>>சுரேன், மோ.அருண் ரூப பிரசாந்த் >>ச.இரா.ஸ்ரீதர்

கவாஸாகி நின்ஜா பைக்குகளுக்கான 'கிரீன் டே-2011’ நிகழ்ச்சி, சென்னை

. இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கில் கடந்த மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது. விற்பனைக்கு வந்து ஓராண்டுக்குள்ளாகவே ஆயிரம் பைக்குகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை புரிந்திருப்பதுதான் அன்றைய விழாவின் ஹைலைட்!.
ஆயிரம் பைக்குகளின் விற்பனை சாதனையைக் கொண்டாடும் வகையில், கவாஸாகி நின்ஜா வைத்திருக்கும் 50 வாடிக்கையாளர்களை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்குக்கு வரவழைத்து, ரேஸிங் அனுபவத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

ரேஸ் டிராக்கில் பைக்கை ஓட்டப் போகிறோம் என்ற சந்தோஷம் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிந்தது. ''என்னதான் ஹைவேயில் பைக் ஓட்டினாலும், நின்ஜா போன்ற சூப்பர் ஸ்போர்ட் பைக்கை ரேஸ் டிராக்கில் ஓட்டும் அனுபவமே தனி! இங்கே பைக் ஓட்டுவதற்காக உத்திரப்பிரதேசத்தில் இருந்து பைக்கிலேயே கிட்டத்தட்ட 2,170 கி.மீ பயணம் செய்து வந்திருக்கிறேன்'' என்கிறார் நின்ஜா வெறியரான பங்கஜ்!

இந்த நின்ஜா ரைடுக்காக சென்னை வந்திருந்த பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் எரிக் வாஸிடம் பேசிய போது, ''கவாஸாகிக்கும் - பஜாஜுக்குமான பந்தம் 25 ஆண்டுகளாகத் தொடர்கிறது. நின்ஜாவின் விற்பனை சாதனை, எங்கள் கூட்டணி வெற்றி நடை போடுவதற்கு ஒரு சாட்சி. நின்ஜா போன்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் டிரைவிங் தரத்தை, ரேஸ் டிராக்கில்தான் முழுமையாக உணர முடியும். அதனால்தான் வடக்கில் இருந்து பல நின்ஜா வாடிக்கையாளர்களிடம், 'உங்கள் சிங்கத்தை இங்கே சீற

விடுங்கள்’ என அழைத்து வந்திருக்கிறோம்'' என்றவர், ''தெற்கில் இருக்கும் அளவுக்கு ரேஸ் பற்றிய விழிப்பு உணர்வு வடக்கில் இல்லை. டெல்லியில் இந்த ஆண்டு ஃபார்முலா-1 ரேஸ் டிராக் திறக்கப்பட்டதும் இந்த நிலை மாறும் என நம்புகிறோம். அதன் பிறகு, எங்கள் விற்பனையும் எகிறும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார் வாஸ்.

250 சிசி பைக்குகளுக்கான போட்டி, இந்த ஆண்டு சற்று கடுமையாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். 250 சிசி மார்க்கெட்டில் பைக்குகளைக் களமிறக்க முன்னணி நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதில் நின்ஜாவுக்கான முக்கியப் போட்டியாக அனைவரும் கருதுவது ஹோண்டா சிபிஆர்-250ஆர். கவாஸாகி டெஸ்ட் டிரைவரான மசாயூகி இனோவிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ''உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் 250 சிசி பைக் நின்ஜாதான். இந்தியாவில் எத்தனை பைக் வந்தாலும், மல்ட்டி சிலிண்டர் பைக் நின்ஜா மட்டுமே! அதன் பர்ஃபாமென்ஸும் ஃபுல்லிங் பவரும் வேறு எந்த பைக்காலும் பீட் செய்ய முடியாதது. நின்ஜாவின் பர்ஃபாமென்ஸையும் யாரும் முந்த முடியாது!'' என படபடவென பொரிந்து தள்ளினார்.

ரேஸ் டிராக்குக்கு வந்திருந்த 50 கவாஸாகி வாடிக்கையாளர்களில், சென்னையைச் சேர்ந்த சுப்ரீத் கவுர் மட்டுமே பெண். நின்ஜாவின் பர்ஃபாமென்ஸை ரேஸ் டிராக்கில் அளந்து கொண்டு இருந்த சுப்ரீத் கவுரிடம் பேசினோம். ''என்னுடைய அப்பா, அண்ணன் இருவருமே ரேஸ் ஆர்வலர்கள். சின்ன வயசுல இருந்தே ரேஸ் பைக் மேல்தான் காதல். காலேஜுக்கு தினமும் டிராஃபிக்ல நின்ஜா ஓட்டிச் செல்லும் எனக்கு, இன்று டாப் ஸ்பீடில் ரேஸ் டிராக்கில் பறந்ததை மறக்கவே முடியாது'' என்ற சுப்ரீத் கவுரின் டாப் ஸ்பீடு 180 கி.மீ.

மதுரையில் இருந்து வந்திருந்தார் முரளி கிருஷ்ணா. ''அதிகமாக விளம்பரம் செய்யப்படும் பைக்குகளுக்கு மட்டுமே மதுரை போன்ற நகரங்களில் மவுசு அதிகம். ஆனால், நான் நின்ஜா எப்போது இந்தியாவுக்கு வரும் என இரண்டு ஆண்டுகளாகக் காத்திருந்து வாங்கினேன். நின்ஜா ஓட்டுவதற்கான சரியான சாலைகள் மதுரையில் இல்லை. அதனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்வேன். இப்போதும் மதுரையிலிருந்து நின்ஜாவிலேயேதான் சென்னை வந்திருக்கிறேன். ரேஸ் டிராக்கில் ஓட்டிய பிறகு நின்ஜாவின் மீதான பாசம் இன்னும் கூடியிருக்கிறது!'' என்று பரவசப்படுகிறார் முரளி கிருஷ்ணா.

நின்ஜா காதலர்களை ஒன்று திரட்டிய பஜாஜ் நிறுவனத்துக்கு 'விர்ர்ர்ரூம்’ சத்தத்தாலேயே அனைவரும் நன்றி சொன்னார்கள்!