>>சண்.சரவணக்குமார் >> 'ப்ரீத்தி’கார்த்திக்

யமஹாவும் எஸ்கார்ட்ஸ் நிறுவனமும் இணைந்து முதன்முதலில் உருவாக்கிய ஆர்டி-350 பைக்குக்குப் பிறகு, 100 சிசி செக்மென்ட்டில் அறிமுகம் செய்த பைக் ஆர்.எக்ஸ்-100. 1985-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும், தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது 1986-ல்தான். ஆரம்பத்தில் ஜப்பானில் இருந்து உதிரி பாகங்களாக வரவழைக்கப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்துதான் விற்பனை செய்யப்பட்டது இந்த பைக். இதன் முதல் தயாரிப்பில் முன் பதிவு செய்து வாங்கிய ஆர் எக்ஸ்-100 பைக்கை இன்றளவும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார் திருச்சி சிவராமகிருஷ்ணன்.

''ஆர்டி 350 பைக்கின் ரசிகன் நான். அதன் சாகசத்தைக் காண்பதற்காகவே சோழாவரம்

. ரேஸ் போட்டிகள் நடக்கும்போது தவறாமல் ஆஜராகி விடுவேன். ஆர்.எக்ஸ்-100 புக்கிங் ஆரம்பித்தபோது, வெறும் '30,000 பைக்குகள்தான் முதல்கட்டமாகத்.
தயாரிக்கப்படுகிறது. முதலில் வருபவர்களுக்குத்தான் முன்னுரிமை’ என்று சொல்லப்பட்டது. ஆனாலும், நான் கடைசி நாளில்தான் புக்கிங் செய்தேன். திருச்சியில் இருந்து 2,000 ரூபாய்க்கு டிடி எடுத்து அனுப்பும்போது, 'கிடைக்குமா கிடைக்காதா’ என்ற தவிப்பு ஏற்பட்டதை இப்போது நினைத்தாலும் மறக்க முடியாது. எனது சீனியாரிட்டி நம்பர் 248. முப்பதாயிரம் பேர்களில் 248 வது நபர். பைக்கின் விலை அப்போது 15,155 ரூபாய்.

டெலிவரி எடுத்த நாளில் இருந்து இன்றுவரை நானே பைக்கைப் பிரித்து சர்வீஸ் செய்வது, குரோமியம், அலுமினியம் பெயின்ட் செய்வது என பராமரித்துக் கொண்டு இருக்கிறேன். பைக்குக்கு இந்த சிவப்பு கலர் நான் அடித்ததுதான். ஆர்.எக்ஸ்-100 தயாரிப்பு நிறுத்தப்பட்ட பிறகு சென்னை, சிங்கப்பூரில் இருந்து இதற்குத் தேவையான உதிரி பாகங்களை எப்படியாவது வாங்கிவிடுவேன்!'' என்று நெகிழ்கிறார் சிவராம கிருஷ்ணன்!