Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

6 லட்சம் ரூபாய் விலையில் பட்ஜெட் லீனியா அறிமுகம்!

மோட்டார் நியூஸ்

மாருதி டிசையர், ஃபோர்டு ஃபியஸ்ட்டா கிளாஸிக் கார்களுக்குப் போட்டியாக, லீனியா கிளாஸிக் மாடலை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஃபியட். விலை குறைந்த காரான இதில் காற்றுப் பைகள், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல் உள்ளிட்ட பல சொகுசு வசதிகள் இல்லை. 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் 75 bhpசக்திகொண்ட டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த காரின் விலை 6 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதுதான் ஷாக் சர்ப்ரைஸ். ஆனால், இந்த மாடலில் 90 bhp சக்திகொண்ட டீசல் வேரியன்ட் விற்பனைக்கு வராது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒன்றரை லட்சம் ஃபிகோ மற்றும் கிளாஸிக் கார்களைத் திரும்ப அழைத்தது ஃபோர்டு!

1,66,021 ஃபிகோ மற்றும் கிளாஸிக் கார்களைத் திரும்ப அழைத்திருக்கிறது ஃபோர்டு நிறுவனம். இந்திய ஆட்டொமொபைல் வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய ரீ-கால். 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஜூன் மாதம் வரை தயாரிக்கப்பட்ட 1,09,569 ஃபோர்டு ஃபிகோ கார்களும், 22,453 கிளாஸிக் செடான் கார்களும் சஸ்பென்ஷனில் அமைந்திருக்கும் ரியர் ட்விஸ்ட் பீம் பாகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்காகத் திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறது.

மோட்டார் நியூஸ்

2010 ஜனவரி முதல் 2010 ஆகஸ்டு வரை மற்றும் 2011 மார்ச் முதல் 2011 நவம்பர் வரை தயாரிக்கப்பட்ட 30,681 ஃபிகோ கார்களும், 3,418 கிளாஸிக் செடான் கார்களும் பவர் ஸ்டீயரிங் ஹோஸ் பகுதியில் ஏற்பட்ட பிரச்னைகளுக்காகத் திரும்ப அழைக்கப்பட்டு இருக்கின்றன.

'திரும்ப அழைக்கப்படும் அனைத்து கார்களிலும் பிரச்னை இருக்க வாய்ப்பு இல்லை. பிரச்னை இருக்கும் கார்களில் மட்டுமே சர்வீஸ் செய்யப்படும்’ என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

நீங்கள் ஃபோர்டு ஃபிகோ அல்லது கிளாஸிக் வைத்திருக்கிறீர்களா? உங்கள் வாகனத்தில் பிரச்னை உள்ளதா எனத் தெரிந்துகொள்ள, இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.

ஏப்ரில்லியா கேப்ப‌னார்டு பைக்கை வாங்கிய அஜீத்!

மோட்டார் நியூஸ்

அஜீத் சமீபத்தில் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கை வாங்கியிருந்தார். 1000 சிசி திறன்கொண்ட சூப்பர் பைக்கான இதன் சென்னை விலை, 24 லட்சம் ரூபாய். சூப்பர் பைக்கை வாங்கிய நிலையில், அடுத்து சூப்பர் டூரிங் பைக்கை வாங்கியிருக்கிறார் அஜீத். ஏப்ரில்லியாவின் டூரிங் பைக்கான கேப்பனார்டு, 1200 சிசி திறன்கொண்டது. இந்த பைக்கின் சென்னை விலை 17 லட்சம் ரூபாய்.

ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால்தான் கார் லோன்!

ஸ்டேட் பேங்க் அதிரடி!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கார் வாங்குவதற்கான குறைந்தபட்ச ஆண்டு வருமானத்தை உயர்த்தியுள்ளது. தற்போது இந்த வங்கியில் கார் லோன் வாங்க குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம். ஆனால், இனி குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும் என வங்கி அறிவித்துள்ளது.

வருகிறது ஹோண்டா மொபிலோ!

மோட்டார் நியூஸ்

ஹோண்டா பிரியோ பிளாட்ஃபார்மில் அமேஸுக்கு அடுத்தபடியாக மொபிலோ எனும் மினி எம்பிவி காரை அறிமுகப்படுத்துகிறது. மொபிலோ எம்பிவியின் ப்ரோட்டோ டைப், இந்தோனேசியா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தியது ஹோண்டா. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ ஷோவில் அறிமுகமாக இருக்கும் இந்த கார், அமேஸில் உள்ள 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது. மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் போன்ற எம்பிவி கார்களுடன் மொபிலோ போட்டி போட இருக்கிறது.

சென்னையில் துவங்குகிறது மிஷ்லின் தயாரிப்பு!

சென்னையில் மிஷ்லின் நிறுவனத்தின் மிகப் பெரிய டயர் தயாரிப்பு ஆலை விரைவில் திறக்கப்பட இருக்கிறது. உலகின் முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிஷ்லின் நிறுவனம், சென்னை திருவள்ளூர் அருகே 290 ஏக்கர் பரப்பளவில் டயர் தயாரிப்புத் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலை, நவம்பர் மாதம் முதல் செயல்படத் துவங்கும்.

வருகிறது புதிய டொயோட்டா இனோவா!

மோட்டார் நியூஸ்

டொயோட்டா நிறுவனத்தின் பெஸ்ட் செல்லர் காரான இனோவாவின் ஃபேஸ் லிஃப்ட் மாடல், விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. புதிய இனோவாவில் முன் பக்க கிரில் மற்றும் பம்பர் ஆகியவற்றின் டிசைனில் சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது. விலையைப் பொறுத்தவரை தற்போதையை இனோவாவைவிட 50,000 ரூபாய் வரை விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸாகி சூப்பர் பைக்குகளை இனி இந்தியாவிலேயே வாங்கலாம்!

ஜப்பான் கவாஸாகி நிறுவனம், தனது சூப்பர் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. நின்ஜா ZX14R, நின்ஜா ZX10R  என முதல் கட்டமாக இரண்டு பைக்குகளை முறையே 16.90 லட்சம் மற்றும் 15.70 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த பைக்குகள் ஜப்பானில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு, புனேவில் புதிதாகத் துவங்க இருக்கும் கவாஸாகியின் ஷோரூம் மூலம் விற்பனை செய்கிறது. புனேவைத் தொடர்ந்து இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ஷோரூம்களைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறது கவாஸாகி.

டட்சன் எம்பிவி ரெடி!

மோட்டார் நியூஸ்

'கோ’ காரைத் தொடர்ந்து அடுத்த எம்பிவி காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது டட்சன். நிஸானின் பட்ஜெட் பிராண்டான டட்சன் பிராண்டிலிருந்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் 'கோ’ எனும் சின்ன ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு வருகிறது. 'கோ’ காரைத் தொடர்ந்து அதே பிளாட்ஃபார்மில் எம்பிவி மற்றும் சின்ன செடான் கார் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 'கோ ப்ளஸ்’ என்ற பெயரில் புதிய எம்பிவி காரை இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியது நிஸான். கோ ஹேட்ச்பேக்கில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இந்த எம்பிவி காரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மோட்டார் நியூஸ்