Published:Updated:

கற்பனைக்கு உயிர் கொடுக்கும் கார் 3D மாடலிங் வொர்க்‌ஷாப்; மோட்டார் விகடன் நடத்தும் 2 நாள் பயிலரங்கம்!

3D Modeling of Cars in Blender Software

3D Modeling of Cars in Blender Software - சென்னையில், மோட்டார் விகடன் நடத்தும் இரண்டு நாள் பயிலரங்கம். கலந்துகொள்வது எப்படி?

கற்பனைக்கு உயிர் கொடுக்கும் கார் 3D மாடலிங் வொர்க்‌ஷாப்; மோட்டார் விகடன் நடத்தும் 2 நாள் பயிலரங்கம்!

3D Modeling of Cars in Blender Software - சென்னையில், மோட்டார் விகடன் நடத்தும் இரண்டு நாள் பயிலரங்கம். கலந்துகொள்வது எப்படி?

Published:Updated:
3D Modeling of Cars in Blender Software

கார் டிசைனிங் - Fundamentals மற்றும் Clay Modeling ஆகிய பயிலரங்குகளைத் தொடர்ந்து '3D Modeling of Cars' வொர்க்‌ஷாப் நடக்கவிருக்கிறது. இதில் 'Blender' எனப்படும் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி உங்கள் சிந்தனையில் பிறக்கும் காருக்கு கம்ப்யூட்டர் திரையில் எப்படி உயிர் கொடுப்பது என்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். இந்த வொர்க்‌ஷாப்பில் கலந்துகொள்ள மோட்டார் விகடனின் முந்தைய பயிலரங்கங்களில் நீங்கள் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில் Car thumbnail sketches, Professional approach on Car design, Composition Techniques, Speed forms போன்ற கார் டிசைன் அடிப்படைகள் இந்த இரண்டு நாள் பயிலரங்கத்தின் தொடக்க நாளில் பயிற்றுவிக்கப்படும்.

கார் 3D மாடலிங் வொர்க்‌ஷாப்
கார் 3D மாடலிங் வொர்க்‌ஷாப்

இந்தப் பயிலரங்கத்தில் கலந்துகொள்வதற்கு நீங்கள் மடிக்கணினியைக் கொண்டு வர வேண்டியது அவசியம். அதில் 'Blender' சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்திருக்க வேண்டியதும் அவசியம். ஆகையால் இந்தப் பயிலரங்கத்திற்குப் பதிவு செய்வதற்கு முன்பு உங்கள் லேப்டாப்பில் இந்த மென்பொருள் வேலை செய்கிறதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பயிலரங்கத்தில் கலந்துகொள்ள வரும்போது அவசியம் சார்ஜிங் கேபிளையும் கொண்டு வர வேண்டும்.

இந்தப் பயிலரங்கத்தை க.சத்தியசீலன் தலைமையிலான நிபுணர்கள் நடத்த இருக்கிறார்கள். கார் டிசைனிங் துறையில் இருப்பவர்களுக்கு சத்தியசீலன் நன்கு அறிமுகமானவர். டாடா மோட்டார்ஸ், நிஸான், டிவிஎஸ் எனப் பல நிறுவனங்களில் பணியாற்றிய இவர், தற்போது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். IIT, IISC, NIT எனப் பல கல்லூரிகளில் டிசைன் பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார். இவர் MIT (புனே) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் கல்விக் குழு உறுப்பினரும்கூட!

3D Modeling of Cars in Blender Software
3D Modeling of Cars in Blender Software
பயிலரங்கம் நடக்கும் ஆனந்த விகடன் அலுவலகத்திற்கு (757, அண்ணா சாலை, சென்னை 600002 - ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகில்) காலை 09.00 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும்.
பயிலரங்கம் நடக்கும் இரண்டு நாள்களுக்கும், மதிய உணவும், காலை - மாலை இடைவேளையின் போது தேநீரும் வழங்கப்படும்.
பயிலரங்கம் நடைபெறும் நேரம்: காலை 9 முதல் மாலை 6 மணி வரை. கட்டணம்: ரூ.2,950.
பெற்றோர்/காப்பாளருக்குப் பயிலரங்கத்தில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.