Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:

இலங்கைக்குப் போகிறது நானோ! 

மோட்டார் நியூஸ்

படம்:கே.ராஜசேகரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரை இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்து வந்த நானோவை, இந்த மாதம் முதல் இலங்கையில் விற்பனை செய்ய இருக்கிறது டாடா. இலங்கையில் மாதந்தோறும் 200 கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது டாடா!

வருகிறது புன்ட்டோ ஈவோ!

மோட்டார் நியூஸ்

புன்ட்டோவுக்கு புத்துணர்ச்சி கொடுக்க இருக்கிறது ஃபியட். கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கிராண்டே புன்ட்டோவின் தோற்றத்தை மாற்றி, 'புன்ட்டோ ஈவோ’ என்ற பெயரில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. புன்ட்டோ ஈவோவில் முன் பக்க பம்பர், க்ரில், ஹெட் லைட் என அனைத்துமே மாற்றப்பட்டுள்ளன. காரின் பின் பக்கத்திலும் புதிய டிசைன் டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. உள் பக்கத்தைப் பொறுத்தவரை ஆல் நியூ புன்ட்டோதான். டேஷ் போர்டு டிசைன் முதல் கியர் லீவர் வரை அனைத்துமே மாற்றப்பட்டுள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்களில் எந்த மாற்றமும் இல்லை!

விலை குறைந்த மஸராட்டி!

மோட்டார் நியூஸ்

மஸராட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. 275 bhp சக்தி கொண்ட குவாட்ரோ போர்ட்டே டீசல் இன்ஜினை, 65 லட்ச ரூபாய்க்கு அறிமுகம் செய்ய இருக்கிறது மஸராட்டி நிறுவனம். இந்த கார் மூலம் தங்களுடைய கார்களின் விற்பனை உயரும் என அறிவித்திருக்கிறது மஸராட்டி!

பொறுமையைச் சோதிக்கும் ஹோண்டா!

மோட்டார் நியூஸ்

இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என நினைத்து விட்டது ஹோண்டா. அதனால்தான் வெயிட்டிங் பீரியட்டை நான்கு மாதம், ஐந்து மாதம், ஏழு மாதம் என இழுத்துக்கொண்டே போகிறது! ஆக்டிவா வாங்க வேண்டும் என்றால், நீங்கள் ஆறு முதல் ஏழு மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்பதோடு, குறைந்தபட்சம் டீலரிடம் நீங்கள் எப்போது ஸ்கூட்டர் கிடைக்கும் என்ற விவரத்தைக்கூட வாங்க முடியாது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. ஹோண்டா சிபிஆர் 250-ஆர் பைக்கின் புக்கிங்கை கடந்த ஜனவரி மாதம் துவங்கிய ஹோண்டா, சொன்னது போல இதன் டெலிவரியை ஏப்ரல் மாதத்தில் இருந்து துவக்கவில்லை. ஹோண்டா சிபிஆர் 250-ஆர் பைக்கை புக் செய்தாலும், நீங்களும் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஹோண்டா மேல் நம்பிக்கை வைத்து வரும் வாடிக்கையாளர்களிடம், ஹோண்டா சிபி ட்விஸ்ட்டருக்குப் பதில் ஷைனை வாங்கச் சொல்வது, ஷைன் வாங்க வருபவர்களிடம் யூனிகார்னை வாங்கச் சொல்வது என டீலரிடம் என்ன பைக் இருக்கிறதோ அந்த பைக்கை விற்பது என்ற கொடுமையும் நடக்கிறது. விரைவில் வெயிட்டிங் பிரீயட்டைக் குறைத்து மக்களின் நம்பிக்கையை ஹோண்டா திரும்பப் பெற வேண்டும்!

மேக்ஸிமோ மினி வேன்!

மோட்டார் நியூஸ்

மஹிந்திரா நிறுவனம் மேக்ஸிமோ மினி வேனை கடந்த மாதம் சென்னையில் அறிமுகப்படுத்தியது. காமென் ரெயில் டீசல் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த வேன், 25 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. லிட்டருக்கு 18 கி.மீ வரை மைலேஜ் தரும் எனச் சொல்லும் மஹிந்திரா நிறுவனம், இதை 3.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்கிறது!

விற்பனைக்கு வருகிறது தோஸ்த்!

மோட்டார் நியூஸ்

அசோக் லேலாண்ட்-நிஸான் கூட்டு நிறுவனத்தின் முதல் வாகனமாக விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது 'தோஸ்த்!’ ''இது புதுமையானது. சக்தி வாய்ந்தது. உள்ளூர் கமர்ஷியல் வாகன மார்க்கெட்டில் தோஸ்த்தின் வருகை மார்க்கெட்டின் இயல்பையே மாற்றிவிடும். சுருக்கமாகச் சொன்னால், இந்திய விலையில் ஜப்பானிய தரத்தில் தோஸ்த் தூள் கிளப்பும்!'' என்கிறார் அசோக் லேலாண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கே.தாசரி!

-  மோ.அருண் ரூப பிரசாத், படம்:  ச.இரா.ஸ்ரீதர்

இந்தியாவில் அடியெடுத்து வைக்கிறது மலேசியாவின் புரோட்டான்!

மோட்டார் நியூஸ்

மலேசியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் புரோட்டான் கார்கள்தான். ஹேட்ச்பேக், எஸ்யூவி என பல வகையான கார்களை விற்பனை செய்து வரும் புரோட்டான் நிறுவனம், இந்தியாவிலும் விரைவில் விற்பனையைத் துவங்க உள்ளது. புரோட்டான் நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை அமைத்து கார்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது!

போலோவின் டீசல் இன்ஜின் மாறுகிறது!

மோட்டார் நியூஸ்

ஃபோக்ஸ்வாகன் போலோவின் 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் மிகவும் மந்தமாக இருப்பதோடு, சத்தமும் அதிகம் எழுப்புவதாக மோட்டார் விகடனில் பலமுறை எழுதி இருந்தோம். அதேபோல், வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏகப்பட்ட புகார்கள் வர... போலோவின் இன்ஜினை மாற்ற இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். புதிதாக 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட இருக்கிறது. இதே இன்ஜின் ஸ்கோடா ஃபேபியாவிலும் பொருத்தப்பட இருக்கிறது!

மீண்டும் நானோ ஃபீவர்!

மார்ச் மாதம் உச்சகட்ட விற்பனையை ருசித்த கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏப்ரல் மாதம் ஏமாற்றம்தான். ஏப்ரல் மாத விற்பனையில் பல கார் நிறுவனங்களும் இறங்கு முகத்தைச் சந்தித்தன. ஆனால், நானோ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதன்முறையாக 10,000 கார்கள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. நானோவின் விற்பனை உயர்ந்து கொண்டே வருவது சின்ன கார் தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மோட்டார் நியூஸ்

இதற்கிடையே வழக்கம் போல மாருதி ஆல்ட்டோதான் விற்பனையில் டாப். ஆல்ட்டோ 25,462 கார்கள் விற்பனையாகி, மாருதி நிறுவனம் மொத்தமாக 87,144 கார்களை விற்பனை செய்தது. ஹூண்டாய் ஐ10, 12,245 கார்கள் விற்பனையாகி இரண்டாம் இடம் பிடித்தது. ஃபோக்ஸ்வாகன் போலோ கார் கடந்த ஏப்ரல் மாதம் 3,755 கார்கள் விற்பனையாக, நிஸான் மைக்ரா வெறும் 1,100 கார்கள் மட்டுமே விற்பனையாகின. மிட் சைஸ் கார்கள் விற்பனையைப் பொறுத்தவரை தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ. ஏப்ரல் மாத விற்பனைப்படி வென்ட்டோ 2,866 கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. மாருதி ஸ்விஃப்ட்டைவிட மாருதி ஸ்விஃப்ட் டிசையரின் விற்பனை அதிகரித்திருக்கிறது. அதேபோல், ஐ20 காரின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது!

உயர்ந்துகொண்டே செல்லும் பெட்ரோல் விலை!

மோட்டார் நியூஸ்

கடந்த மாதம் பெட்ரோல் விலை மேலும் ஐந்து ரூபாய் உயர்ந்திருப்பது மிடில் கிளாஸ் மக்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் விலை 400 சதவிகிதம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இன்னும் சில வாரங்களில் பெட்ரோல் விலை மேலும் அதிகரிக்க இருக்கிறது என்பதுதான் கொடுமை. 2002-ம் ஆண்டு 31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் இன்றைய விலை

மோட்டார் நியூஸ்

67.22.

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism