>>சார்லஸ்

ராட்சத மின் விளக்குகள் ஒளிற... மோட்டோ ஜீபியின் முதல் ரேஸ் கத்தாரில் நடந்து

முடிந்திருக்கிறது. 2011-ம் ஆண்டுக்கான முதல் ரேஸ், கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி, இரவு ரேஸாக கத்தாரில் உள்ள லொசைல் ரேஸ் டிராக்கில் நடைபெற்றது.

மோட்டோ ஜீபி (20-03-2011)

டுகாட்டி அணியில் இருந்து ஹோண்டாவுக்குத் தாவிய கேஸி ஸ்டோனர், தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்க தகுதி பெற்றார். இரண்டாவது இடத்தில் இருந்து மற்றொரு ஹோண்டா வீரரான டேனி பெட்ரோஸாவும், யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் முன்னாள் சாம்பியன் வாலன்டினோ ராஸி, ரேஸை ஒன்பதாவது இடத்தில் இருந்து துவக்க தகுதி பெற்றார்.

ரேஸ் துவங்குவதற்கு முன்பாக, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்காக 1 நிமிடம்

. மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. கத்தாரில் கடுமையான வெயில் நிலவியதால், இரவில் புழுக்கம் அதிகமாக இருந்தது. ரேஸ் வீரர்கள் ஒவ்வொருவரும் ஹெல்மெட், ரேஸ் சூட்டோடு புழுக்கத்தில் கசங்கிக் கொண்டு இருக்க... ரேஸ் டிராக் பரபரப்பான முதல் ரேஸுக்குத் தயாரானது. ரேஸ் துவங்கியதுமே கேஸி ஸ்டோனரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு முன்னேறினார் ஹோண்டா அணியின் மற்றொரு வீரர் டேனி பெட்ரோஸா. ஆனால், சில விநாடிகளிலேயே டேனி பெட்ரோஸாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு முன்னேறினார் யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ..
ஜார்ஜ் லாரன்சோ, டேனி பெட்ரோஸா - இரண்டு ஸ்பெயின் வீரர்களுக்கும் இடையே சிக்கித் தவித்துக்

கொண்டு இருந்தார், ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கிய ஆஸ்திரேலியாவின் கேஸி ஸ்டோனர். இதற்கிடையே யமஹா பைக்கை விட ஹோண்டா பைக்கின் வேகம் அதிகமாக இருந்ததால், ஒரு கட்டத்தில் பெட்ரோஸாவும், ஸ்டோனரும் மாறி மாறி முதலிடத்துக்கு முன்னேறிக் கொண்டிருந்தனர். 22 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் 14-வது லேப்பின் போது, முதலிடத்திலேயே செட்டிலாகி விட்டார் கேஸி ஸ்டோனர். அதன் பிறகு பெட்ரோஸாவாலும், லாரன்சோவாலும் அவரை முந்த முடியவில்லை. ஸ்டோனர் முதலிடத்துக்கு முன்னேறி விட பெட்ரோஸாவுக்கும், லாரன்சோவுக்கும் இடையே இரண்டாவது இடத்துக்கான போட்டி மூண்டது. இதற்கிடையே 22 லேப்புகளை கேஸி ஸ்டோனர் 42 நிமிடங்கள் 38 விநாடிகளில் கடந்து வெற்றி பெற... ஜார்ஜ் லாரன்சோ 1 விநாடி வித்தியாசத்தில் டேனி பெட்ரோஸாவை முந்திச் சென்று இரண்டாம் இடம் பிடித்தார்.

யமஹாவில் இருந்து டுகாட்டி அணிக்குத் தாவிய வாலன்டினோ ராஸியின் ரேஸைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆனால், ஒன்பதாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய வாலன்டினோ ராஸியால் ஏழாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

''முதல் ரேஸிலேயே ஹோண்டா வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. யமஹாவைவிட நாங்கள் வேகமாக இருக்கிறோம். இந்த ஆண்டு நிச்சயம் ஹோண்டாவுக்காக சாம்பியன் பட்டம் வென்று தருவேன்'' என்கிறார் கேஸி ஸ்டோனர் வெற்றிப் புன்னகையுடன்!

சரத்குமாரின் ஏமாற்றம்!

இந்தியாவின் முதல் ரேஸராக, மோட்டோ ஜீபியின் 125 சிசி ரேஸில் கலந்துகொண்டார் சென்னையைச் சேர்ந்த சரத்குமார். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த நிக்கோலஸ்ஸை விட 9 விநாடிகள் பின்தங்கியிருந்த சரத்குமார், ரேஸில் கலந்துகொள்ளவே தகுதி பெறவில்லை. மோட்டோ ஜீபியில் கடைப்பிடிக்கப்படும் 107 சதவிகிதம் எனும் விதியின்படி தகுதிச் சுற்றில் வெற்றி பெறுபவரின் நேரத்தில் இருந்து கடைசி வீரரின் நேரமும் 107 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும். இந்த விதியின்படி சரத்குமார் 0.1 விநாடி பின்தங்கியிருந்ததால், அவரால் ரேஸில் கலந்துகொள்ள முடியாமல் போனது. 125 சிசி ரேஸில் கலந்து கொண்ட 31 ரேஸ் வீரர்களில், ரேஸில் கலந்துகொள்ள தகுதி பெறாதது சரத்குமார் மட்டும்தான். ''இதுதான் என்னுடைய முதல் ரேஸ். என்னால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்தேன். ஆனால், என்னுடைய வேகம் போதுமானதாக இல்லை. அடுத்த ரேஸுக்கு இந்த அனுபவம் ஒரு பாடம்!'' என்றார் சரத்குமார்.