>> அ.இராமநாதன்

இனி பார்க்கிங் பிரச்னை இல்லை!

ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்தத் துறைக்குச் சிக்கலாக, சவாலாக விளங்கும் பல விஷயங்களை, பிரச்னைகளை எளிதாகத் தீர்த்து விடுகின்றன மாணவர்களின் புராஜெக்ட்டுகள். படிக்கும் சமயத்தில் மாணவர்கள் உருவாக்கும் புராஜெக்டுகளை மதிப்பிட்டுத்தான், பல சமயங்களில் தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை அளிக்கின்றன.

இதற்கு உதாரணமாக விளங்கும் வகையில், சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த இரு கல்லூரி மாணவர்களின் புராஜெக்ட்டுகளைச் சொல்லலாம். வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை உயர உயர... பார்க்கிங் பிரச்னையும் பெருகிக் கொண்டே செல்கிறது. 'கார் நிறுத்த இடம் ஒதுக்குவதே ஒரு வீடு கட்ட ஆகும் செலவு செய்ய வேண்டியது இருக்கிறது’ என்று புலம்புகிறார்கள் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அதே சமயம், கார் நிறுத்தும் அளவுக்கு இடம் இருந்தாலும், அந்த இடத்தில் காரைக் கொண்டு போய் நிறுத்துவதற்கு ஏதுவாக இல்லாததால், திண்டாட வேண்டியிருக்கிறது. இதற்கு ஒரு தீர்வைத் தருகிறார்கள் திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்.

'90 டிகிரி வீல் டர்னிங் மெக்கானிசம்’ எனும் ஒரு கான்செப்டை உருவாக்கி, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டி இருக்கிறார்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் மாணவர்களான பழநிவேந்தன், கார்த்திகேயன், சேக் முகமது ஹாசிம் ஆகிய மூவரும். இந்த கார்தான் பார்க்கிங் பிரச்னைக்கு ஒரு தீர்வாக அமையக் கூடியது.

இந்த காரில் 90 டிகிரி திரும்பக் கூடிய வீல் அமைப்பு இருப்பதால், இதை எளிதாக எந்தவித நெரிசலிலும் பார்க்கிங் செய்துவிடலாம். இந்த காரை பேட்டரியில் இயங்கக்கூடிய காராக வடிவமைத்துள்ளார்கள். இதில், பேட்டரியில் இயங்கக்கூடிய மோட்டார்களின் எண்ணிக்கை மட்டுமே ஆறு. இந்த காரில் ப்ராக்ஸ்மிட்டி சென்ஸார் (Proximity Sensor)ஒரு முக்கிய உறுப்பு. முழுக்க முழுக்க பேட்டரிகளாலே இயங்கக்கூடிய இந்த காரில் இருக்கும் ஆறு மோட்டார்களில், இரண்டு செயின் மூலம் முன் வீல்களுக்கும், இரண்டு பின் பக்க வீல்களுக்கும் இணைக்கப்பட்டு உள்ளன. மீதி இரண்டு மோட்டார்கள்தான் வீல்களை 90 டிகிரிக்குத் திருப்புவதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட காரில் கியர் லீவர் இருப்பது போல, இதில் மூன்று பட்டன்கள் பொருத்தி இருக்கிறார்கள். இதன் எலெக்ட்ரிகல் ஸ்டீயரிங், திருப்பும் திசைக்கு திரும்ப இதன் கட்டுப்பாட்டை ப்ராக்ஸ்மிட்டி சென்ஸார் கவனித்துக் கொள்கிறது.

காரை பார்க்கிங் செய்ய வேண்டுமென்றால் காரை முன் - பின் மட்டுமல்ல... பக்கவாட்டிலும் செலுத்தலாம் என்பதுதான் இந்த காரின் சிறப்பு. ஆக்ஸிலரேட்டர் மாஸ்ஃபெட் டிரைவர் (Mosfet Driver)என்ற கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், நான்கு மோட்டார்களையும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்துகிறது. ''இதை உருவாக்க சுமார் 39,000 ரூபாய் வரை எங்களுக்குச் செலவானது. தற்போது இந்த காரில் சாதாரண பேட்டரிகள்தான் உபயோகப்படுத்தியுளோம். இதை 20 கி.மீ-க்கு ஒருமுறை சார்ஜ் செய்ய வேண்டும். 300 கிலோ வரை எடையேற்றலாம். இன்னும் சக்தி வாய்ந்த பேட்டரி பொருத்தினால், இன்னும் அதிக தூரம் பயணிக்கலாம்'' என்கின்றனர்.

90 சிசி கார்!

'எரிபொருள் சிக்கனம்’ என்ற உலகளாவிய கருத்தின் அடிப்படையில் பார்த்தால், தற்போது வெளிவரும் கார்களில் பெரும்பான்மையானவை அதற்கு ஏற்றதாக இல்லை என்பதே உண்மை. காரணம், அதிக சக்தி கொண்ட இன்ஜின்கள் தான். ''நகர நெருக்கடிகளிலோ அல்லது கிராமப்புறச் சாலைகளிலோ அதிக

சக்தி கொண்ட இன்ஜினால் எந்தப் பயனும் இல்லை'' என்று சொல்கிற சென்னை தாகூர் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் தனசேகர், எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தும் அதேவேளையில், குறைவான திறன் கொண்ட இன்ஜினைக் கொண்டு இயக்குவதற்கான ஓர் அடிப்படை காரை உருவாக்கி, அதற்கு ‘D’ motto 90’என்று பெயரிட்டுள்ளார். சாதாரண கார்களில் இருப்பதுபோல இன்ஜின், கிளட்ச், கியர் பாக்ஸ் என அனைத்தும் இதில் இருக்கின்றன. ரேஸ் கார்களை மாடலாக வைத்து இந்த காரை வடிவமைத்துள்ளதாகக் கூறும் தனசேகர், இந்த காரை உருவாக்க பல வாகனங்களில் இருந்து உதிரி பாகங்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.

இன்ஜின், ஸ்பீடோ மீட்டர், சஸ்பென்ஷன், சைலன்ஸர், ஆக்ஸில் என காருக்கான அத்தனை அடிப்படை விஷயங்களும் இதில் பளிச்சிடுகின்றன. இதிலுள்ள ஸ்டீயரிங் பாக்ஸ் டாடா இண்டிகாவில் இருப்பது. டிரைவ் ஷாஃப்ட் கிடையாது. செயின் ஸ்ப்ராக்கெட்தான். இந்த காரை தயாரிக்க சுமார் 41,000 ரூபாய் செலவானதாம்..

இதில் பொருத்தப்பட்டுள்ள 'இந்த் - சுஸ¨கி’ இன்ஜின், 98.2 சிசி கொள்ளளவு கொண்டது. 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உதவியுடன் இது மணிக்கு 87 கி.மீ வேகம் வரை பறக்கிறதாம்!