தொழில்நுட்பம்
Published:Updated:

''பிரிச்சு மேய்ஞ்சுடுவோம்!''

மிரட்டும் மாணவர்கள்!பைக் ரீ-டிசைன்

>>மோ.கிஷோர்குமார்  >> சொ.பாலசுப்ரமணியம்

 ##~##

டங்களில் உள்ள பைக்குகளெல்லாம் ஷோ ரூம்களில் இருந்து அப்படியே அள்ளிக் கொண்டு வந்ததல்ல... 'பிரிச்சு மேய்ஞ்சிடுவேன்’ எனும் சிம்பு டயலாக்கை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு, காசு கொடுத்து வாங்கிய புத்தம் புது பைக்குகளைப் பிரித்துப் போட்டு, தங்களுக்குப் பிடித்தமான வடிவத்தில் உருவாக்கியவை. இப்படிச் செய்தது பைக் வல்லுனர்களோ அல்லது அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளோ அல்ல... பொறியியல், கணிதம், அக்கவுண்ட்ஸ் என வெவ்வேறு துறைகளில் படித்துக்கொண்டு இருக்கும் கல்லூரி மாணவர்கள்!

 இவர்களைச் சந்திக்கச் சென்றோம். இதற்காகவே வீட்டில் தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி, 'இதான் நண்பா எங்க ஷெட். இங்க தான் பைக்கை எல்லாம் பார்ட் பார்ட்டா கழட்டிப் போட்டு ரீ - டிசைன் பண்ணுவோம்' என செம கூலாகப் பேசுகிறார், மதுரை கே.எல்.என் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துக் கொண்டிருக்கும் ரோனி.

''பிரிச்சு மேய்ஞ்சுடுவோம்!''
''பிரிச்சு மேய்ஞ்சுடுவோம்!''

''பிளஸ் ஒன் படிச்சுக்கிட்டு இருக்கிறப்போ பைக் வேணும்னு வீட்ல கேட்டேன். பிறகு பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. காலேஜ் சேர்ந்த பிறகுதான் பல்ஸர்-200  வாங்கிக் கொடுத்தாங்க. ஒரு மூணு மாசம் ஒட்டி இருப்பேன்... அப்புறம் போர் அடிச்சதுன்னு வீட்ல வேற மாடல் பைக் கேட்டேன். அவ்வளவுதான் டெர்ரர் ஆகிட்டாங்க. அப்பறம் என்ன மாதிரியே 'பாதிக்கப்பட்டவங்க’ (!) முரளி, கார்த்திக்னு ரெண்டு பேரையும் சேர்த்துக்கிட்டு, பைக்கை ரீ-டிசைன் பண்ற வேலையில இறங்கினேன். ஒரே மாசம்தான்... என்னோட பல்ஸர்-200 பைக் டோட்டலா வேற பைக்கா மாறிடுச்சு'' என வளர்ந்த கதை சொல்கிறார் ரோனி.

'கோயம்புத்தூர்ல டிங்கர் பாபுன்னு ஒரு மெக்கானிக் இருக்கார். அவர் கிட்டதான் ரீ-டிசைன் ஐடியா கேட்டோம். அவரே பாடி பார்ட்ஸ், கிட்ஸ், பெயின்ட், ஸ்டிக்கர் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். ரீ-டிசைன்ல உள்ள நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்தார். அதைக் கேட்டுட்டு வந்து நாங்களே ரீ-டிசைன் வேலையை ஆரம்பிச்சோம். முதல் வேலையா இன்ஜினை மாத்தினோம். ஏற்கெனவே இருந்த இன்ஜினைத் தூக்கிட்டு 'ஹை-பவர்’ இன்ஜினை பெங்களூருல இருந்து வாங்கிக்கிட்டு வந்து மாட்டினோம். இன்ஜினுக்குப் போற பைப்ல நைட்ரஸ் ஆக்ஸைடு பம்ப்பை 'ஃபிட்’ பண்ணோம். இன்ஜின் உள்ள போகும்போது நைட்ரஜனும், ஆக்ஸிஜனும் தனித் தனியா பிரிஞ்சு சிலிண்டருக்குள்ள போகும் போது கம்ப்ரஷன் அதிகமாகி இன்ஜினோட ஆர்பிஎம் அதிகமாகும். நல்ல ஸ்பீடும் கிடைக்கும். ஃபில்டர்ல ஏற்கெனவே இருக்கிற ஏர் ஃபில்டரைத் தூக்கிட்டு, வெட் ஃபில்டரை மாத்தினோம். வெட் ஃபில்டர் யூஸ் பண்றதுனால பைக்கோட பிக்-அப் அதிகமாகும். ஒரு ஸ்போர்ட்டிவ் ஃபீல் கிடைக்கணும்னு பைக்கோட ஹேண்டில் பாரை கொஞ்சம் கீழ இறக்கினோம்!'' என்று ரோனி தொடர்ந்தார்.

''பிரிச்சு மேய்ஞ்சுடுவோம்!''
''பிரிச்சு மேய்ஞ்சுடுவோம்!''

'மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கிறதுனால இன்ஜினோட கான்செப்ட், எரிபொருள் சிக்கனம் பத்தி எனக்குக் கொஞ்சம் தெரியும்! அதையெல்லாம் கணக்குல வெச்சு இன்ஜின் ஃபிட் பண்ணுனேன். ஹை-ஸ்பீடு கிடைக்கணும்னு ஒரிஜினல் டயர் மாட்டினேன். ட்யூல் ஷாக் அப்ஸார்பருக்குப் பதிலா மோனோ ஷாக் மாட்டுனேன். சென்டர் ஆப் க்ராவிட்டி கணக்கு பண்ணி, ஈசியா பேலன்ஸ் கிடைக்கிற மாதிரி சீட் ஃபிக்ஸ் பண்ணேன். அதுனால முதுகு வலி எல்லாம் வர சான்ஸே இல்லை. டபுள் சைலன்ஸர், நார்மல் சேம்பர்ஸ், 22 லிட்டர் டேங்க்... இப்படி நான் விரும்பின மாதிரியே பைக்கை டிசைன் பண்ணினேன்!'' என்று முடித்தார்.

'இதே மாதிரி நிறைய பைக்குகளை ரீ-டிசைன் பண்ணி இருக்கோம்! பணத்துக்காக செய்யாம, ஜஸ்ட் ஒரு பேஷனுக்காகச் செய்றோம்! ப்ரெண்ட்ஸ், தெரிஞ்சவங்கனு எல்லாரும் பைக்கைக் கொண்டு வந்து, 'தம்பி, நாங்க எதிர்பார்க்கிற மாதிரி ரீ-டிசைன் பண்ணித் தாங்க’ன்னு எங்களை நம்பிக் கொடுக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கும்! இதுவரைக்கும் ஒரு 15 பைக்குகள்கிட்ட ரீ-டிசைன் பண்ணிக் கொடுத்திருக்கோம்!' என்கிறார்கள் பெருமையாக!