Published:Updated:

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் பிரச்னை தீருமா..? வரப் போகுது 6,000 சார்ஜிங் ஸ்டேஷன்கள்!

Electric Car | மின்சார வாகனம்
News
Electric Car | மின்சார வாகனம்

9 அதிவேக நெடுஞ்சாலைகளில் 6,000 சார்ஜிங் நிலையங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

எகிறியடிக்கும் பெட்ரோல் டீசல் விலை, பட்ஜெட்டில் பெரிய போர்வையையே போர்த்திவிடும்போல! மைலேஜ் அதிகமாகத் தரும் வாகனங்களும் இப்போது மார்க்கெட்டில் குறைவாகத்தான் இருக்கின்றன. வாகன ஓட்டிகளுக்கு ஒரே ஆப்ஷன் – எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். ஆனால், எலெக்ட்ரிக் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பெரிய பிரச்னை – சார்ஜிங்தான். இருந்தாலும், இப்போது இந்தியாவில் பெட்ரோல் டீசல் வாகனங்களைவிட எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனைதான் அதிகமாகி இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

வீட்டில் சார்ஜிங் போடுவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. பெட்ரோல் பங்க் மாதிரி நினைத்த இடத்தில் சார்ஜ் போடுவதும் ரொம்பக் கஷ்டம். சென்னை போன்ற மாநகரங்களில் சில மெட்ரோ ஸ்டேஷன்கள், மால்கள் போன்றவற்றில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருந்தாலும், சிட்டிக்குள்கூட எலெக்ட்ரிக் வாகனங்களை நம்பிப் பயணிப்பது கஷ்டமான டாஸ்க்தான். அதுவும் நெடுஞ்சாலைப் பயணங்கள் என்றால்… மூச்!

சார்ஜிங் ஸ்டேஷன் | Electric Car
சார்ஜிங் ஸ்டேஷன் | Electric Car

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நெடுஞ்சாலை சார்ஜிங் பிரச்னைக்கு ஓர் இனிப்பான செய்தி சொல்லியிருக்கிறது இந்திய அரசு. இந்தியாவில் உள்ள 9 அதிவேக நெடுஞ்சாலைகளில் 6,000 சார்ஜிங் நிலையங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார். வெறும் சார்ஜிங் ஸ்டேஷன் மட்டும் இருந்தால் போதாது… நேரமும் குறைய வேண்டும். அதாவது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன். அதற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குமாறும் ARAI (Automotive Research Association of India)-வுக்கு மகேந்திரநாத் பாண்டே கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொதுவாக, எலெக்ட்ரிக் கார்கள் 100% சார்ஜில், அதன் ஃபுல் ரேஞ்ச் 200 கிமீ முதன் 400 கிமீ வரைதான் அதிகபட்சமாக இருக்கும். இது கார்களைப் பொருத்து வேறுபடும். டாடா நெக்ஸானில் அதிகபட்சமாக 250 கிமீ வரையும், டிகோர் காரில் 210 கிமீ வரையும், கோனா, எம்ஜி ZS போன்ற மிட்சைஸ் கார்களில் 340 கிமீ வரையும், பென்ஸ் EQC, ஜாகுவார் போன்ற 1 கோடி ரூபாய் பெரிய கார்களில் மட்டும்தான் ரேஞ்ச் 400 கிமீ–யைத் தாண்டும். எல்லோராலும் பென்ஸ், ஜாகுவார் வாங்க முடியாது. அதற்கு நெடுஞ்சாலைகளில் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருந்தால்தான் சாத்தியம்.

Electric Cars / எலெக்ட்ரிக் வாகனங்கள்
Electric Cars / எலெக்ட்ரிக் வாகனங்கள்
எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்களின் முக்கியக் கவலையாக இதுதான்: ‘‘வெளியூருக்கெல்லாம் என் காரை எடுத்துட்டுப் போக முடியாதுங்க! சார்ஜுக்கு அலையணும்!’’ இனி அந்தக் கவலை இருக்காது. ஆங்காங்கே மொத்தம் 6,000 சார்ஜிங் நிலையங்கள் கட்டப்படவுள்ளன. இதில் முதற்கட்டமாக, 3,000 நிலையங்களை விரைவில் அமுல்படுத்தப்படும் என்று சொல்லியிருக்கிறது அரசு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், "EV கார்களில் உள்ள பேட்டரியின் முக்கிய அங்கமான Advanced Chemical Cell (ACC) தற்போது இறக்குமதி செய்யப்பட்டுத்தான் பயன்படுத்தப்படுகிறது. வாகனத்தின் விலையில் சுமார் 30% பேட்டரியின் விலைக்கே போய்விடும். ACC–யை உள்நாட்டில் உற்பத்தி செய்தால் விலையைக் கணிசமாகக் குறைக்கலாம். லித்தியம்-அயன் பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருள்களில் 70% ஏற்கெனவே இந்தியாவில் கிடைக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட PLI திட்டங்களின் மூலம், EV உற்பத்திக்காக அரசாங்கம் ஒரு ஜிகாவாட்டிற்கு ₹362 கோடி வரை சலுகை வழங்குகிறது!

Electric Car Charging Station
Electric Car Charging Station

FAME (Faster Adoption and Manufacturing of Hybrid and EV) திட்டம் I மற்றும் II, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மார்ச் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு 8% முதல் 13% வரையிலும், EV உற்பத்தியாளர்களுக்கு 13% முதல் 18% வரையிலும் அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது. இதன் மூலம் இந்தியாவில் ₹42,500 கோடி வரை முதலீடுகள் பெருகும். உதிரிபாகங்கள் மற்றும் பேட்டரிகள் உற்பத்தியை இது மேலும் துரிதப்படுத்த உதவும். கூடவே, சுமார் 7.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது!’’ என பாண்டே கூறினார்.

நெடுஞ்சாலை முழுக்க கும்பகோணம் டிகிரி காபிக் கடை மாதிரி சார்ஜிங் ஸ்டேஷன்கள் வந்தால் நமக்கு நல்லதுதானே மக்களே!