>> அ.இராமநாதன் >> வீ.நாகமணி

கிராமங்களில் அடிக்கடி நடக்கும் மருத்துவ முகாம்கள் போல, இப்போது சென்னை ரேஸ் டிராக்கில்

. அடிக்கடி பயிற்சி முகாம்கள் நடைபெற ஆரம்பித்து விட்டன. சூப்பர் பைக் ஆர்வலர்களுக்கு கலிஃபோர்னியா ரேஸிங் ஸ்கூல், சமீபத்தில் பயிற்சி முகாம் நடத்தியது. அதேபோல், ஏப்ரல் மாதம் யமஹா நிறுவனம் ஆர்-15 ரேஸ் பயிற்சி முகாம் நடத்தியுள்ளது..
யமஹா, பயிற்சி முகாமை 'க்ளினிக்’ என்றுதான் அழைக்கிறது. ஏப்ரல் மாதம் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இருங்காட்டுக் கோட்டையில் யமஹா பயிற்சி முகாம் நடைபெற்றது. மொத்தம் 60 பேர் கலந்துகொண்ட இந்த முகாமில் இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள், 16 வயதைக் கடந்தவர்கள், ரேஸ் வீரர்கள் எனப் பயிற்சி பெற வந்தவர்களை மூன்று வகையாகப் பிரித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி அளிக்க முன்னாள் மோட்டோ ஜீபி ரேஸர்

ஓசாமு மியாசாகியை வரவழைத்திருந்தது யமஹா. இந்த ரேஸ் பயிற்சியில் கலந்து கொள்வதற்கு கட்டணமாக 3000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ரேஸ் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆர்-15 பைக் பயிற்சிக்காக வழங்கப்பட்டதோடு, ஒவ்வொருவருக்கும் பைக் ட்யூனிங் செய்து கொடுக்க, தனியாக மெக்கானிக்குகளும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

ரேஸ் டிராக்கில் கார்னரிங் செய்வது எப்படி? எந்த இடத்தில் வேகத்தை அதிகரிக்க வேண்டும்? கார்னரிங்கில் எப்படி பிரேக் அடிக்க வேண்டும்? எங்கெல்லாம் பிரேக்கைப் பயன்படுத்த வேண்டும்? ஓவர்டேக் செய்வது எப்படி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும், ஒவ்வொருவரின் பைக்கிலுமே கேமரா பொருத்தப்பட்டு எப்படி பைக்கை ஓட்டுகிறார்கள் என்பதை வீடியோவில் பதிவு செய்து, அதை ரேஸர்களிடமே காண்பித்து, அதற்கேற்றபடி பயிற்சி அளித்ததுதான் ஸ்பெஷல்!

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் யமஹா ஆர்-15 ரேஸுக்கு முன்னோட்டமாகத்தான் இந்த ரேஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது. 'இந்த ரேஸ் பயிற்சி முகாமில் சிறப்பாக ரேஸ் ஓட்டியவர்களுக்கு, ஆர்-15 ரேஸில் கலந்துகொள்ள வாய்ப்பு தரப்படும். அத்துடன், ஆர்-15 ரேஸில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏசியன் ஜீபி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் அளிக்கப்படும்’ என அறிவித்துள்ளது யமஹா!