கார்ஸ்
Published:Updated:

பவர்ஃபுல் ஹெட்லைட்.. டெரரர்ஃபுல் வொயர்லைஃப்!

செல்ஃப் மெக்கானிசம்

ஹெட்லைட் என்பது வாகனத்துக்குக் கண்கள் போன்றவை. இரவில் மட்டுமல்ல... பகலிலும் சிக்னல் செய்வதற்காகத் தேவைப்படும். இரவு நேரப் பயணங்களில் ஹெட்லைட் வேலை செய்யவில்லை என்றால், பயணத்தைத் தொடர முடியாது. ஆனால், ஹெட்லைட் பல்ப் பொருத்துவது எப்படி என்பது நமக்குத் தெரிந்திருந்தால், அவசர நேரத்தில் ஆபத்பாந்தவனாக அது உதவும். புதிய கார் வாங்கும்போது, கார் நிறுவனமே ஸ்பேர் பல்புகளையும் ஃப்யூஸ்களையும் வழங்கும். பயணங்களின் போது ஹெட்லைட் ஃப்யூஸ் போய்விட்டால், நீங்களே மாற்றிக்கொள்ளலாம். மேலும், முழுமையாகப் பயன்படுத்தப்படும் காரின் ஹெட்லைட் பல்புகள், 6 முதல் 10 மாதங்கள் வரை உழைக்கும். மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் ஹெட்லைட் பல்ப் மற்றும் ஃப்யூஸ் போன்றவற்றை எப்படி மாற்றுவது எனச் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த கார் மெக்கானிக் கார்த்திகேயன்.

பவர்ஃபுல் ஹெட்லைட்.. டெரரர்ஃபுல் வொயர்லைஃப்!

ட்லைட் ஒளிரவில்லை என்றால், மூன்றே காரணங்கள்தான். ஒன்று, பல்ப் ஃப்ளெமென்ட் விலகிப்போயிருக்கும். அல்லது பானெட் ஃப்யூஸ் கேரியரில் உள்ள ஃப்யூஸ் செயலிழந்திருக்கும். இல்லையெனில், ரிலே பாக்ஸில் ஃப்யூஸ் செயலிழந்துபோயிருக்கும். முதல் இரண்டு பிரச்னை எழுந்தால் நாமே சரிசெய்துகொள்ள முடியும். ரிலே பாக்ஸை, மெக்கானிக் மட்டுமே சரிசெய்ய முடியும்.

பவர்ஃபுல் ஹெட்லைட்.. டெரரர்ஃபுல் வொயர்லைஃப்!

பானெட்டைத் திறந்தால், ஹெட்லைட் பின் பக்கம் ரப்பர் புஷ் போன்ற கவர், ஹெட்லைட்டை மூடியிருக்கும். அதை லேசாகப் பின்னால் இழுத்துத் திருகி வெளியே எடுக்கலாம். உள்ளே பல்ப், ஸ்பிரிங் லாக்கில் பொருத்தப்பட்டு இருக்கும். லாக்-ஐ கவனமாக எடுத்துவிட்டு, பல்பை வெளியே எடுக்க வேண்டும். பல்ப் ஃப்ளெமென்ட் விடுபட்டு இருந்தால், புதிய பல்ப்பைப் பொருத்தி, கவனமாக ஸ்பிரிங் லாக் போட்டு ரப்பர் கவரைப் பொருத்த வேண்டும். பல்ப் சரியாக இருந்தால், பானெட் கம்பார்ட்மென்ட்டில் பேட்டரிக்கு அருகே இருக்கும் ஃப்யூஸ் பாக்ஸைச் சோதிக்கவும். பாக்ஸின் மூடியை அகற்றினால், ஹெட்லைட், ஹாரன் எனத் தனித்தனியாக ஃப்யூஸ்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில், ஹெட்லைட் ஃப்யூஸை எடுத்துச் சோதித்துப் பாருங்கள். அது பழுதடைந்து இருந்தால், புதிய ஃப்யூஸ் பொருத்துங்கள். இப்போது... ஹெட்லைட் ரெடி!

பவர்ஃபுல் வெளிச்சம் வேண்டும் என்று அனைவரும் விரும்புவது சகஜம்தான். ஆனால், உங்கள் காரின் மேனுவலைக் கவனமாகப் படியுங்கள். அதில், எவ்வளவு வாட்ஸ் பல்ப் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை மட்டுமே பொருத்த வேண்டும். அதிகப்படியான வாட்ஸ் கொண்ட பல்புகளைப் பயன்படுத்தினால்,  வொயர் மின்சாரத்தின் அளவு தாங்காமல், இளகி தீப்பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் கவனம் தேவை.

பவர்ஃபுல் ஹெட்லைட்.. டெரரர்ஃபுல் வொயர்லைஃப்!