Published:Updated:

டபுள் ஆக்ஷன்!

போர்ஷே பனாமெரா -4 எஸ்

டபுள் ஆக்ஷன்!

போர்ஷே பனாமெரா -4 எஸ்

Published:Updated:

தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி  

##~##

போர்ஷேவின் சொகுசு சலூன் கார், பனாமெரா. அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏதுவான ஒரு ஸ்போர்ட்ஸ் காராகத்தான் இதை விளம்பரப்படுத்துகிறது போர்ஷே. உண்மைதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக, ஸ்போர்ட்ஸ் காரை தினந்தோறும் எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற முடியாது. ஆனால், பனாமெரா தினமும் ஓட்டுவதற்கு பிராக்டிக்கலான காராகவும் இருக்கிறது; அதேசமயம் ஒரு பக்கா போர்ஷே ஸ்போர்ட்ஸ் காராகவும் இருக்கிறது.

பழைய பனாமெராவுக்கும் புதிய மாடலுக்கும் வடிவமைப்பில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. நாம் ஓட்டியது பனாமெரா-4 எஸ் மாடல். இதில் இருப்பது 3.0 லிட்டர் V6 ட்வின்-டர்போ இன்ஜின். 414 bhp சக்தியைக் கொடுக்கும் இது, பழைய மாடலைவிட 19 bhp அதிகமாக அளிக்கிறது. இதன் சிறப்பம்சமே டார்க் வெளிப்படும் விதம்தான். 53 kgm டார்க், வெறும் 1750 ஆர்பிஎம்-ல் இருந்தே வெளிப்படுவதால், ஆக்ஸிலரேட்டரை மெல்ல அழுத்தியதுமே, 1.8 டன் எடைகொண்ட கார் சீறுகிறது.

டபுள் ஆக்ஷன்!

இவ்வளவு சக்தியையும் திறமையாகக் கையாள நமக்கு 7-ஸ்பீடு, ட்வின் கிளட்ச் கியர்பாக்ஸ் உதவுகிறது. பெரிய கார் என்றாலும், இது 4.8 விநாடிகளில் 0-100 கி.மீ வேகத்தைத் தொட்டு விடுகிறது. இந்த ஒரு விஷயமே போதும், பனாமெராவின் பெர்ஃபாமென்ஸைப் பற்றி எடுத்துச் சொல்ல!

வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில், பனாமெராவைக் கட்டவிழ்த்துவிட்டால் போதும்... கார் கப்பலாக மாறி மிதக்கிறது. வளைவுகளில் திரும்பும்போது தேவையற்ற அண்டர்ஸ்டீயர் இல்லாமல், ஆர்வமாகத் திரும்புகிறது. பெரிய கார் என்றாலும், பாடி ரோல் மிக மிகக் குறைவுதான்.

ஸ்டீயரிங் சரியான எடையுடன் ஃபீட்பேக்கை கனகச்சிதமாக அளிக்கிறது. கையாளுமை சிறப்பாக இருந்தாலும், ஓட்டுதலில் சில குறைகள் இருக்கின்றன. சாலையில் உள்ள ஷார்ப்பான மேடு-பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, கேபின் வரை அதை உணர முடிகிறது. அதுவும் 'ஸ்போர்ட்’ மோடில் ஓட்டும்போது, காரே மிகவும் இறுக்கமாக ஆகிவிடுகிறது. பெரும்பாலான சமயங்களில் 'கம்ஃபர்ட்’ மோடில் வைத்து ஓட்டுவதே நல்லது. காரின் பின் பக்கம் அமர்ந்து பயணிப்பவர்கள் என்றால், இந்த காருக்குப் பதில் மெர்சிடீஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் அல்லது ஆடி ஏ8 போன்ற கார்கள் சிறப்பாக இருக்கும்.

டபுள் ஆக்ஷன்!

நீங்களேதான் டிரைவர் என்றால், போர்ஷே பனாமெரா உங்களுக்குச் சரியான சாய்ஸ். ஏனென்றால், ஓட்டுதல் அனுபவத்தில் பல கார்களைத் தோற்கடித்து விடுகிறது பனாமெரா.

உள்பக்க வடிவமைப்பில் பழைய காருக்கும் புதிய காருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஜன்னல்கள் சற்று சிறிதாக இருப்பதுதான் ஒரே குறை. மற்றபடி முன் பக்க இருக்கைகள் சொகுசிலும், அனுபவத்திலும் மிக அருமை. பின்னிருக்கைகள் இன்னும் அதிகம் சொகுசாக இருக்கிறது. ஆனால், டிக்கியின் அளவு வெறும் 445 லிட்டர்கள்தான்.

இதே செக்மென்ட்டில் இருக்கும் மற்ற சொகுசு கார்களைவிட போர்ஷே பனாமெராவின் விலை

(

டபுள் ஆக்ஷன்!

1.5 கோடி, உத்தேச விலை எக்ஸ்-ஷோரூம் டெல்லி) சற்று அதிகமாக இருந்தாலும், பனாமெரா ஒரு பக்கா போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார். அதேசமயம், ஒரு பக்கா சொகுசு சலூன் காரும்கூட! ஒரே கார் ஓட்டுவதற்கு ஸ்போர்ட்டியாகவும், அதே சமயம் ஒரு குடும்பம் முழுவதையும் ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றவும் முடியும் என்றால், அது போர்ஷே பனாமெராதான்!

டபுள் ஆக்ஷன்!