>>தமிழ்

''உங்களுக்குக் குறைவாகத் தெரிந்த விஷயத்தை நிறைவாகச் சொல்வதுதான் புகைப்படக் கலை!'' என்று சொல்லும் தனபால், துபாயின் பெரிய புகைப்பட நிபுணர்களில் ஒருவர். டொயோட்டா, ஹோண்டா, லெக்ஸஸ், மஸ்தா என்று பல கார் நிறுவனங்களின் விளம்பர ஏஜென்ஸிகளுக்கு ஆஸ்தான போட்டோகிராபராக இருந்தவர். கார் நிறுவனங்கள் போலவே, தனபால் எடுக்கும் புகைப்படங்களும் 'செம க்ளாஸ்’ ரகம்தான்! ''என் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஒரு கதை உண்டு!'' என்று சொல்லும் தனபாலின் ஆல்பத்தில் இருந்து சில!

இது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் V8. இந்தியாவில் சுமார் 1 கோடிக்கு விற்பனை செய்யப்படும் இந்த கார், துபாய் போன்ற நாடுகளில் 35 லட்சம்தான்! வெண்ணெயில் கத்தி இறங்குமே... அந்த மாதிரி சொகுசான அனுபவத்தைக் கொடுக்கும். பாலைவனப் பயணங்களுக்கு ஏற்ற காரும்கூட! கடுமையான மணற்புயல், பாறைகள் என்று எங்கு பயணித்தாலும், ஆக்ஸிலரேட்டரை 'மிதி... மிதி’ என்று மிதிக்க வேண்டியதில்லை. என்னுடைய 'செவர்லே ட்ரெயில் ப்ளேஸர்’ காரில் சேஸ் பண்ணி எடுத்த படம் இது.

இது டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் லேட்டஸ்ட் 'வி.எக்ஸ்-ஆர்’. துபாயில் இதன் விலை கிட்டத்தட்ட 25 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது (இந்தியாவில் 75 லட்சம்). நான் ரொம்பக் கஷ்டப்பட்டும் இஷ்டப்பட்டும் எடுத்த படம். காரின் பின்னணியில் பாறைகளும், மணலும் ஒருசேர பின்னணியாக இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு காட்சியைக் கற்பனை செய்து கொண்டு, பல நாட்கள் தேடிக் கண்டுபிடித்த ஸ்பாட் இது. இதை ஓட்டி வந்த டயர் தடம் தெரிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் 'லோ ஆங்கிளில்’ இருந்து எடுத்தது.

லெக்ஸஸ் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் லக்ஸுரி கார் ES 300. சிட்டியில் ஓட்ட ஏற்ற கார். துபாய் நெடுஞ்சாலையில், குறைந்தது 140 கி.மீ-க்கு மேல்தான் பயணிப்பார்கள். துபாயின் படகு கார் இதுதான். காரின் உள் மற்றும் வெளித்தோற்றம் ஒரே நேரத்தில் தெரியுமாறு எடுத்த ஷாட்!

துபாயில் பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் பயன்படுத்துவது ஹோண்டா சிவிக்தான். நம்ம ஊர் ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டும் என்றால், இது அங்கே வெறும் 7 லட்ச ரூபாய்தான். காரில் புதிதாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு மறு அறிமுகம் செய்தபோது, ஒரே புகைப்படத்தில் அத்தனை மாற்றங்களும் தெரிய வேண்டும் என்று விரும்பினேன். முன் பக்க க்ரில், காரின் பக்கவாட்டு டிசைன், ஃபாக் லேம்ப் என அத்தனையும் ஹைலைட்டாகத் தெரிய வேண்டும் என்று மெனக்கெட்டதில், லைட்டிங் செய்வதற்கு மட்டும் ஒன்றரை நாள் செலவிட்டு இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்.

இதுவும் ஹோண்டா சிவிக்தான். இது என்னுடைய டேஸ்ட்டுக்காக எடுத்த புகைப்படம். படத்தில் இருப்பது, 'கறுப்பு சிவிக்’ என்று நீங்கள் நினைத்தால், அது எனக்குக் கிடைத்த வெற்றி! பக்கத்தில் மின்னும் அதே சில்வர் நிற சிவிக்தான் இதுவும். இந்தப் படத்தை எடுக்க நான் எடுத்துக் கொண்டது வெறும் ஐந்து நிமிடங்கள்தான்!

டொயோட்டா ரேவ்-4. இதுதான் டொயோட்டாவின் விலை குறைவான எஸ்யூவி. ஆல் டைம் ஃபோர் வீல் டிரைவான இது ஆஃப் ரோடுக்கும் சரி; சிட்டி ரைடுக்கும் சரி... ஸ்மூத்தான டிரைவுக்கு கியாரன்டி. 2 லிட்டர் இன்ஜின் என்பதால், எஸ்யூவி கார்களிலேயே அதிக மைலேஜ் தரக் கூடிய காரும் இதுதான்.

என்ன பார்க்கிறீர்கள்! இது நம்ம ஊர் தண்டர்பேர்டுதான். பைக்குகளில் என் ஃபேவரைட் சாய்ஸ் இதுதான்! ஜாலியாக கொடைக்கானல் ரைடு போனபோது சும்மா க்ளிக்கிய ஷாட் இது!