தொழில்நுட்பம்
Published:Updated:

20 கோடி ரூபாய் கார்!

வி.ஐ.பி. பேட்டி: லலித் செளத்ரி

>>சார்லஸ்  >>கே.கார்த்திகேயன்  

20 கோடி ரூபாய் கார்!

னது இந்திய வருகையைக் கொண்டாடும் விதமாக, கடந்த மாதம் சென்னை லீ ராயல் மெரீடியன் ஓட்டலில் 'டார்கெட் கஸ்டமர்ஸ்’ என்று அழைக்கப்படும் கோடீஸ்வர வாடிக்கையாளர்களுக்கு, கார்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம். இந்த நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின், இன்ஃபினிட்டி கார்ஸ் டீலர் ஷிப்பின் பர்ஃபாமென்ஸ் கார் பிரிவு இயக்குநர் லலித் சௌத்ரியைச் சந்தித்துப் பேசினோம்.

''எந்தெந்த மாடல்கள் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன?''

''இப்போது மும்பையில் திறக்கப்பட்டு இருக்கும் ஷோ ரூமில் V8 வான்டேஜ் கூபே, ரோட்ஸ்டர், V12 வான்டேஜ், டிபி-9 கூபே, டிபி-9 வாலன்டோ, ரெபிட், டிபிஎஸ் மற்றும் விராஜ் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும். இது தவிர, இப்போது உலகின் விலை உயர்ந்த காராக இருக்கும் ஆஸ்டன் மார்ட்டின் 'ஒன்-77’ காரையும் இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இந்த காரின் எக்ஸ்-ஷோ ரூம் மும்பை விலை 20 கோடி ரூபாய்!''

20 கோடி ரூபாய் கார்!
 ##~##
''இவ்வளவு விலை உயர்ந்த கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இருக்குமா?''

''இந்திய வாடிக்கையாளர்கள் இங்கிலாந்து வரை தேடி வந்து ஆஸ்டன் மார்ட்டின் கார்களை வாங்குகிறார்கள். சூப்பர் கார்களுக்கான மார்க்கெட்டும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருவதால்தான் இந்தியாவில் விற்பனையைத் துவக்கி இருக்கிறோம். கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 100 சூப்பர் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை அப்படியே இந்த ஆண்டு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தைப் பொறுத்தவரை கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்தியாவில் 20 கார்கள் புக் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் 14 கார்கள் டெலிவரி செய்யப்பட்டுவிட்டன. அதில் மூன்று கார்கள் சென்னையில் வாங்கப்பட்டுள்ளன.''

''ஒன்-77 காரை தமிழகத்தில் யாரும் வாங்கியிருக்கிறார்களா?''

''உலகம் முழுக்க ஒன்-77 கார்கள் மொத்தமே 77 கார்கள்தான் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் 70 கார்கள் ஏற்கெனவே புக் செய்யப்பட்டு விட்டன. இந்தியாவில் இதுவரை யாரும் இந்த காரை புக் செய்யவில்லை!''

20 கோடி ரூபாய் கார்!

''புக் செய்தால் எத்தனை நாட்களுக்குள் டெலிவரி கிடைக்கும்?''

''நாட்கள் அல்ல... மாதங்கள் ஆகும். ஆஸ்டன் மார்ட்டினைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பல விஷயங்களை கஸ்டமைஸ் செய்து கொடுப்போம். அதனால், காரை புக் செய்தால் டெலிவரிக்கு குறைந்தது 4 மாதங்களாவது ஆகும்!''

''சென்னையில் டீலர்ஷிப் துவக்கப்படுமா?''

''ஆம். அடுத்த ஆண்டு டீலர்ஷிப் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன!''