>>எஸ்.ஷக்தி >> தி.விஜய்

க்றிஸ் பெய்ஃபெர்!

- உலகின் நம்பர் ஒன் ஃப்ரீ ஸ்டைல் பைக்கிங் சாம்பியன். கடந்த சில வாரங்களுக்கு முன்

. கோவையில் தனது பைக் தாண்டவத்தை நடத்திச் சென்றார். அந்த அதிர்வு, கோவை மண்ணில் இன்னமும் குறையவில்லை. ரெட் புல் எனர்ஜி ட்ரிங் நிறுவனம், க்றிஸ்ஸின் பைக் ஸ்டன்ட் ஷோவை கோவை கொடிசியா சாலையில் நடத்தியது.'ஹே கோவை! சி.பி. இஸ் ஆன் லைன்’ அறிவிப்பு அலறிய நொடியில், தடை தாண்டி பறந்து வந்து தரை தொடுகிறது அந்த பிஎம்டபிள்யூ 800 ஆர் பைக். தடுப்புத் தகடுகளுக்கு இருபுறமும் டெரர் காஸ்ட்யூமில் குவிந்திருக்கும் யுவன், யுவதிகள், 'ஹூர்ரே...’ என்று குரல் கொடுக்க, சட்டென்று தலை நிமிர்த்தி முத்தங்களைப் பறக்க விடுகிறார் க்றிஸ் பெய்ஃபெர்..
நாற்பது வயது இளைஞரான (!) ஜெர்மனியைச் சேர்ந்த க்றிஸ், கடந்த 15 ஆண்டுகளாக பைக் ஸ்டன்ட்டில் பின்னியெடுத்து வருகிறார். சர்வதேச அளவில் சுமார் நூறு ஷோக்களைத் தாண்டியிருக்கிறார் க்றிஸ்.

ஷாரூக்கின் ஷூட்டிங்கில் ஆரம்பித்து, எத்தனையோ சினிமா செலிபிரிட்டிகளின் நிகழ்வுகள் கோவையில் நடந்திருக்கின்றன. ஆனால், அப்போதெல்லாம் இல்லாத அளவில் இளமைப் பட்டாளம் க்றிஸ்ஸின் ஷோவுக்காகக் குவிந்திருந்தது அடடா ஆச்சரியம்! க்றிஸ்ஸை மட்டுமல்லாமல், கூட்டத்தையும் குளிர வைக்க... ஸ்லீவ் லெஸ் காஸ்ட்யூமில், சியர் கேர்ள்ஸ் அந்த ஹாட் சாலையில் கூலாக பூனை நடை காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

க்றிஸ் தனது வேலையைக் காட்டத் துவங்கும் முன்பாக, கோவையைச் சேர்ந்த 'த்ராட்லர்ஸ்’ பைக் ஸ்டன்ட் டீமின் லீடிங் பசங்களான பிஜூ, சத்யராஜ் மற்றும் ப்ரசாந்த் ஆகிய மூன்று பேரும் ரகளையாக பெர்ஃபார்ம் பண்ணினார்கள். தங்களது அதகளத்தை முடித்துவிட்டு 'த்ராட்லர்ஸ்’ பாய்ஸ் சற்றே நகர்ந்து நின்று கொள்ள... க்றிஸ்ஸின் பைக் தாண்டவமாட ஆரம்பித்தது.

மின்னல் வேகத்தில் பறந்து வந்து சட்டென ஒரு இடத்தில் முன் வீலை தரையில் குத்தி, பின் வீலை அந்தரத்தில் தூக்கி 90 டிகிரியில் பைக்கை நிற்க வைத்தவர்... அப்படியே அரை வட்டமடித்து மீண்டும் பழைய நிலைக்கு வந்தார். 'வ்வ்ர்ர்ரூரூரூம்’மென அதிவேகமாக வருபவர், சட்டென கீழே குதித்து அதே நொடியில் ஸ்டாண்டைத் தட்டி நிற்க வைத்து, பைக்கை ஆஃப் செய்துவிட்டு கண்ணடித்து கூட்டத்தைக் காலி செய்கிறார். செமி ஹைசேர் சர்க்கிள், ஃபுட் ரெஸ்டில் உட்கார்ந்த படி நோ ஹாண்டர் வீலிங், பர்ன் அவுட் என்று தரையைப் பெயர்த்தெடுத்தார்.

தனி ஆவர்த்தனத்தை முடித்துவிட்டு த்ராட்லர்ஸ் டீமின் பிஜூவை ஏற்றிக் கொண்டும், சியர்ஸ் கேர்ளை ஏற்றிக் கொண்டும் அதிரடி ஸ்டன்ட்களைச் செய்து முடித்தார்.

படு ராகிங்காக தனது ஷோவை முடித்துவிட்டு இளைப்பாறிய சில நொடிகளில் தனது மொபைலை எடுத்துப் பேசியவர், 'யாஹ்... இட்ஸ் ஓவர்! ஐ ஆம் கூல்’ என்று கூறிவிட்டு கட் செய்து விட்டார். பிற்பாடு விசாரித்ததில் தெரிந்தது; ஒவ்வொரு முறையும் டெரரான தனது ஸ்டன்ட் ஷோவை முடித்ததும், தனது குடும்பத்துக்கு போன் செய்து தான் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது க்றிஸின் சென்டிமென்டாம்! அதேபோல, ஹெல்மெட் இல்லாமல் க்றிஸ், பைக்கை தொடவே மாட்டாராம்!

தெரிஞ்சுக்கோ.... முழிச்சுக்கோ!