Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான் கடந்த இரண்டு வருடங்களாக ஹூண்டாய் ஐ10 காரைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செய்ய பெரிய கார் வாங்கலாமெனத் திட்டம். அதிக இடவசதி, சொகுசான இருக்கைகள் மற்றும் அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய தேவை. செவர்லே டவேரா, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, டொயோட்டா இனோவா ஆகிய கார்களில் எந்த காரை வாங்கலாம்?

மது, பெங்களூரு.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நான்கு கார்களில் டொயோட்டா இனோவாதான் பெஸ்ட் கார். அதிக இடவசதி, சொகுசான இருக்கைகள், அதிக சிறப்பம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதோடு பில்டு குவாலிட்டியிலும் தரமான காராக இருக்கிறது இனோவா. பராமரிப்புச் செலவுகளைப் பொருத்தவரையில் இனோவா அதிகம் செலவு வைக்காத கார். மைலேஜும் அதிகம்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

சுதா ராஜன், தாம்பரம்.

மஹிந்திரா ஸைலோ கார் வாங்கலாமென முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், இந்த கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் அதிகமாக விற்பனையில் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இதன் மைலேஜும் குறைவாக இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா? ஸைலோவை வாங்கலாமா?

உங்கள் நண்பர்கள் சொல்வதில் உண்மையில்லை. மஹிந்திரா ஸைலோவில் மைலேஜ் பிரச்னைகள் எதுவும் இல்லை. இது நகருக்குள் லிட்டருக்கு 10 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 13.1 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது. மேலும், இந்த கார் டிராவல்ஸ் மார்க்கெட்டில் அதிகமாக விற்பனையாகிறது. டிராவல்ஸ் மார்க்கெட்டில் ஒரு கார் அதிகம் விற்பனையாகிறது என்றாலே, அதன் மைலேஜ் அதிகமாகத்தான் இருக்கும். மைலேஜ் குறைவான கார்களை டிராவல்ஸ்காரர்கள் அதிகம் வாங்கமாட்டார்கள். யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிக ஸைலோக்கள் இருப்பதற்கும் டிராவல்ஸுகள்தான் காரணம். ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 30 - 35,000 கி.மீ. தூரம் பயன்படுத்திவிட்ட பிறகு இந்த கார்களை அவர்கள் விற்கத்தான் பார்ப்பார்கள். காரணம், 35,000 கி.மீ ஓடிய கார்கள் பராமரிப்புச் செலவுகள் அதிகம் வைக்கும்.

யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஸைலோ விற்பனைக்கு வந்தாலும், இது குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். பழைய கார் மார்க்கெட்டிலும் நல்ல விலைக்கே ஸைலோ விற்பனை செய்யப்படுகிறது!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

சுப்புராம், கோவில்பட்டி.

நான் மாருதி ஸ்விஃப்ட் காரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது 100 கி.மீ வேகத்தைத் தாண்டினாலே ஸ்டீயரிங் வீல் தடதடவென ஆட ஆரம்பித்து விடுகிறது. ஸ்டீயரிங் ஆட்டத்துக்கு என்ன காரணம்? இன்ஜினில் ஏதும் பிரச்னை இருக்குமா?

கார் வாங்கி ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது என்பதால், இன்ஜினில் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. வீல் பேலன்ஸிங் சரியாகச் செய்தாலே இந்த ஆட்டம் தானாக நின்றுவிடும். முதலில் காரை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லுங்கள்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

தனசேகர் ஷங்கர், மெயில்.

நான் 2006-ம் ஆண்டு முதல் ஹோண்டா யூனிகார்ன் பைக்கை பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய நண்பன் சமீபத்தில் என்னுடைய பரிந்துரையின்படி யூனிகார்ன் டேஸ்லர் பைக்கை வாங்கினான். இரண்டு பைக்குகளையும் ஓட்டிப் பார்த்ததில் யூனிகார்னைவிட யூனிகார்ன் டேஸ்லர் சிறப்பாக இல்லை என்பது என் கருத்து. யூனிகார்ன் டேஸ்லரில் பவர் அதிகம் இல்லாதது போல் உணர்கிறேன். மேலும், கிக் ஸ்டார்ட் இல்லை என்பதோடு, பேட்டரியும் வீக்காக இருப்பதால் ஸ்டார்ட் செய்ய அதிகமுறை பட்டனை அழுத்த வேண்டியிருக்கிறது. நான் சொல்வது சரியா?

யூனிகார்னைவிட புதிய யூனிகார்ன் டேஸ்லர் 0.7 தீலீஜீ சக்தி அதிகம். பர்ஃபாமென்ஸில் இந்த பைக் முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனால், பழைய யூனிகார்னில் இருந்த ஓட்டுதல் தரம், புதிய யூனிகார்னில் இல்லை என்பதுதான் உண்மை. யூனிகார்னில் இருக்கும் பேட்டரியைவிட பவர்ஃபுல்லான 12 வோல்ட் - 4 ஆம்பியர் ஹவர்ஸ், மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரியைக் கொண்டிருக்கிறது யூனிகார்ன் டேஸ்லர். இதனால் பைக்கை ஸ்டார்ட் செய்வதில் பொதுவாக பிரச்னை இருக்காது. ஆனால், உங்கள் நண்பருடைய பைக்கை செல்ஃப் ஸ்டார்ட் செய்ய நீண்ட நேரம் பிடிக்கிறது என்றால், பேட்டரியை செக் செய்வது நல்லது!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

'டொயோட்டா எட்டியோஸ் லிவா, ஏப்ரல் மாதம் ரிலீஸாகும்’ என்று 'மோ.வி’ பிப்ரவரி 2011 இதழில் செய்தி வெளியிட்டிருந்தீர்கள். திட்டமிட்டபடி லிவா ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வருமா? டீசல் இன்ஜின் இருக்குமா?

நவீன், கோவை.

டொயோட்டா நிறுவனம் எட்டியோஸ் லிவாவை முதலில் ஏப்ரல் மாதம்தான் விற்பனைக்குக் கொண்டுவர திட்டமிட்டிருந்தது. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டியோஸ் செடான் காருக்கு, இப்போது 6-8 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருப்பதால், எட்டியோஸ் லிவாவை ஜூன் மாதம் விற்பனைக்குக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது டொயோட்டா. வெயிட்டிங் பீரியட் குறைப்பதற்காக மாதத்துக்கு 2500 கார்கள் என்றிருக்கும் இப்போதைய உற்பத்தியை, 5,000 கார்களாக உயர்த்த இருக்கிறது டொயோட்டா. இதனால், ஜூன் மாதத்தில் இருந்து லிவாவை டொயோட்டா கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது. முதலில் 80 bhp சக்தி கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையே அறிமுகம் செய்ய இருக்கிறது. டீசல் இன்ஜின் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டுதான் விற்பனைக்கு வரும்.  

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

டீசல் மிட் சைஸ் கார் வாங்க வேண்டும். என்னுடைய சாய்ஸ் ஃபியட் லீனியா. பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு வசதிகளும் அதிகமாக இருக்கிறது. ஆனால், என்னுடைய நண்பர், 'ஃபோர்டு ஃபியஸ்டா வாங்குவதுதான் பெஸ்ட்’ என்கிறார். நான் எந்த காரை வாங்கலாம்?

ஸ்டீஃபன், திருநெல்வேலி.

லீனியாவா, ஃபியஸ்டாவா எனும்போது லீனியா வாங்குவதே நல்ல சாய்ஸ். ஸ்டைலான, வசதிகள் அதிகம் கொண்ட கார் என்பது மட்டும் காரணமில்லை. பில்டு குவாலிட்டியில் லீனியாதான் பெஸ்ட். ஓட்டுதல் மற்றும் கையாளுமையிலும் லீனியா நம்பர் ஒன். பர்ஃபாமென்ஸ் அசத்தும் வகையில் இல்லை என்றாலும், போதுமான பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜைத் தருகிறது லீனியா. பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது என்றாலும் ஸ்டைல், வசதிகள், பில்டு குவாலிட்டி, மெயின்டனன்ஸ் ஆகியவற்றில் பின்தங்கிவிடுகிறது ஃபியஸ்டா.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

அதிக மைலேஜ் தரக்கூடிய பைக் வேண்டும். பஜாஜ் பல்ஸர் 135, ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர், ஹீரோ ஹோண்டா பேஸன் ப்ரோ - மூன்று பைக்குகளில் எதை வாங்கலாம்?

ராஜநாயகம், மதுரை.

மூன்று பைக்குகளில் மைலேஜ் அதிகம் தரக்கூடிய பெஸ்ட் பைக் ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர்தான். ஸ்டைல் மற்றும் நம்பகத்தன்மையிலும் சிறந்த பைக் எனப் பெயர் வாங்கியிருக்கிறது ட்விஸ்ட்டர். விலை கொஞ்சம் அதிகம் என்பதுதான் இதன் மைனஸ்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

பஜாஜ் கேடிஎம் 200 பைக்கை மார்ச் மாதம் வெளியிட இருப்பதாக 'மோ.வி’யில் படித்தேன். அந்த பைக் வெளிவருவது குறித்து எந்த சிக்னலும் இல்லையே? எப்போது கேடிஎம் 200 பைக் விற்பனைக்கு வரும்?

வசந்த், திருப்பூர்.

கேடிஎம் பைக்குகளை பஜாஜ் தனது சக்கான் தொழிற்சாலையில் இருந்து தற்போது ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் கேடிஎம் பைக்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கிறது பஜாஜ். கேடிம் 200 பைக் எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வந்துவிடும்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

சிரில், மன்னார்குடி.

நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹோண்டா ஷைன் பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். ஆரம்பத்தில் இந்த பைக், லிட்டருக்கு 50 கி.மீ-தான் மைலேஜ் தந்தது. இப்போது அதுவும் குறைந்து 40-45 கி.மீ-தான் மைலேஜ் தருகிறது. நான் ஒழுங்காக சர்வீஸ் செய்து வருகிறேன். மைலேஜை அதிகரிக்க என்ன செய்யலாம்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

ஹோண்டா ஷைன் பொதுவாக 60 கி.மீ-க்கு மேல் மைலேஜ் தரும். 40-45 கி.மீ-தான் மைலேஜ் தருகிறது என்றால், பைக்கில் ஏதோ பிரச்னை இருக்கிறது. உடனடியாக சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு போய் ஸ்பார்க் பிளக், ஏர் ஃபில்டர், கார்புரேட்டர், இன்ஜின் வரை செக் செய்யச் சொல்லுங்கள்.