>>பி.ஆரோக்கியவேல்

மணலும், அலை கடலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் விளையாடும் கோவா. அங்குள்ள பார்க் ஹையட் ஓட்டலில் துவங்கி 'கானா கோனா’ என்ற ஊரை அடுத்திருக்கும் இண்டர்நேஷனல் ரிஸார்ட் வரையிலான சாலை, 'ப்ளூ மோஷன்’ டெக்னாலஜியில் உருவான ஃபோக்ஸ்வாகன் பஸாத்-ஐ டெஸ்ட் செய்யத் தயாராக இருந்தது. ஹேட்ச்பேக் செக்மென்டுக்கு போலோ, மிட் சைஸ் செக்மென்டுக்கு வென்ட்டோ என்று தன்னை நிலை நிறுத்திக்கொண்ட ஃபோக்ஸ்வாகன், என்ட்ரி லெவல் லக்ஸ¨ரி செக்மென்டின் மீது மீண்டும் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் 'ப்ளூ மோஷன் பஸாத்’ சோதனை ஓட்டத்துக்குத் தயாராக ஓட்டல் வாசலில் காத்திருந்தது.

2007-ம் ஆண்டு வெளியான பஸாத்தான் இப்போது உருமாறி, டிசைன் மாறி வந்திருக்கிறது. ஆனாலும், அப்போது அதனால் ஸ்கோடா சூப்பர்ப்-ஐயும், ஹோண்டா அக்கார்ட்டையும் மீறி பிரகாசிக்க

. முடியவில்லை. ஆனால், இப்போது பஸாத்தின் டாப் வேரியன்ட் விலை சுமார் 30 லட்சம். அதனால், இதன் போட்டியாளர்களாக எதிரில் நிற்பது பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி ஆகியவற்றின் என்ட்ரி லெவல் கார்கள்தான்! இந்த கார்களுடன் ஃபோக்ஸ்வாகன் பஸாத் போட்டி போட்டு களத்தில் நிற்குமா? இதோ டெஸ்ட் டிரைவ் ஆரம்பம்..
டிசைன் மற்றும் இன்ஜினீயரிங்

பழைய பஸாத்தில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்ட இதை 'ஆல் நியூ பஸாத்’ என்ற அடைமொழியோடு குறிப்பிட முடியாது. அதற்குப் பதில், 'பழைய பஸாத்தின் புத்துணர்ச்சி பொங்கும் புதிய எடிஷன்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். முதல் பார்வைக்கு இது பழைய பஸாத்தைப் போலவே இருந்தாலும், ரூஃப் பேனலைத் தவிர புதிய பஸாத்தில் இருக்கும் அத்தனை பேனல்களுமே புதியது. பழைய பஸாத்தில் இருக்கும் பழைய (க்ரீஸ்) கோடுகள் மறைந்து, இதில் 'கிரிஸ்ப்’பான கோடுகள் இடம் பெற்றிருக்கின்றன. குரோம் கிரில் அகலமாகக் காட்சியளிக்கிறது. ஏர் 'டேம்’ மற்றும் கிரில்லுக்கு இடையில் அகலமான பம்பர் இருக்கிறது. இதன் புராஜெக்டர் ஹெட் லைட் பஸாத்துக்கு புதிய கவர்ச்சியைத் தருகிறது.

இப்போது பக்கவாட்டில் இருந்து பார்ப்போம்... ஹெட் லைட்டில் துவங்கி டெயில் லைட் வரை நீளும் க்ரீஸ் லைன் அழகைக் கூட்டுகிறது. பழைய பஸாத்துக்கும் புதிய பஸாத்துக்கும் வெறும் 4 மிமீ-தான் வித்தியாசம் என்றாலும், பார்வைக்கு காரின் நீளம் அதிகமாகியிருக்கிறது. ரியர் வியூ மிர்ரரிலேயே சிக்னலுக்கான இண்டிகேட்டரும் இருக்கின்றன. இன்ஜினை 'மௌண்ட்’ செய்ய கையாளப்பட்டு இருக்கும் முறை காரின் சத்தத்தைக் குறைக்க உதவி செய்கிறது. புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 'பார்க் அசிஸ்ட்’ பட்டனை ஆன் செய்துவிட்டு, ஸ்டீயரிங்கில் இருந்து கையை எடுத்துவிட்டால், கார் தானாகவே பார்க் செய்து கொள்கிறது! இருந்தாலும், பிரேக்கிலும் ஆக்ஸிலரேட்டரிலும் கால்கள் இருக்க வேண்டியது அவசியம். அடுத்ததாக 'அட்டென்ஷன் அசிஸ்ட்’. சுமார் 20 நிமிடங்கள் காரை நெடுஞ்சாலையில் ஓட்டினால், அதிலிருந்தே ஓட்டுபவரின் ஸ்டைலை பிக்-அப் செய்து கொள்ளும் பஸாத்... சோர்வின் காரணமாக காரை ஓட்டுவதில் சற்றே வேறுபாட்டை உணர்ந்தாலும்... ''ஐயா சாமி, ஒரு காஃபி சாப்பிட்டுவிட்டு பிறகு காரை எடு!'' என பீப்... பீப் ஒலி எழுப்பி யோசனை சொல்கிறது!

அடுத்து, படு விமரிசையாக விளம்பரப்படுத்தப்படும் 'ப்ளூ மோஷன் டெக்னாலஜி’ சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒரு தொழில்நுட்பம். சிக்னலில் கார் சிறிது நேரம் நிற்க நேர்ந்தாலும், இன்ஜின் தானாகவே ஆஃப் ஆகிவிடும். அதேபோல, ஒவ்வொருமுறை பிரேக் அழுத்தும் போது வீணாகும் மெக்கானிக்கல் எனர்ஜி, எலெக்ட்ரிக்கல் எனர்ஜியாக மாற்றப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.

உள்ளலங்காரம்

மேலோட்டமாகப் பார்த்தால், பழைய பஸாத்தைப் பார்ப்பது மாதிரியே புதிய பஸாத்தும் காட்சியளிக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் காட்டும் ஒவ்வொரு ரீடிங்கையும் தெளிவாகப் படிக்கலாம். ஹை-எண்ட் வெர்ஷனான ஹைலைனில் 'கீ-லெஸ் என்ட்ரி’ வசதியும் உண்டு. ஒரு பட்டனை அழுத்தி, இன்ஜினை ஸ்டார்ட் மற்றும் ஆஃப் செய்யலாம். பார்க்கிங் பிரேக்கும் இப்போது பட்டன் வடிவில் கியர் லீவருக்குப் பக்கத்திலே இடம் மாறியிருக்கிறது. பிளாஸ்டிக்கின் தரம் பழைய காரைவிட மேம்பட்டிருக்கிறது. டிரைவர் சீட்டை 12 வகையாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் முடியும். அது மட்டுமல்ல... டிரைவரின் சீட்டை கூல் செய்யவும், தேவைப்படும்போது கதகதப்பான காற்றைச் சுழலவிடவும் வசதிகள் உள்ளன! சீட் சற்றே அழுத்தமாக இருந்தாலும் தொடை மற்றும் முதுகு பகுதிகளுக்குப் போதுமான ஆதாரத்தை அளிக்கிறது. டிரைவருக்கு ஒரு விதமாகவும், அவருக்கு அருகில் இருப்பவருக்கு வேறுவிதமாகவும் ஏ.ஸி-யை அட்ஜஸ்ட் செய்துகொள்ள உதவும் 'டூயல் ஜோன் க்ளைமேட்’ கன்ட்ரோலும் உண்டு. ஏ.ஸி போரடிக்கும் போது ஃப்ரெஷ் காற்றை சுவாசிக்க விரும்பினால் சன் ரூஃப் இருக்கிறது. பென் டிரைவ், ஐ-பாட் ஆகியவற்றை காரில் இணைத்து, விருப்பம்போல இசையை ரசிக்கலாம். காரை ரிவர்ஸ் எடுக்கும்போது டிக்கியின் கைப்பிடியில் மறைந்திருக்கும் கேமிரா வெளியே வருகிறது. அது காட்டும் காட்சி சென்ட்ரல் கன்ஸோலில் இருக்கும் தொடு திரையில் வீடியோ காட்சியாகத் தெரிகிறது. மற்ற நேரங்களில் இந்தத் தொடு திரை, மியூசிக் சிஸ்டத்துக்கான தொடு திரையாக மாறிவிடுகிறது.

இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ்

பழைய பஸாத்தைவிட புதிய பஸாத்தின் சக்தி 32 bhp அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 170 bhp சக்தியை அளிக்கக் கூடிய 2 லிட்டர் காமென் ரெயில் டீசல் இன்ஜின்தான் இப்போதைக்கு பஸாத் வழங்கும் ஒரே ஆப்ஷன். பழைய பஸாத்தைவிட புதிய பஸாத்தின் இன்ஜினில் சத்தம் குறைச்சலாகத்தான் வருகிறது. இதில் இருக்கும் இரட்டை கிளட்ச் போதுமான சக்தியை அளிக்கிறது. இந்த பஸாத் 100 கி.மீ வேகத்தை 8.73 விநாடிகளில் தொட்டுவிடுகிறது. 160 கி.மீ வேகத்தை 23.22 விநாடிகளில் கடந்துவிடுகிறது. இது பழைய பஸாத்தைவிட மூன்று விநாடிகள் குறைவு. இது 20-80 கி.மீ வேகத்தை வெறும் 5.66 விநாடிகளில் கடந்து விடுவதால், முன்னால் செல்லும் வாகனங்களை சுலபமாக ஓவர்டேக் செய்ய முடிகிறது. இன்ஜின் வேகம் 2000 ஆர்பிஎம்-க்குக் கீழே இருக்கும் போதுகூட சக்தி மிதமிஞ்சி கிடைப்பதால், D டிரைவில் வைத்து பஸாத்தை ஹாயாக ஓட்ட முடியும். அதேபோல, ஸ்போர்ட் டிரைவ் மோடில் வைத்து ஓட்டும்போது கியர் ஷிப்ட் ஸ்மூத்தாக நடக்கிறது. 'பேடில் ஷிப்ட்’ பட்டன்கள் ஸ்டீயரிங் வீலிலேயே இருப்பது படுவசதியாக இருக்கிறது. ஆனால், இதை ஓட்டும்போது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட காரை ஓட்டும் 'கிக்’ கிடைக்கவில்லை. மேனுவல் கியர் வேண்டுமானால், இதன் பேஸிக் வெர்ஷனான 'டிரண்ட் லைன்’ வெர்ஷனில் அது கிடைக்கும்.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

பஸாத் ஒரு சொகுசு கார் என்பதை இதன் சஸ்பென்ஷன் நிரூபிக்கிறது. என்னதான் மேடு - பள்ளங்களில் விழுந்து எழுந்து சென்றாலும், கார் படகு மாதிரி பயணிக்கிறது. வெளிச்சத்தம் காரின் உள்ளே கேட்காமல் தடுப்பதில் பஸாத் வெற்றியடைந்திருக்கிறது. ஆனால், வேகமாகப் பயணிக்கும்போது காற்றின் சத்தம் காருக்குள் கொஞ்சம் கேட்கிறது. வேகமாகப் பயணிக்கும்போது பழைய பஸாத் பாறையைப் போன்று நிலைகுலையாமல் செல்லும். புதிய பஸாத்தில் சொகுசான பயணத்துக்காக சஸ்பென்ஷனை சாஃப்ட் ஆக்கியிருப்பதால், மோசமான சாலைகளில் பயணிக்கும்போது ஸ்டீயரிங்கை சற்று இறுக்கமாகப் பிடிக்க வேண்டியிருக்கிறது. ஸ்டீயரிங் வீல் ஸ்மூத்தாகவும் துல்லியமாகவும் இருக்கிறது.

மைலேஜ்

ப்ளூ மோஷன் டெக்னாலஜி என்பது வெறும் விளம்பர யுக்தி இல்லை. உண்மையிலேயே அதில் உண்மை இருக்கிறது என்பது டெஸ்ட் டிரைவின்போது நிரூபணமாகியது. சிட்டியில் இது லிட்டருக்கு 10.8 கி.மீ- யும், நெடுஞ்சாலையில் 15.2 கி.மீ-யும் அளிக்கிறது. இது, பழைய பஸாத் உடன் ஒப்பிடும்போது முறையே 0.8 கி.மீ-யும், 1.4 கி.மீ-யும் அதிகம். அதே போல, இந்த மைலேஜ் மற்ற பல சலூன் கார்களைவிடவும் அதிகம்!

மேலோட்டமான பார்வைக்கு, பழைய பஸாத்துக்கும் - புதிய பஸாத்துக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனால், புதிய பஸாத்தில் ஏராளமான முன்னேற்றங்கள் நடந்திருக்கின்றன. மேம்படுத்தப்பட்ட உள்ளலங்காரமும், அதிகரித்திருக்கும் சொகுசும் பஸாத்தை நீண்ட பயணத்துக்கு ஏற்ற காராக மாற்றியிருக்கிறது.

கூடுதல் மைலேஜ், மேம்படுத்தப்பட்ட பர்ஃபாமென்ஸ் என்று இரண்டையும் ஒருசேரக் கொடுப்பதில் பஸாத்தின் புதிய டீசல் இன்ஜின் வெற்றியடைந்திருக்கிறது. அதேபோல, காருக்குள் கேட்கும் சத்தமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Tsi பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இல்லாதது ஒரு பெரிய குறை. பழைய பஸாத்தை ஓட்டும்போது கிடைத்த த்ரில், இதில் மிஸ்ஸிங். என்றாலும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் விர்ரென செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற காராகவும் இருக்கிறது. இதன் பேஸிக் மாடலான டிரெண்ட்லைன் 24.67 லட்சம் (சென்னை ஆன் ரோடு) என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், போட்டியாளர்கள் சற்று கவலைப்பட வேண்டியிருக்கும். அதே சமயம், இதன் டாப் மாடலான ஹைலைன் 30.39 லட்ச ரூபாய் என்பது சற்று அதிகமாகவே தெரிகிறது. ஆனால், அதற்கு ஏற்ற வகையில் ஃபோக்ஸ்வாகன் ஏராளமான அம்சங்களை இதில் சேர்த்துள்ளது!