தொழில்நுட்பம்
Published:Updated:

பெயர் மாறிய டெல்லி ரேஸ் டிராக்

பெயர் மாறிய டெல்லி ரேஸ் டிராக்

>>சார்லஸ்  

 ##~##

நொய்டாவில் கட்டப்பட்டு வரும் இந்திய ஃபார்முலா-1 ரேஸ் டிராக் மைதானத்துக்கு, புதிய பெயர் சூட்டியுள்ளது போட்டியை நடத்தும் ஜேபி நிறுவனம். 'புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்’ எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த மைதானத்தைக் கட்டுவதற்கான இறுதிப் பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ரேஸ் போட்டிக்கான லோகோ சமீபத்தில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய தேசியக் கொடி வர்ணங்களைத் தாங்கி வந்திருக்கிறது ரேஸ் லோகோ. ''1700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு இருக்கும் புத் ரேஸ் மைதானம், திட்டமிட்டபடி ஜூலை மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும். ஜூலை மாதம் ஃபார்முலா-1 அதிகாரிகள் வந்து ரேஸ் டிராக்கை சோதனை செய்வார்கள். எந்தவிதமான தாமதமும் நடைபெறாது. திட்டமிட்டபடி இந்தியாவில் ஃபார்முலா-1 ரேஸ் நடக்கும்'' என ரேஸ் ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டி இருக்கிறார் ஜேபி நிறுவனத்தின் மனோஜ் கவுர்.

பெயர் மாறிய டெல்லி ரேஸ் டிராக்

இந்திய ரேஸ் போட்டிக்கான டிக்கெட்டுகளின் விலையைப் பொறுத்தவரை 2,500 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக கிராண்ட் ஸ்டாண்ட் டிக்கெட்டுகள் 35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம். ரேஸுக்கான டைட்டில் ஸ்பான்ஸர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படாமல் இருக்கிறது!