
க்ளட்ச் ரைடிங், தரமற்ற எரிபொருள் என்று மைலேஜைக் குறைக்கும் பல விஷயங்கள் துவங்கி, கார் பராமரிப்பு வரை 20-ம் தேதி அன்று நடக்கவிருக்கும் பயிலரங்கில் புன்னைவனம் சங்கரமூர்த்தி பேசவிருக்கிறார்.
பெட்ரோல் விலை 86 ரூபாயைத் தாண்டிப் போய்விட்ட நிலையில்.... என்னதான் விலை உயர்ந்த கார் வைத்திருக்கிறவர்களாக இருந்தாலும்கூட... 'கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது?' என்பதைக் கவனிக்கத் துவங்கிவிட்டார்கள். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புஉணர்வு அதிகமாகிவரும் இந்தச் சூழலில், மைலேஜ் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு சில விஷயங்களில் நாம் கவனமாக இருந்தால், காரின் மைலேஜைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க முடியும்.
Mileage Tips
1. டயர்களின் காற்றழுத்தம் மேனுவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவில் இருக்க வேண்டியது அவசியம். டயர் பிரஷர் குறைந்தால்... மைலேஜும் குறையும். அது மட்டுமல்ல; இது ஓட்டுதல் அனுபவத்தையும் குறைக்கும்.
2. எந்த கியரில் என்ன வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு, அதன்படி பயணிப்பதும் மைலேஜை அதிகப்படுத்த உதவும். தவறான கியரில் தவறான வேகத்தில் கார் ஓட்டினால் மைலேஜ் மட்டுமல்ல....காரின் இன்ஜினும் கியர்பாக்ஸும்கூட பாதிக்கப்படும். ஸ்டார்ட் செய்தவுடன் காரைப் பறக்கவிடவேண்டும் என்ற எண்ணத்தில் சீறினால், மைலேஜ் நிச்சயம் குறையும்.

3. ஆக்ஸிலரேட்டரை, தேவையே இல்லாமல் அழுத்து அழுத்து என்று அழுத்தி ஓட்டுவதும்... சிக்னல் வரும்போது பிரேக் மீது ஏறி நிற்காத குறையாக காரை நிறுத்துவதும் மைலேஜே நிச்சயமாகப் பாதிக்கும். அதனால் ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் பெடல் ஆகியவற்றின் மீது முழு பலத்தைக் காட்டாமல் ஓட்டுவதுதான் சிறந்தது.
4. மைலேஜ் பாதிக்கப்படாமல் இருக்க... சீரான இடைவெளியில், காரின் வீல் அலைன்மென்ட்டை பரிசோதனை செய்வதும் முக்கியம். வீல் அலைன்மென்ட் மாறினால்...டயர்களின் தேய்மானமும் பாதிக்கப்பட்டு சீக்கிரமே டயர்களை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
5. மழை மற்றும் குளிர் காலங்களில் நிறைய பேர், ஏசியைப் பயன்படுத்தமாட்டார்கள். அது போன்றவர்கள், போக்குவரத்து சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், இன்ஜினை ஆஃப் செய்துவிடுவது நல்லது.
அது மட்டுமல்ல, க்ளட்ச் ரைடிங், தரமற்ற எரிபொருள் என்று மைலேஜைக் குறைக்கும் பல விஷயங்கள் துவங்கி, கார் பராமரிப்பு வரை 20-ம் தேதி அன்று நடக்கவிருக்கும் பயிலரங்கில் புன்னைவனம் சங்கரமூர்த்தி பேசவிருக்கிறார்.

Date: டிசம்பர் 20, 2020
Time: மாலை 04.00 - 06.00
இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்: https://bit.ly/39wCnKL
Speaker: புன்னைவனம் சங்கரமூர்த்தி, துணைத் தலைவர் (சர்வீஸ்), ஹூண்டாய் மோட்டார் இந்தியா.
நாடு முழுதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹூண்டாய் சர்வீஸ் மையங்களை நிர்வகிக்கும் பெரிய பொறுப்பில் இருப்பவர் புன்னைவனம். ஹூண்டாய் மட்டுமல்ல; மாருதி, ஃபியட் போன்ற கம்பெனிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி அனுபவத்தைச் சேகரித்தவர். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 360 டிகிரி டிஜிட்டல் சர்வீஸ், கொரோனா காலத்திற்கு ஏற்ப contactless service... ஆகியவற்றையும் நடைமுறைக்கு கொண்டு வந்தவர்.