>>  அ.இராமநாதன்  >> ச.இரா.ஸ்ரீதர்

''கிக்கரை மிதித்து பைக்கை ஸ்டார்ட் செய்யும் சிரமம் இல்லாமல், பட்டனை

 ##~##
அழுத்தி ஸ்டார்ட் செய்யும் தொழில்நுட்பம் நமக்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அதன் பயன்பாடு குறித்து சரிவர அறிந்துகொள்ளாமல், பேட்டரியையும் சில சமயம் செல்ஃப் மோட்டாரையும் காவு கொடுத்து, காசை காலி செய்து கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து தப்ப என்ன செய்யலாம் என்பது பற்றி, தாம்பரம் சானட்டோரியத்தில் உள்ள மெக்கானிக் வெள்ளைதுரை அடித்த லெக்சர் இது...

கிக்கரை மிதிக்கும்போது, இன்ஜின் சுழன்று ஸ்டார்ட் ஆகிறது என்பது நாம் அறிந்ததுதான். நாம் பயன்படுத்தும் பைக்கில் ஒரே கிக்கரில் ஸ்டார்ட் ஆகிவிடும் என்று சொல்ல முடியாது அல்லவா? அதற்குக் காரணம், கார்புரேட்டரில் ஆரம்பித்து ஸ்பார்க் பிளக், பிஸ்டன் பொசிஷன், ஏர் இன்டேக் என அடுக்கிக்கொண்டே போகலாம். இது போன்ற பிரச்னைகள் இருக்கும் பைக்கில் செல்ஃப் மோட்டார்

செல்ஃப் ஸ்டார்ட் இம்சை!

இருந்தால், ஒருமுறை பட்டனை அழுத்திய உடனே ஸ்டார்ட் ஆகிவிட வாய்ப்பே கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

செல்ஃப் ஸ்டார்ட் சுவிட்சை அழுத்திப் பிடித்துக் கொண்டே இருப்பவர்கள், லேசாகத் தொட்டு எடுப்பவர்கள், ஆக்ஸிலரேட்டரை முறுக்கிக்கொண்டே அழுத்துபவர்கள் என செல்ஃப் மோட்டாரைப் பயன்படுத்துவதில் ஆளுக்கு ஆள், கைக்கு கை மாறுபடும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று... பைக்கில் இருப்பது, அதன் வடிவத்தில் அடங்கிவிட முடிகிற சின்ன அளவிலான பேட்டரி. காரில் இருப்பது போல பெரிய பேட்டரி அல்ல!

பைக் பேட்டரியில் குறைந்த அளவு மின்சக்தியை மட்டும்தான் சேமித்து வைக்க முடியும். 10 விநாடிகளுக்கு மேல் பட்டனை அழுத்தக்கூடாது. அப்படி ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், அரை நிமிடம் கழித்துத்தான் மீண்டும் முயற்சிக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நான்கு முறை செல்ஃப் மோட்டாரை உபயோகித்தால், பேட்டரி காலியாகிவிடும். ஸ்டார்ட் செய்த வாகனத்தில் பேட்டரி டவுன் ஆகி இருந்தால், குறைந்தது 10 கி.மீ தூரமாவது பைக்கை ஓட்டினால்தான் மீண்டும் பேட்டரி பழைய நிலைக்குத் திரும்பும்.

பொதுவாக, காலை நேரத்தில் முதல் தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்ய, கிக்கரைப் பயன்படுத்துவது பேட்டரிக்கு நலம். காரணம், இரவில் இயங்காமல் நிற்கும் இன்ஜின் மிகவும் குளிர்ந்து இருக்கும். இன்ஜின் சற்று சூடேறினால்தான் ஸ்டார்ட் ஆகும். அந்த மாதிரி சமயத்தில் செல்ஃப் சுவிட்சை திரும்பத் திரும்பத் தட்டினால், உபயோகம் இல்லாமல் மின் சக்தி வீணாகிவிடும்.

செல்ஃப் ஸ்டார்ட் இம்சை!

செல்ஃப் மோட்டாரை அதிகமாக வேலை வாங்கினாலும், அதன் காயில் பாதிக்கப்படும். பைக்கின் அனைத்து பாகங்களும் சரிவர இருக்கும்போது, ஆக்ஸிலரேட்டரை முறுக்காமல் ஒருமுறை ஜென்டிலாக அழுத்தினாலே போதும், இன்ஜின் ஸ்டார்ட் ஆகிவிடும்.

செல்ஃப் மோட்டார் இருக்கும் பைக்குகளில், முக்கியமாக அடிக்கடி கவனித்துப் பராமரிக்க வேண்டிய பாகம் பேட்டரி. பொதுவாக, எல்லா வகை பைக்குகளுக்கும் பேட்டரி ஒரே மாதிரியாக இருக்காது. சில பைக்குகளில் பேட்டரி சார்ஜ் இல்லை என்றால், சிவப்பு விளக்கு எரியும். சில பைக்குகளில் சீல்டு பேட்டரி இருக்கும். சில பைக்குகளில் எந்த அறிகுறியும் இருக்காது. மாதம் ஒருமுறையாவது பேட்டரியை பராமரிப்பது அதன் ஆயுளுக்கு நலம். இதில் அதிகமான தூரம் பைக் ஓட்டுபவர்களை ஒப்பிடும்போது குறைவான தூரம் ஓட்டுபவர்களுக்குத்தான் அடிக்கடி தொல்லை கொடுக்கிறது இந்த செல்ஃப் ஸ்டார்ட்டர். காரணம், தினமும் 5 அல்லது 6 கி.மீ தூரம் மட்டும் ஓட்டிவிட்டு பலமுறை செல்ஃப் மோட்டாரைப் பயன்படுத்துவதால், பேட்டரியில் மின்சக்தி மிகவும் குறைந்து விடுகிறது.

பேட்டரிக்கான டிஸ்டில்டு வாட்டரை (Distilled Water)மாதம் ஒருமுறை சோதித்து நிரப்ப வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் பேட்டரி விரைவிலேயே உலர்ந்து செயலிழந்து விடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு