>>சார்லஸ்

டீசல் புல்லட்!

மீண்டும் டீசல் மோட்டார் சைக்கிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

. புதிய டீசல் பைக் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் விற்பனைக்கு வரும் என்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். உலகிலேயே முதன்முறையாக டீசல் இன்ஜின் கொண்ட 'டாரஸ்’ எனும் பைக்கை 1990-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது என்ஃபீல்டு நிறுவனம். அதிக விலை, அதிக சத்தம், அதிக எடை காரணமாக இந்த பைக் விற்பனையில் வீழ்ந்தது. ஏற்கெனவே டீசல் இன்ஜினைத் தயாரித்து கையைச் சுட்டுக்கொண்ட அனுபவம் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு இருப்பதால், இந்த முறை தரமான டீசல் இன்ஜினையே இது தயாரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது தவிர, 'கஃபே ரேஸர்’ பைக்கையும் வெளியிட இருக்கிறது என்ஃபீல்டு. சென்னை திருவொற்றியூர் தொழிற்சாலையைத் தவிர, ஆந்திராவில் புதிய தொழிற்சாலையை அமைத்திருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், புதிய பைக்குகளை இந்தத் தொழிற்சாலையில்தான் தயாரிக்க இருக்கிறது. 2012-ம் ஆண்டு முதல் இரண்டு தொழிற்சாலைகளிலும் கூட்டாக 1 லட்சம் பைக்குகள் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது!.
வருகிறது சூப்பர் புல்லட்!

புல்லட் பைக்குகளைத் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புத்தம் புது பைக்குகளோடு களம் இறங்கத் தயாராகிறது. இதுவரை 350 மற்றும் 500 சிசி பைக்குகளை மட்டுமே தயாரித்து வந்த ராயல் என்ஃபீல்டு, விரைவில் 650-700 சிசி பைக்கை வெளியிட இருக்கிறது. முதன்முறையாக இதில் இணையான (Parallel) இரண்டு இன்ஜின்களைப் பொருத்தத் திட்டமிட்டு இருக்கிறது. எல்லாம் ஹார்லி டேவிட்சன் இந்தியாவுக்குள் வந்து விட்டதன் பாதிப்புதான்!