>> 'ப்ரீத்தி’கார்த்திக்

லால்குடி... திருச்சி மாவட்டத்தின் பிரபலமான ஊர். இந்த ஊரில் இருக்கும் புல்லட்

. மெக்கானிக் வெங்கடேசன், திருச்சி மட்டுமல்ல... தமிழகத்தை தாண்டி, கர்நாடக மாநிலத்திலும் வாடிக்கையாளர்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு இவரிடம் அப்படி என்ன தனித்துவம்? லால்குடியில் திருச்சி சாலையில் உள்ள தனது சர்வீஸ் சென்டரில் அமர்ந்து கொண்டு, புல்லட்டைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தவரிடம் பேசினோம். ''என் அக்காவின் கணவர் ராஜூ மாமா ஒரு மெக்கானிக்தான். அவர்தான் என் தொழில் குரு. 1973-ம் ஆண்டுவாக்கில்தான் அவரிடம் வேலைக்குச் சேர்ந்து தொழில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பின்பு, என் மாமாவின் மறைவுக்குப் பின் நானே சர்வீஸ் சென்டரை நடத்த ஆரம்பித்தேன். இன்றைக்கு 'புல்லட் வெங்கடேசன்’ அல்லது 'அய்யர்’ என்றால் எல்லோருக்கும் தெரியும்!''.
''உங்கள் சமூகத்தில் இருந்து இது போன்ற தொழிலுக்கு வருவது அபூர்வமாயிற்றே?''

''என்ன தொழில் செய்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படி அந்தத் தொழிலைச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். அப்படி செய்யும் தொழில் மீது காதல் இருக்க வேண்டும். எனக்கு புல்லட் மீது காதல் இருக்கிறது. அதனால், இந்தத் தொழிலில் இருக்கிறேன்!''

''ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தோம் என்று நினைத்தது உண்டா?''

''அப்படி நினைக்கவில்லை. ஆனால், இக்கட்டான சூழ்நிலை ஒன்று உருவானது. மார்க்கெட்டில் புதுசு புதுசாக பைக்குகள் வரிசை கட்டி வந்தபோது, புல்லட்டைக் கட்டி தீனி போட முடியாது என கருதிய மக்கள் அதை ஓரங்கட்டிவிட்டு, புதிய வாகனங்களின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்த காலகட்டம் அது. பொருளார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மிகுந்த மனவேதனை கொண்ட சமயம். அப்போது என் நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றேன். ஆனால், கையில் காசு சேர்ந்தவுடன் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் காதலியைத் தேடி தாய் மண்ணில் கால் பதித்து விட்டேன். அதன் பிறகு, 'நமக்குத் தொழில் மெக்கானிக்’ என்பதில் உறுதியாக இருக்கிறேன்!''

''புல்லட் மார்க்கெட் நிலவரம் எப்படி?''

''ஒரு காலத்தில் மீன் பாடி வண்டிகளுக்குத்தான் பழைய புல்லட்டின் இன்ஜின்கள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தைப் போல புல்லட்டுகளின் விலை ஜிவ்வென விண்ணை முட்டிக் கொண்டு இருக்கிறது. 4,500 ரூபாய்க்கு காயலான் கடைக்குப் போன பழைய பைக்குகள் எல்லாம் இப்போது 45,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த மாற்றம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது!''

''வாடிக்கையாளர்கள் எப்படி?''

''ஆண்டுதோறும் புள்ளம்பாடியில் பொங்கல் விழாவை ஒட்டி நடைபெறும் புல்லட் ரேஸ் போட்டியில் பரிசு வாங்கியதைப் பெருமையாக நினைகிறேன். நம் வாடிக்கையாளர்கள் பரிசு வாங்கினால்தானே நமக்கும் நமது உழைப்புக்கும் பெயர் கிடைக்கும் என்பதால், தற்போது ரேஸ்களில் கலந்து கொள்வதில்லை.

என்னுடைய வாடிக்கையாளர்களில் அமைச்சர் கே.என்.நேரு முதல் வழக்கறிஞர்கள், காவல்துறையினர், புல்லட் ரசிகர்கள் என பெரிய வட்டமே இருக்கிறது. புல்லட்டை மதிப்பவர்கள் அதன் மெக்கானிக் மீதும் மதிப்பு வைத்திருப்பார்கள். அந்த அன்பு மட்டுமே போதும் என்று எதிர்பார்ப்பவன் நான். பொதுவாக, பைக்கின் மாடல் குறையக் குறைய விலையும் குறையும். ஆனால் புல்லட் அதற்கு நேர்மாறானது, தற்போதைய இளைஞர்கள் பெரிதும் விரும்பும் வாகனமாக புல்லட் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.''

''வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் உங்களைத் தேடி வரக் காரணம் என்ன?''

ராயல் என்பீல்டு புல்லட் தரம் மிக்க வாகனம். அதன் ஒரிஜினாலிட்டி மாறாமல் வேலை பார்ப்பது மிக மிக முக்கியம். புல்லட் மெக்கானிக்குகளிலேயே பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் எக்ஸ்பர்ட்டாக இருப்பார்கள். புல்லட்டில் பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுவது ஆயில் லீக்கேஜ்தான். அதை அரஸ்ட் செய்யும் விதத்துக்காகத்தான் என்னைத் தேடி வருகிறார்கள். 1976-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை வெளிவந்த பைக்குகளில் இன்ஜின் ப்ரீதர் ட்யூப், மோல்ட் டைப்பில் இருக்கும். அதனை யூனியன் டைப்பில் மாற்றி ஆல்டர் செய்து ஆயில் லீக் பிரச்னையைத் தீர்த்துவிடுவேன். மேலும், ஒரிஜினல் மாறாமல் பெயின்ட் செய்வதிலும் கவனம் செலுத்துவேன்'' - தனது தொழில் ரகசியங்களைக்கூட எந்தவித தயக்கமும் இல்லாமல் பகிர்ந்துகொண்டார் வெங்கடேசன்!