>> உ.அருண்குமார் >> க.கார்த்திக்

ஹெல்மெட் அணிவதில் அலட்சியம் காட்டுபவர்கள் பலர். காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்ளக்

கூடாதே என்பதற்காகவும் ஹெல்மெட் அணிபவர்களும் உள்ளனர். 'ஹெல்மெட், உயிர்காக்கும் கவசம்’ என்பதை உண்மையில் உணர்ந்தவர்கள், அதைத் தவிர்க்க மாட்டார்கள். ªஹல்மெட்டால் உயிர் பிழைத்த கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் திண்டுக்கல்லைச் சேர்ந்த முகமது ஷாஃபி.

'ஆறு மாசத்துக்கு முன்னாடி நானும் என் ஃப்ரெண்டும், அவரோட ஊரான விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சிக்கு ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்லயே போயிட்டு திரும்பிக்கிட்டு இருந்தோம். வர்றப்ப திருச்சியைத் தாண்டும்போது ஒரு மேம்பாலத்துல நிறைய கார், லாரிங்க மெதுவா வரிசையா போயிக்கிட்டு இருந்தது. நான், ஹெல்மெட் போட்டுருந்த தைரியத்துல, செம ஸ்பீடா கிடைக்குற இடைவெளியில எல்லாம் புகுந்து வந்துக்கிட்டு இருந்தேன்.

அப்போ ரெண்டு வண்டிகளுக்கும் நடுவில இருந்த இடத்துல புகுந்து வேகமா போகும்போது... நடு ரோட்ல ஒரு கல் சம்பந்தமே இல்லாம கிடந்துச்சு. அந்தக் கல்லைத் தவிர்த்துட்டு அழகா ஒதுங்கி வெளியேறிட்டேன். 'ஒரு பெரிய விபத்து காத்திருக்கு... போகாதீங்க’ன்னு அந்த கல் சிம்பாலிக்கா சொல்லியிருக்குமோ என்னவோ தெரியல... அப்பவும் வேகத்தைக் கொஞ்சமும் குறைக்காம வந்துகிட்டு இருந்தோம்.

அந்தப் பாலத்தில இருந்து தரைக்கு இறங்கி அப்படியே இன்னொரு பாலத்தில ஏறுற மாதிரி அந்த ரோட்டோட அமைப்பு இருந்துச்சு. அப்போ... திடீர்னு வலது பக்கத்துல இருந்து ஒரு ஆட்டோ ரெண்டாவது பாலத்து மேல ஏறுறதுக்கு மெல்ல திரும்பிச்சு. ஏற்கெனவே என் பைக் நல்ல ஸ்பீடுல இருந்ததால, உடனடியா எதுவும் பண்ண முடியலை. இடது பக்கம் ஒதுங்கலாம்னா, அங்க ஒரு 20 பேருக்கும் மேல ரோடு வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வலது பக்கமும் ஒதுங்க இடம் இல்லை. அந்த ஸ்பீடுல பிரேக் அடிச்சா, ஸ்கிட் ஆகி விழுந்துடுவோம்... பின்னாடி லாரி வேற... அந்த இக்கட்டான வேளையில, வேற வழியில்லாம கியரைப் படிப்படியா குறைச்சேன். அதுல பைக்கோட வேகம் கொஞ்சம் குறைஞ்சது. ஆனா, திடீர்னு கியர் பாக்ஸ் லாக் ஆகி, அப்படியே ஸ்கிட் ஆகி... ஆட்டோ நடுரோட்டுல இருக்கும்போது பயங்கரமா மோதிட்டேன். மோதுன வேகத்துல ஆட்டோவோட முன்பக்கத்தோட விளிம்புல என் தலை மோதி ஆட்டோவோட சேர்ந்து விழுந்தோம். ஆட்டோ டிரைவர், ஆட்டோவ விட்டு வெளிய விழுந்து உடனே எந்திரிச்சுட்டாரு. நாங்களும் விழுந்த வேகத்துல உடனே எந்திரிச்சுட்டோம். ஆட்டோ டிரைவரை திட்டுறதுக்கு வாயெடுக்குறதுக்கு முன்னாடி, அவரு எங்க ரெண்டு பேரோட கையையும் பிடிச்சு ரோட்டோரத்துக்கு டக்குன்னு இழுத்தாரு. அப்பதான் நான் பாலத்துல ஓவர் டேக் பண்ணி வந்த லாரி, நாங்க நின்ன இடத்தைக் கடந்து வேகமாப் போச்சு!

பிரம்மை பிடிச்சது மாதிரி ஆயிடுச்சு... எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலை. ஏன்னா, இன்னும் ஒரு நொடி நாங்க அங்க இருந்திருந்தா லாரி மோதி இருக்கும். அதைவிட ஆட்டோவுல மோதினதுல என் ஹெல்மெட் விரிசலே விழுந்துடுச்சு. நான் மட்டும் ஹெல்மெட் போடலைன்னா அந்த விரிசல் என் தலையிலதான் விழுந்திருக்கும். மத்தபடி உடம்புல எனக்கும் என் ஃப்ரெண்டுக்கும் சின்னச் சின்ன சிராய்ப்பு காயம்தான்.

இப்பல்லாம் கண்டபடி பைக் ஓட்டுறதில்லை. பக்கத்துத் தெருவுல இருக்குற பெட்டிக் கடைக்குப் போனாலும் ஹெல்மெட் போட்டுத்தான் போறேன். ஏன்னா, ஹெல்மெட்தான் இப்ப நான் உயிரோட இருக்கறதுக்குக் காரணம்!'' என நெகிழ்கிறார் முகமது ஷாஃபி.