>>எஸ்.ஷக்தி >> வெ.பாலாஜி

கேரளக்காரர்கள் ஒரு கோட்டை மைதானத்தைப் பிடிக்கும்போது, தமிழர்கள் ஒரு பூங்கா மைதானத்தையாவது பிடிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன? பிடித்தார்களே கோவையில்! நேரு கல்வி நிறுவனங்கள் கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தைப் பிடித்து ஜெகஜெகவென மூன்று நாட்கள் 'மோட்டோ எக்ஸ்போ 2011’ என்ற பெயரில் பின்னி எடுத்துவிட்டார்கள்.

இந்த எக்ஸ்போவிலும் வின்டேஜ் மற்றும் மாடர்ன் கார்களின் சங்கமம்தான் ஹைலைட்! அதிலும் 'இந்த எக்ஸ்போ ஜீப் ஸ்பெஷலோ!’ என புருவம் உயர்த்துமளவுக்கு எந்த திசையில் நோக்கினாலும் ஜீப்களின் ராஜ்ஜியம். 1970 மாடல் ஜோங்கா, 1972 மாடல் வில்லீஸ், 1980 மாடல் ட்ரூப்பர், ராங்லர் என்று சீனியாரிட்டி வரிசையில் நின்றிருந்தன.

மோரீஸ், ஆஸ்டின், பல கால கட்டங்களைச் சேர்ந்த பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரீ-மாடல் டொயோட்டா என்று கார்களின் அணிவகுப்பும் இருந்தது. பாலக்காடு ஷோ போலவே பைக்குகளுக்கும் இடமளித்திருந்தவர்கள், அவர்களைவிட சில படிகள் மேலே போய் ஹெலிகாப்டரையும், கிளெய்டரையும் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததன் மூலம் எக்ஸ்ட்ரா வெயிட்டேஜ் சேர்த்துக் கொண்டார்கள்.

ஒரு சுற்று சுற்றிவிட்டு வெளியே வரும்போது, 'கலெக்ஷனில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்ற எண்ணம் மின்னி மறைந்தது!