40 bhp சக்தியும், 60 Nm டார்க்கும் அளிக்கக்கூடும். மேலும், உலகிலேயே சின்ன டர்போ - டீசல் இன்ஜின்கொண்ட கார் இதுவாகத்தான் இருக்கும். இதன் மைலேஜும் மிக அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

டாடா நானோ டீசல் மாடலின் முன் பக்க பம்பர், இன்ஜினைக் குளிர்விக்க அதிகக் காற்று செல்லும் வகையில் புதிய டிசைனுடன் வருகிறது. பின் பக்க பம்பர் வடிவமைப்பிலும் மாற்றங்கள் இருக்கக்கூடும். உள் பக்க வடிவமைப்பில் பெட்ரோல் மாடலுக்கும், டீசல் மாடலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்காது.

டாடா நானோ விற்பனைக்கு வந்த நாளில் இருந்தே மந்தமாகத்தான் உள்ளது. இதனால், சிஎன்ஜி - பெட்ரோல் டூயல் ஃப்யூயல் இன்ஜின் கொண்ட இ-மாக்ஸ் வேரியன்ட்டையும், டீசல் இன்ஜின்கொண்ட மாடலையும் அறிமுகப்படுத்தி 'நானோ’ பிராண்டுக்கு உயிர் கொடுக்க நினைக்கிறது டாடா. இவற்றின் வெற்றி, டாடா நிர்ணயிக்கும் விலையைப் பொறுத்துதான் அமையும்!

பென்ஸ் 'பி’ கிளாஸ் டீசல்

மோட்டார் நியூஸ்

 டீசல் மாடல் இல்லாமல் இருந்த பென்ஸ் பி கிளாஸில், டீசல் இன்ஜின்கொண்ட மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2.2 லிட்டர் திறன் கொண்ட டீசல் இன்ஜின் மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது பென்ஸ். இது அதிகபட்சம் 3,200 ஆர்பிஎம்-ல் 109bhp சக்தியை

மோட்டார் நியூஸ்

வெளிப்படுத்துகிறது. முன் பக்க வீல் டிரைவ் காரான இதில், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் இதன் ஆன் ரோடு விலை 25 லட்சம் ரூபாயை நெருங்கும்.

மினி கூப்பர் வாங்கிய விஜய்; சூப்பர் பைக் வாங்கிய அஜீத்!

 ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்கள் வைத்திருக்கும் நடிகர் விஜய், சென்னை டிராஃபிக் பிரச்னையால், பிஎம்டபிள்யூவின் சின்ன காரான 30 லட்சம் ரூபாய் விலைகொண்ட மினி கூப்பர் வாங்கியிருக்கிறார். அஜீத் பற்றியும் ஒரு செய்தி: தன்னிடம் இருந்த சூப்பர் பைக்குகள் அனைத்தையும் விற்றுவிட்ட அஜீத், ஹோண்டா அக்கார்டு மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்களை மட்டுமே பயன்படுத்தி வந்தார். இப்போது அவர் ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் பைக்கை வாங்கியிருக்கிறார். இதன் சென்னை விலை 15 லட்சம் ரூபாய். 'தல’யின் ஃபேவரைட் நிறம் வெள்ளை. அதுதான் ஹோண்டா பைக்கின் நிறமும்!

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

ஜூன் மாத விற்பனையில் ஸ்விஃப்ட் டிசையரைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மீண்டும் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது ஆல்ட்டோ. ஜூன் மாதம் மட்டும் 20,077 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஸ்விஃப்ட் இரண்டாம் இடத்துக்கு வந்ததால், டிசையர் மூன்றாவது இடத்துக்குப் பின் தங்கிவிட்டது. முதல் நான்கு இடங்களை மாருதி கார்கள் பிடித்துவிட, ஹூண்டாய் ஐ10 8,174 கார்கள் விற்பனையாகி, ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. டாடா இண்டிகா மற்றும் விஸ்ட்டா கார்கள் 5,157 கார்கள் விற்பனையாகி ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஹோண்டா அமேஸ் 4,965 கார்கள் விற்பனையாகி டாப் டென் கார்களில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism