>>சார்லஸ்

மாருதியின் சூப்பர் ஹிட் காரான ஸ்விஃப்ட் வாங்க பட்ஜெட் இல்லை என்பவர்களுக்கு, இப்போது சூப்பர் சான்ஸ்! பழைய கார் மார்க்கெட்டில் விலை குறைவாக விற்பனைக்கு

. வந்துவிட்டது ஸ்விஃப்ட்டின் சகோதரனான ரிட்ஸ்!.
ரிட்ஸ், ஸ்விஃப்ட்டுக்கு ஒரு மாற்று! ஸ்விஃப்ட்டில் இருக்கும் அத்தனை விஷயங்களும் ரிட்ஸிலும் உண்டு. சொல்லப் போனால், வெளித் தோற்றத்தைத் தவிர இரண்டு கார்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கார் உயரமாக இருப்பதால், 'காருக்குள் உட்கார்ந்தால் தலை இடிக்குமோ’ என பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதோடு ஸ்விஃப்ட்டைப் போல இல்லாமல், பின் பக்கம் உட்காருபவர்கள் கால்களை நீட்டி மடக்கி உட்கார அதிக இட வசதியும் உண்டு.

டிக்கியில் இட வசதி குறைவுதான். ஆனால், பின் சீட்டில் ஒருவர் மட்டுமே உட்காரப் போகிறார் என்றால், ஒரு சீட்டை மடக்கி விட்டு டிக்கியின் இட வசதியை அதிகரித்துக் கொள்ளலாம். டேஷ் போர்டு சிம்பிளாக, அதிக ஆடம்பரம் இல்லாமல் இருக்கிறது. இதனால், எந்தெந்த பட்டன்கள் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய தொல்லை இல்லை. ஆனால், டேஷ் போர்டு முழுமையாக இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. டேக்கோ மீட்டர் ஸ்போர்ட்டியாக இருப்பதற்காக டேஷ் போர்டு மேல் வைக்கப்பட்டு இருப்பது எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதேபோல், டிஜிட்டல் மீட்டருக்குள் சிறிதாக இருக்கும் ஃப்யூல் மீட்டரைக் கவனிப்பதும் சிரமமாகவே இருக்கிறது. பக்கவாட்டுக் கண்ணாடிகளும் மிகவும் தடிமனாக இருப்பதால், ரிவர்ஸ் எடுக்கும்போது வெளியே பார்ப்பதற்குச் சிரமமாக இருக்கிறது.

பெட்ரோலா, டீசலா?

ஸ்விஃப்ட், ரிட்ஸ் வாங்குபவர்களின் பெரிய கேள்வியே பெட்ரோல் வாங்குவதா அல்லது டீசல் வாங்குவதா என்பதே! நகர்ப்புறங்களில் மட்டும்தான் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், நீங்கள் பெட்ரோல் காரை வாங்குவதே நல்லது. காரணம், டீசல் காருக்கு நீங்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலுத்துவீர்கள். இந்தப் பணத்தை, நீங்கள் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் காரைப் பயன்படுத்தும்போதுதான் திருப்பி எடுக்க முடியும். அதனால், வெளியூர்களுக்கு அடிக்கடி பயணம் செய்பவர்களுக்குத்தான் டீசல் சரியாக இருக்கும்!

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வெளிவருகிறது ரிட்ஸ். பெட்ரோல் இன்ஜின் தரத்தில் நம்பர் ஒன். சூப்பர் மைலேஜைத் தருவதோடு பர்ஃபாமென்ஸிலும் கில்லி! வேகமாகப் பயணிக்கும்போதும்கூட பவர் இல்லை என்று சொல்லாத இன்ஜின் இதன் ப்ளஸ். ஃபியட்டின் டீசல் இன்ஜினிலும் எந்தக் குறையும் இல்லை. மைலேஜும் அதிகம்.

காசு கையில் குறைவாகத்தான் இருக்கிறது என்பவர்களுக்கு ரிட்ஸ் பெட்ரோல் VXi மாடல்தான் சரியான சாய்ஸ். ZXi மாடலில் ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல், ஏபிஎஸ், காற்றுப் பைகள் மற்றும் இரட்டை வண்ண உள்பக்கம் என வசதிகள் அதிகம் நிறைந்த காராக இருக்கிறது ரிட்ஸ். ஆனால், இதன் விலை அதிகம் என்பதால் பழைய கார் மார்க்கெட்டில் இந்த மாடலை வாங்குவது என்பது சரியான தேர்வாக இருக்காது.

சாலைகளில்...

ஓட்டுதல் தரத்திலும் ஸ்விஃப்ட்டுக்கும், ரிட்ஸுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஸ்டீயரிங்கைப் பிடிக்கும்போதே இது சொன்ன பேச்சைக் கேட்கும் ஸ்டீயரிங் என்பதற்கு அடையாளம் இதன் சூப்பர் க்ரிப். இதனால், திருப்பங்களில் நம்பிக்கையுடன் பயப்படாமல் வளைத்து நெளித்து ஓட்ட முடிகிறது.

ஓட்டுதல் தரத்தைப் பொறுத்தவரை சின்னச் சின்ன மேடு - பள்ளங்களில் பயணிக்கும்போது எந்தவிதமான அதிர்வுகளும் காருக்குள் தெரியவில்லை. ஆனால், கொஞ்சம் பெரிய மேடு-பள்ளங்களில் செல்லும்போது காருக்குள் இருக்கும் அமைதி நிச்சயம் கெட்டுவிடும். மேலும், கார் உயரமாக இருப்பதால் காற்று பக்கவாட்டில் மோதும்போது, நெடுஞ்சாலையில் இதன் ஸ்டெபிளிட்டி பாதிக்கும். இன்ஜின் தரத்தைப் பொறுத்தவரை அதிர்வுகள் எதுவும் பெரிய அளவில் இல்லை.

ஸ்பேர் பார்ட்ஸ் என்ன விலை?

ரிட்ஸ் ZXi மாடலின் டயர்களை மாற்ற 15,000-18,000 ரூபாய் செலவாகும். ஏர், ஆயில், ஃப்யூல் ஃபில்டர்களின் பெட்ரோல்/டீசல் கார்களின் விலை முறையே 180/260, 90/400, 300/1200 ரூபாய். பெட்ரோல் ரிட்ஸ் காரை ரெகுலர் சர்வீஸ் செய்வதற்கு 4,000 ரூபாய் வரை செலவாகும். டீசல் காரை சர்வீஸ் செய்ய கூடுதலாக 800-1,200 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆண்டுதோறும் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்க 10,000-12,000 ரூபாய் வரை செலவாகும்.

மைலேஜைப் பொறுத்தவரை பெட்ரோல் ரிட்ஸ், பொதுவாக 14.25 கி.மீ மைலேஜ் தரும். டீசல் ரிட்ஸ் லிட்டருக்கு 17 கி.மீ வரை மைலேஜ் தரும்.

வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை?

மார்க்கெட்டுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட ரிட்ஸில், இதுவரை பெரிய அளவில் எந்தப் புகார்களும், குறைபாடுகளும் இல்லை. டீசல் மாடல் ரிட்ஸ் காரை வாங்கப் போகிறீர்கள் என்றால், கிளட்ச் மிகவும் டைட்டாக இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். டைட்டாக இருந்தால் கிளட்ச்சை மாற்றுவதற்கு 8,000 ரூபாய் வரை செலவாகும். டைமிங் பெல்ட்டும் நல்ல கண்டிஷனில் இருக்கிறதா என்று பாருங்கள். பெட்ரோல் காரைப் பொறுத்த வரை பர்ஃபாமென்ஸுக்குப் பெயர் பெற்ற இந்த காரை சிலர் 'ரஃப் யூஸ்’ செய்திருக்கக் கூடும். அப்படிப்பட்ட கார்களை கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்திப் பாருங்கள். இந்த கார்களில் நிறைய பாகங்களை மாற்ற வேண்டி வரலாம்.

ரிட்ஸ் மார்க்கெட்டுக்கு வந்து மூன்று ஆண்டுகளே ஆவதால், ஒரிஜினல் வாரன்டியுடனேயே கார்கள் கிடைக்கும். சர்வீஸ் முறையாக செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை, கார் வாங்குவதற்கு முன்பு ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள்!