Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:
மோட்டார் கிளினிக்

தீபக், சென்னை-37.

மோட்டார் கிளினிக்

புதிதாக ஸ்கூட்டர் வாங்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன். ஹோண்டா  ஆக்டிவா அல்லது சுஸ¨கி ஆக்ஸஸ்  - இரண்டில் எந்த ஸ்கூட்டரின் மைலேஜ் அதிகம்? பெர்ஃபாமென்ஸ் எப்படி?

மோட்டார் கிளினிக்

ஹோண்டா ஆக்டிவாவின் இன்ஜின் 110 சிசி திறன்கொண்டது. சுஸ¨கி ஆக்ஸஸ் 125 சிசி திறன்கொண்டது. சிசி அளவில் இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தாலும், பவரில் இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. 8 bhp சக்திகொண்ட ஆக்டிவா 0-60 கி.மீ வேகத்தை 10.16 விநாடிகளில் தொடுகிறது. 8.6 bhp சக்தி கொண்ட ஆக்ஸஸ், இதே வேகத்தை 8.9 விநாடிகளில் கடக்கிறது. பெர்ஃபாமென்ஸில் ஆக்டிவாவைவிட சற்று அதிகமாக இருந்தாலும், மைலேஜில் ஆக்டிவாவைவிட விட ஆக்ஸஸ் மிகவும் பின்தங்கியிருக்கிறது. சுஸ¨கி ஆக்ஸஸ், நகருக்குள் லிட்டருக்கு 35.5 கி.மீ மைலேஜ் தருகிறது. ஆக்டிவா கிட்டத்தட்ட 10 கி.மீ அதிகமாக, நகருக்குள் 44 கி.மீ மைலேஜ் தருகிறது. மைலேஜில் ஆக்டிவாதான் பெஸ்ட்!

பெஞ்சமின், மதுரை-

மோட்டார் கிளினிக்

என் அப்பா, அம்மாவுக்குத் திருமண நாள் பரிசாக, புதிய கார் வாங்கித் தரலாம் எனத் திட்டமிட்டு இருக்கிறேன். நகருக்குள்தான் பயணிப்பார்கள் என்பதால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஹோண்டா பிரியோ ஆட்டோமோட்டிக் அல்லது நிஸான் மைக்ரா ஆட்டோமேட்டிக் - இந்த இரண்டு கார்களில் எதை வாங்கலாம்?

ஹோண்டா பிரியோவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை விட, நிஸான் மைக்ராவின் சிவிடி கியர்பாக்ஸ், பெர்ஃபாமென்ஸில் மிகச் சிறந்தது. மேலும், பிரியோவைவிட மைக்ராவின் மைலேஜும் அதிகம். பிரியோவைவிட மைக்ராவை வாங்குவதே நல்ல சாய்ஸ்!

வி.நந்தகுமார், ஈரோடு.

மோட்டார் கிளினிக்

புதிதாக எஸ்யூவி வாங்கலாம் என இருக்கிறேன். மஹிந்திரா எக்ஸ்யூவி 500 அல்லது ரெனோ டஸ்ட்டர் - இரண்டில் எதை வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்

ரெனோ டஸ்ட்டரைவிட, மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரில் அதிக ஆட்கள் பயணிக்க முடியும் என்பதுதான் பலம். மேலும், பார்ப்பதற்கும் பிரம்மாண்டமான காராக இருக்கிறது எக்ஸ்யூவி 500. ரெனோ டஸ்ட்டரில் 5 பேர்தான் பயணிக்க முடியும். ஆனால், இன்ஜின் மற்றும் பில்டு குவாலிட்டியில் டஸ்ட்டரே சிறந்த கார். அதிக மைலேஜ் தரக்கூடிய இன்ஜின், சிறப்பான ஓட்டுதல் தரம் என்பதைத் தாண்டி, அதிக நம்பகத்தன்மை வாய்ந்த கார் ரெனோ டஸ்ட்டர்!

விஜயேந்திரன், திருப்பூர்.

மோட்டார் கிளினிக்

நான் புதிதாக மிட் சைஸ் கார் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு, பின் இருக்கையில் அதிக இடம் இருக்க வேண்டும். அதனால், நிஸான் சன்னி வாங்கலாம் என நினைத்தேன். நண்பர்கள் சன்னியைவிட கொஞ்சம் ஸ்டைலான, அதே இன்ஜின்கொண்ட ரெனோ ஸ்காலா வாங்கலாம் எனச் சொல்கிறார்கள். சன்னி, ஸ்காலா - இரண்டு கார்களிலுமே டீசல் இன்ஜின் கொண்ட மிட் வேரியன்ட்டைத்தான் பார்த்திருக்கிறேன். சன்னியைவிட ஸ்காலா 22,000 ரூபாய் குறைவாக இருக்கிறது. இரண்டு கார்களில் எதை வாங்கலாம்? இரண்டில் எதற்கு நல்ல ரீ-சேல் வேல்யூ இருக்கிறது?

மோட்டார் கிளினிக்

இரண்டு கார்களிலுமே இட வசதி அதிகம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேபோல், இரண்டு கார்களிலும் இருப்பது ரெனோவின் டீசல் இன்ஜின் என்பதால், மைலேஜிலும் குறைவில்லை. லிட்டருக்குப் பொதுவாக 16 கி.மீ வரை இரண்டு கார்களுமே மைலேஜ் தரும். பெர்ஃபாமென்ஸிலும் இரண்டு கார்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. சன்னி வாங்கலாமா அல்லது ஸ்காலா வாங்கலாமா என்பதை உங்கள் ஏரியாவில் இருக்கும் டீலர்ஷிப்பைப் பொறுத்து முடிவு செய்யுங்கள். ரீ-சேல் வேல்யூவைப் பொறுத் தவரை இரண்டு கார்களுக்குமே நல்ல ரீ-சேல் மதிப்பு இல்லை என்பதுதான் உண்மை. இந்த செக்மென்ட்டில் வெர்னா, வென்ட்டோ ஆகிய கார்களுக்குத்தான் ரீ-சேல் மதிப்பு அதிகம்.

பிரபாகர், ராஜபாளையம்.

பஜாஜ் பல்ஸர் 200

மோட்டார் கிளினிக்

என்எஸ் பைக் வாங்கலாம் என்பது என் முடிவு. ஆனால், இந்த பைக்கில் 3 ஸ்பார்க் பிளக் இருப்பதோடு, கிக் ஸ்டார்ட்டர் இல்லை. இதனால், பேட்டரிக்குக் கூடுதல் சுமையாக, அடிக்கடி ஸ்டார்ட் ஆகாமல் நின்றுவிடுமோ எனச் சந்தேகமாக இருக்கிறது? உங்களின் ஆலோசனை தேவை.

மோட்டார் கிளினிக்

3 ஸ்பார்க் பிளக் இருந்தாலும், இது தனி இக்னீஷன் காயில் மூலம் இயங்குகிறது. இதற்கும் பேட்டரிக்கும் சம்பந்தம் இல்லை. மேலும் இப்போது விற்பனைக்கு வரும் பல பைக்குகளில் கிக் ஸ்டார்ட்டர் இல்லை. பவர்ஃபுல் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருப்பதால், அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச்னை வரும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

உமர் ஃபாரூக், திருச்சி.

மோட்டார் கிளினிக்

நான் மாருதி எஸ்டீம் வைத்திருக்கிறேன். இதில் பின் பக்கம் ஏ.சி வென்ட் பொருத்த எவ்வளவு செலவாகும்?

காரின் பின் இருக்கைகளுக்கு மேலே, காரின் மேற்கூரையில் ஏ.சி வென்ட் பொருத்த முடியும். இதற்கு 12,000 - 15,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், கூடுதல் ஏ.சி வென்ட் பொருத்துவது, இன்ஜினுக்குச் சுமையைக் கூட்டும் என்பதால், காரின் மைலேஜ் கணிசமாகக் குறையும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பிரவீன், தாம்பரம்.

மோட்டார் கிளினிக்

கொஞ்சம் பவர்ஃபுல்லான, பெரிய பைக் வாங்கலாம் என இருக்கிறேன். ஹோண்டா சிபிஆர் 250ஆர் அல்லது கேடிஎம் டியூக் 200 - இரண்டில் எந்த பைக்கை வாங்கலாம். நான் நகருக்குள்தான் அதிகம் பயணிப்பேன். எப்போதாவது நெடுஞ்சாலைப் பயணமும் இருக்கும். உங்களுடைய சாய்ஸ் என்ன?

மோட்டார் கிளினிக்

நகருக்குள்தான் அதிகம் பயணம் செய்வீர்கள் என்றால், கேடிஎம் டியூக் 200 பைக் நல்ல சாய்ஸ். சிபிஆர் 250ஆர் ஸ்போர்ட்டி பைக் என்பதால், குனிந்து ஓட்ட வேண்டியிருக்கும். நகருக்குள் அதிகம் பயணம் செய்யும்போது, இது நாளடைவில் முதுகு வலியை ஏற்படுத்தும். டியூக் நேக்கட் ஸ்ட்ரீட் பைக் என்பதால், ரைடிங் பொசிஷன் சிறப்பாக இருக்கிறது. நகருக்குள் நீண்ட நேரம் பயணம் செய்யலாம்.