''டில்ட் ஸ்டீயரிங் ஆர்யாவோட ப்ளஸ். நீண்ட தூரம் பயணம் போறப்ப நிச்சயமா பெரிய அளவுக்கு இது கை கொடுக்கும். க்ரூஸ் கன்ட்ரோல், ஆடியோ கன்ட்ரோல்ஸ் ஸ்டீயரிங்கில் இருப்பது என பல ப்ளஸ்கள் இதில் இருக்கின்றன. ஜி.பி.எஸ், நேவிகேஷன் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல், ரெயின் சென்ஸிங் ஆட்டோ வைப்பர், ரிவர்ஸ் கைடு கேமரான்னு பின்னி எடுக்குது ஆரியா. அலாய் வீல்ஸ் ஆர்யாவோட அழகு! சிறப்பம்சங்கள் அதிகம் இருப்பதோடு, இட வசதியும் அதிகம் என்பதால் ஆர்யா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!''

''தரமான காரைத் தந்திருக்கிறது டாடா. சஃபாரியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அதைவிட ஆர்யாவில் இரண்டு மடங்கு தரம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெயின்ட் குவாலிட்டியைச் சொல்லலாம். 4 வீல் டிஸ்க் பிரேக், சஸ்பென்ஷன் எல்லாமே ஓகே! இன்ஜின் பர்ஃபாமென்ஸும் ஓகே. எந்தக் குறையுமில்லை. தேவையான இடத்தில் தானாகவே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிற ஆட்டோமேட்டிக் 4 வீல் டிரைவிங், ஆர்யாவின் பெரிய ஆச்சரியம். மலைப் பாதைப் பயணத்துக்கு பக்கா வாகனம் இது. சீட் அமைப்புகள்தான் கொஞ்சம் ஏடாகூடமாக இருக்கிறது. பாகங்களின் குவாலிட்டியைப் பொறுத்தவரை சூப்பர் என சொல்ல முடியவில்லை. அதே சமயம், ஏ.ஸி அருமையாக இருக்கிறது. எவ்வளவு வெயிலில் நிறுத்தி வைத்திருந்தாலும் ஏ.ஸியை ஆன் செய்த சில விநாடிகளில் கார் முழுக்க கூல் ஆகிவிடுகிறது. லக்கேஜ் ரூம் லைட்ஸ், அழகான டோர் ஹோல்டர்ஸ் என கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால், ஹோண்டா சிஆர்-வியில் இருக்கும் ஒட்டுமொத்தத் தரம் இதில் இல்லை!''

''மான்ஸா, இண்டிகாவோட சாயல் வர்றதை இதிலும் தவிர்க்க முடியலை. அதுலேயும் டிக்கியைப் பார்த்தாலே மறுபடியும் ஒரு டாடா படைப்புங்கிறது தூக்கலா தெரியுது. இந்த மாதிரியான டிஸைன் ரிப்பிட்டேஷனை டாடா மாற்றியே ஆகணும். சைலன்ஸரைப் பார்த்தா கேப்டிவாவோடது ஞாபகம் வருது. ஃபார்ச்சூனரெல்லாம் பார்த்தா ஒரு பிரம்மாண்டம் இருக்கும். ஆனா, ஆர்யாவுல இது மிஸ்ஸாகுது. சஃபாரியோட தோற்றத்துலேயே மிரள வெச்ச டாடா, இங்கே கோட்டை விட்டுடுச்சு!''

''முன்னாடி ரெண்டு வரிசை சீட்ஸ் ஓகேதான். ஆனால், கடைசி இருக்கை கம்ஃபர்டாவே இல்லை. குழந்தைங்களுக்கு வேணா அது சரிப்பட்டு வரும். எங்கேயாச்சும் பிக்னிக் போறப்போ, கடைசி சீட்டை மடக்கி வெச்சுட்டு ஹாயா கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கலாம். ரெண்டாவது வரிசை சீட்டை ஸ்பிளிட் பண்ணி மடக்கி வெச்சுக்க முடியறது நல்ல ஐடியா. ஹேண்ட் ரெஸ்ட் அட்ஜஸ்ட்மென்ட்ஸ், சீட்டை ஸ்லைடு பண்ணிக்கிற விஷயம், டிரைவர் சீட்டோட உயரத்தை அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறதெல்லாம் ஓகேதான். மற்றபடி காரோட லுக் எனக்குப் பிடிக்கலை. இனோவாவை காப்பியடிச்ச மாதிரி தெரியுறது. டாப் எண்டு மாடலோட விலை 18 லட்சம்ங்கிறது அதிகம்!''

''வெளித்தோற்றத்துல செம சைஸ்ல இருந்தாலும், உள்ளே உட்கார்ந்தா ஒரு பெரிய வெற்றிடம் தெரியுது. டேஷ் போர்டு ஓகே-ன்னாலும் இன்னும் கொஞ்சம் அழகுபடுத்தி இருக்கலாம்னு தோணுது. சின்னதா இருந்துகிட்டு எட்டியோஸெல்லாம் பின்னி எடுக்கிறப்ப... இந்த கார்லேயும் ட்ரை பண்ணியிருக்கலாம். ஆனா, நிறைய நல்ல விஷயங்களும் இருக்குது. குறிப்பா, இவ்வளவு பெரிய கார் எவ்வளவு ஸ்பீடா போனாலும் ஆட்டம் எதுவும் தெரியலை. பாதுகாப்பு விஷயத்துல ஆர்யாவுல ரொம்பவே அக்கறை தெரியுது!''