>>சார்லஸ்

டொயோட்டாவின் புதிய சின்ன காரான எட்டியோஸ், என்ட்ரி லெவல் கார்களில் பட்ஜெட் காராக இருக்கிறது. ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கும் அவுட் டேட்டட் ஆன, ஆனால் விலைக்கேற்ற தரமான காராக இருக்கும் மஹிந்திரா லோகனின் மார்க்கெட்டிலும் போட்டி போடுகிறது எட்டியோஸ். இரண்டில் எது பெஸ்ட்?

வசதிகள்

டொயோட்டா எட்டியோஸின் அகலமான கதவுகள், காருக்கு உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் சுலபமாக்குகிறது. VX வேரியன்ட்டில் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. ஸ்டீயரிங்குக்குப் பின்புறம் டயல்கள் இல்லாமல், சென்டர் கன்ஸோலில் டயல்கள் வைக்கப்பட்டு இருப்பது, சிலருக்குப் பிடிக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது. சில நேரங்களில் இது கவனத்தை திசை திருப்புவதுதான் காரணம். ஆனால், மற்ற கார்களில் இருப்பது போல டயல்கள் புதுமையாக உள்ளன. வட்ட வடிவ குடுவைக்குள் அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் ஓடோ மீட்டர் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், எண்கள் சிறிதாக இருப்பதால், வேகமாகச் செல்லும்போது எண்களைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.

ஏ.ஸி வென்ட்டுகளும் வழக்கமான இடத்தில் இல்லை. 'காஸ்ட் கட்டிங்’ கொள்கைப்படி, ஹெட் ரெஸ்ட்டை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியாத, தட்டையான இருக்கைகளையே கொண்டிருக்கிறது டொயோட்டா எட்டியோஸ். முன் பக்க இருக்கைகளில் கால்களை நீட்டி மடக்கி வசதியாக உட்கார முடிவதோடு, தொடைக்கு சப்போர்ட் இருப்பதால், நீண்ட தூரப் பயணங்களின்போது வலி எதுவும் தெரியவில்லை. ஆனால், அட்ஜஸ்ட் செய்ய முடியாதபடி இருக்கும் உயரமான ஹெட் ரெஸ்ட், ரிவர்ஸ் எடுக்கும்போது பார்வையை மறைக்கிறது.

எட்டியோஸில் உள்ள டேஷ் போர்டு கன்ட்ரோல்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளன. பட்ஜெட் காரான இதில் சிறப்பம்சங்கள் அதிகம் இல்லை. க்ளைமேட் கன்ட்ரோல் ஏ.ஸி, எலெக்ட்ரிக் கண்ணாடிகள் ஆகியவற்றை எட்டியோஸில் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், மிடில் கிளாஸ் குடும்பங்களை மனதில் வைத்து பட்ஜெட் காராக எட்டியோஸைத் தயாரித்திருக்கும் டொயோட்டா, ஸ்போர்ட்ஸ் கார்களில் இருப்பதுபோல சிவப்பு வண்ண இருக்கைகளை இதில் ஏன் கொடுத்தது என்பதுதான் குழப்பமாக இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், சிவப்பு வண்ணத்தில் மிதக்கும் கியர் லீவர் கண்களைக் கூச வைக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பிளாஸ்டிக் பாகங்களின் தரம், இது டொயோட்டா கார் என்று சொல்லும் அளவுக்கு இல்லை.

மஹிந்திரா லோகனைப் பொறுத்தவரை, வெளித்தோற்றம் போலவே காருக்குள்ளேயும் டல்லடிக்கிறது. எட்டியோஸின் உள் பக்கத்தைவிட மிகவும் சுமாராக உள்ளது லோகனின் உள்பக்கம். முன் இருக்கைகள் உட்கார்ந்து ஓட்டுவதற்கு வசதியாக இருந்தாலும், ஸ்டீயரிங்கை அட்ஜஸ்ட் செய்யும் வசதி இல்லை. ஆனால், மஹிந்திரா லோகனின் பாகங்கள் சிறப்பாக இல்லையென்றாலும், எட்டியோஸைவிட சிறப்பாக இருக்கிறது. மேலும், லோகனின் பாகங்கள் நீடித்து உழைக்கக் கூடியதாகவும் உள்ளன.

பீஜ் வண்ண உள்பக்கம் லோகனை இன்னும் அதிக இடவசதி கொண்ட காராகக் காட்டுகிறது. ஆனால், எர்கோனாமிக்ஸில்தான் சொதப்புகிறது லோகன். காரின் உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, இண்டிகேட்டர் சுவிட்ச், ஏ.ஸி கன்ட்ரோல், டிக்கி ரிலீஸ் பட்டன் என அனைத்துமே வலது கை டிரைவிங் கொண்ட கார்களில் இருப்பதுபோல, இடப்பக்கம் இருப்பது மிகவும் அசௌகரி யத்தை ஏற்படுத்துகிறது. இது தவிர, பவர் விண்டோஸ் பட்டன்களும் ஏடாகூடமான இடத்தில் இருக்கின்றன. அவை, முன் பக்க இருக்கைகளுக்கு நடுவிலும், ஹேண்ட் பிரேக் லீவரின் பின்னாலும் வைக்கப்பட்டுள்ளன.

இடவசதி

இடவசதியில் டொயோட்டா எட்டியோஸ் முதல் இடத்தில் இருக்கிறது. கால்களை நீட்டி மடக்கி வசதியாக உட்கார முடியும் என்பதோடு, உயரமானவர்களும் பயப்படாமல் உட்காரக் கூடிய அளவுக்கு ஹெட் ரூம் அதிகமாக இருக்கிறது. பின் பக்க இருக்கையில் மூன்று பேர் எந்தவிதமான இடநெருக்கடியும் இல்லாமல் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். மேலும், சீட் அமைப்பு சாய்ந்து உட்காருவதற்கு வசதியாக இருப்பதால், நீண்ட தூரப் பயணங்களின்போது சோர்வு தெரியவில்லை.

எட்டியோஸில் காபி கப், தண்ணீர் பாட்டில் என பொருட்கள் வைக்க கார் முழுவதும் அதிக இடம் உள்ளன. சைஸில் மிகவும் பெரியதாக இருக்கும் க்ளோவ் பாக்ஸுக்குள் ஏராளமான பொருட்களை வைக்க முடியும். இது தவிர கதவு கைப்பிடிகள், சென்டர் கன்ஸோல் ஆகியவற்றில் ஃபைல், தண்ணீர் பாட்டில், சில்லறைகள் வைக்க பல இடங்கள் உள்ளன. மேலும், 595 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கிக்குள் டூருக்குச் செல்லப் போதுமான அத்தனை பொருட்களையும் அடுக்கிக் கொண்டு போகலாம்.

எட்டியோஸைவிட லோகன் அகலமாக இருந்தாலும், இடவசதி அதிகமாக இல்லை. ஆனால், ஹெட் ரூம் மற்றும் லெக் ரூமில் எட்டியோஸைப் போல வசதியாக இருக்கிறது. லோகனிலும் பின் பக்க இருக்கையில் மூன்று பேர் உட்கார்ந்து பயணிக்க முடியும். ஆனால், எட்டியோஸ் அளவுக்கு சௌகரியமாக உட்கார்ந்து பயணிக்க முடியாது. பொருட்கள் வைக்கவும் எட்டியோஸ் அளவுக்கு லோகனில் அதிக இடம் இல்லை. எட்டியோஸைவிட குறைவு தான். 510 லிட்டர் கொள்ளளவு கொண்ட லோகனின் டிக்கியில் பொருட்கள் வைக்க போதுமான இடம் உள்ளது.

இன்ஜின்!

டொயோட்டா எட்டியோஸின் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 88.7 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 100 bhp, 120 bhp சக்தி கொண்ட மிட் சைஸ் கார்களுடன் ஒப்பிடும்போது, பவர் குறைவுதான் என்பது போலத் தோன்றினாலும், வெறும் 930 கிலோ மட்டுமே எடை கொண்ட எட்டியோஸ், பர்ஃபாமென்ஸில் பெரிய கார்கள் அனைத்துடனும் போட்டி போடுகிறது. ஆரம்ப வேகத்தில் இருந்து அதிகபட்ச வேகம் வரை பவர் ஒரே சீராக வெளிபடுகிறது. இதனால், எந்தக் கட்டத்திலும் கூடுதல் பவர் வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படவில்லை.

0-100 கி.மீ வேகத்தை 11.38 விநாடிகளில் கடக்கிறது எட்டியோஸ். சூப்பர் ஸ்மூத் கியர் பாக்ஸ் என்பதால், அடிக்கடி கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது போலத் தோன்றுகிறது. ஆனால், குறைந்த ஆர்பிஎம்-லும் இன்ஜினில் எந்தவித அடைப்பும் இல்லாமல் செயல்படுவதால், கியர்களை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியமே இல்லாமல் போகிறது.

இன்ஜினைப் பொறுத்தவரை எட்டியோஸில் இருக்கும் ஒரே குறை சப்தம்தான். அதிக வேகத்தில் செல்லும்போது, இன்ஜின் சப்தமும் எகிற ஆரம்பித்து விடுவது அற்புதமான ஓட்டுதல் அனுபவத்தைப் பாழாக்குகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட லோகன், இப்போது 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது எட்டியோஸைவிட 15 bhp குறைவாக, அதாவது 75 bhp சக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது. இது தவிர, எடையிலும் எட்டியோஸைவிட லோகன் 100 கிலோவுக்கும் மேல் அதிகமாக உள்ளது. இதனால் காருக்குள் ஐந்து பேர், டிக்கியில் பொருட்கள் என ஃபுல் லோடில் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது... தமிழகம் போதிய மின்சாரம் இல்லாமல் தவிப்பதுபோல, லோகன் - பவர் இல்லாமல் தவிப்பதைக் காண முடிகிறது.

நகருக்குள் பயன்படுத்துவதற்குப் போதுமான பர்ஃபாமென்ஸை அளிக்கிறது லோகன் இன்ஜின். கியர் பாக்ஸும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. ஆனால், 1500 ஆர்பிஎம் வரை இன்ஜின் கொஞ்சம் அடக்கியே வாசிப்பதால், ஆரம்ப வேகம் அதிகமாக இல்லை. ஆனால், எட்டியோஸை விட லோகனின் இன்ஜின் குவாலிட்டியில் ஈர்க்கிறது. நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் போகும்போதுகூட இன்ஜினில் இருந்து சத்தம் எதுவும் அதிகமாகக் கேட்கவில்லை.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை!

ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் லோகன் பின்னியெடுக்கிறது. சேஸியும் ஸ்ட்ராங்காக இருப்பதால், ஸ்டெபிளிட்டியில் குறை இல்லை. கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகம் என்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. லோகனின் ஸ்டீயரிங் சூப்பர் ஷார்ப் இல்லையென்றாலும், மோசமாக இல்லை. வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டும்போது, ஸ்டீயரிங் சொன்ன பேச்சைக் கேட்டுச் செயல்படுகிறது.

எட்டியோஸின் ஸ்டீயரிங்கைக் கொஞ்சம் அசைத்தாலே கார் திரும்புகிறது. ஆனால், ஓட்டுதல் உற்சாகத்தைத் தூண்டும் ஸ்டீயரிங்காக இது இல்லை. அதேசமயம், எடை குறைவான கார் என்பதால், சிட்டியின் சந்து பொந்துகளுக்குள் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு ஏற்ற காராக உள்ளது எட்டியோஸ். குறைந்த எடை கொண்ட காராக நெடுஞ்சாலையில் பறக்கும்போதும் ஸ்டெபிளிட்டி சிறப்பாகவே இருக்கிறது. எந்தவிதமான ஆட்டமும் இல்லை.

இரண்டு கார்களுமே மிடில்-கிளாஸ் மக்களை மனதில் கொண்டு களம் இறங்கியிருப்பதால், விலையும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. டொயோட்டா எட்டியோஸின் ஆரம்ப மாடல் விலை (கோவை ஆன் ரோடு)

5,46,972. டாப் வேரியன்ட்டின் விலை ரூ.7,61,580. அதேபோல், மஹிந்திரா லோகனின் ஆரம்ப மாடல் விலை (கோவை ஆன் ரோடு)

5,33,150. டாப் வேரியன்டின் விலை

6,26,135.

டொயோட்டா எட்டியோஸ் Vs மஹிந்திரா லோகன்

லைக்கேற்ற தரம்’ என்பதை மட்டுமே யுஎஸ்பியாகக் கொண்டு, இரண்டு கார்களுமே விற்பனைக்கு வந்திருக்கின்றன. எட்டியோஸைவிட லோகன் பில்டு குவாலிட்டியில் சிறந்த காராக இருக்கிறது. பிளாஸ்டிக் பாகங்களின் தரமும் ஓகே! ஆனால், வெளித்தோற்றத்திலும், பர்ஃபாமென்ஸிலும் மிகவும் மந்தமாக உள்ளது எட்டியோஸ். ஆனால், இன்ஜினில் அதிர்வுகளோ, சத்தமோ இல்லாத அளவுக்கு மிகவும் சிறப்பாக ரிஃபைன் செய்யப்பட்டு இருக்கிறது லோகனின் 1.4 லிட்டர் இன்ஜின். விலையும் குறைவு;

ஆனால் அவுட் டேட்டட் கார் என்பதோடு, எந்த நேரத்திலும் புதிய லோகன் வெளிவரலாம் என்பதால் மார்க்கெட்டை இழந்துவிடுகிறது லோகன். ஆசை வைத்து பிரியத்துடன் கார் வாங்காமல், இந்த விலைக்கு இதுதான் கிடைக்கும் என்று காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய நிலை என்றால், லோகன் வாங்கலாம்!

மாடர்ன் காராகவும், அதிக பர்ஃபாமென்ஸ் கொண்ட காராகவும் இருக்கிறது எட்டியோஸ். இட வசதியில் நம்பர் ஒன்! வெளியூர் பயணங்களுக்குச் செல்ல சரியான காராக இருக்கிறது. பர்ஃபாமென்ஸும் ஓகே! ஆனால், டொயோட்டா என்று சொல்லும் அளவுக்குத் தரமாக இல்லை. பிளாஸ்டிக் பாகங்ளின் தரம் மிகவும் மலிவாக உள்ளன. ஆனால், லோகனுடன் ஒப்பிடும் போது சிறந்த சர்வீஸ் பேக்-அப் மற்றும் ரீ-சேல் வேல்யூவும் அதிகம் கொண்ட காராக எட்டியோஸ் இருக்கும் என்பதால், நம்பிக்கையுடன் வாங்கலாம்!