சூப்பர் உற்சாகத்துடன் துவங்கியது 2009-ம் ஆண்டின் முதல் சூப்பர் பைக் ரேஸ். ஆஸ்திரேலியாவின் ஃபிலிப் தீவில், மார்ச் முதல் தேதியில் ஆரம்பமானது அனல் பறக்கும் இந்த ரேஸ்!

தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்தார் யமஹாவின் புதுமுக வீரரான பென் ஸ்பீஸ்.

மார்ச் 1, முதல் சுற்று - ஃபிலிப் தீவு

ரேஸ் 1

முதலிடத்தில் இருந்து போட்டியை ஆரம்பித்த பென் ஸ்பீசுக்கு ஆரம்பமே அதிர்ச்சி! முதல் வளைவிலேயே டிராக்கை விட்டு வெளியே பறந்தது ஸ்பீஸின் யமஹா! இந்தச்

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட டுகாட்டியின் ஹாகா, முதல் இடத்துக்கு முன்னேறினார். ஆனால், ஹாகாவைத் துரத்திய சுசுகியின் நெர்கெர்ஸ்னர் முதல் இடத்தைப் பிடித்ததால் ரேஸ் பரபரப்பானது. ரசிகர்களின் கண்கள் சுசுகியையும், டுகாட்டியையும் துரத்திக் கொண்டே இருந்தன. திடீரென மழை பெய்ய ஆரம்பிக்க... ஈரமான சாலையில் பைக் ஓட்டுவதில் வல்லவரான ஹாகா, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். நெர்கெர்ஸ்னர் இரண்டாம் இடம் பிடித்தார். பென் ஸ்பீசுக்குக் கிடைத்தது பதினாறாவது இடமே!

ரேஸ்-2

முதல் ரேஸில் கோட்டை விட்டு வெளியேறியதால், இரண்டாவது ரேஸில் கோட்டையைப் பிடிக்கும் வெறியுடன் த்ராட்டிலை முறுக்கினார் ஸ்பீஸ். வெறித்தனமாகப் பறந்தது யமஹா! அதன் வேகத்துக்குக் கொஞ்சம் ஈடு கொடுத்தது ஹாகாவின் டுகாட்டி மட்டுமே! மற்ற வீரர்கள் அனைவருமே பின்தங்கி விட்டனர். இரண்டாவது ரேஸில் சுலபமாக வெற்றி பெற்றார் பென் ஸ்பீஸ்.

மார்ச் 14, இரண்டாவது சுற்று - கத்தார்

சூப்பர் பைக் ரேஸ் போட்டிகளின் இரண்டாவது சுற்றுக்காகக் காத்திருந்தது கத்தார். மோட்டோ ஜீபி, இதமான இரவில் இதே டிராக்கில் நடக்க இருக்கிறது. ஆனால், கொதிக்கும் வெயிலில் ஆரம்பமானது சூப்பர் பைக் ரேஸ். இங்கும் பென் ஸ்பீஸ் தகுதிச் சுற்றில் வெற்று பெற்று முதலில் இருந்து போட்டியைத் துவக்கினார்.

ரேஸ் 1

மணிக்கு 315 கி.மீ வேகம் வரை செல்லக் கூடிய நேர் பாதை கத்தார் டிராக்கில் இருப்பதால், உலகின் வேகமான ரேஸ் டிராக்குகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு வீரரும் தங்களது பைக்கின் டாப் ஸ்பீடைச் சோதித்துப் பார்த்து விட வேண்டும் என்கிற வெறியுடன் ஆயத்தமானார்கள். ரேஸ் துவங்கிய சிறிது நேரத்தில் ஹாகா முதலிடம் பிடித்துவிட, மேக்ஸ் பியாஜி இரண்டாம் இடம் பிடிக்க, பென் ஸ்பீஸ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இறுதியாக 6 லேப்புகளே இருந்த நிலையில், தனது முழு பலத்தையும் ஆக்ஸிலரேட்டர் மீது காட்டினார் ஸ்பீஸ்... வெற்றி அவருக்கே கிடைத்தது. இரண்டாம் இடம் டுகாட்டியின் ஹாகாவுக்காகக் காத்திருந்தது.

ரேஸ்-2

இரண்டாவது ரேஸ் பென் ஸ்பீசுக்கு மிகவும் சுலபமான ரேஸாக அமைந்தது. பென் ஸ்பீஸ் முதலிடம் பிடித்து 'டபுள்' பட்டம் வாங்க... ஹாகா இந்த முறையும் இரண்டாவது இடம் பிடித்தார். சூப்பர் பைக் ரேசுக்குப் புது வரவான ஏப்ரில்லா அணியின் மேக்ஸ் பியாஜி, இரண்டு ரேஸிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், பென் ஸ்பீஸின் வேகம் மற்ற வீரர்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. அவருக்குச் சவால் விடுக்க புதிய டெக்னிக்குகளை ஆராய ஆரம்பித்திருக்கிறார்கள்.

காத்திருக்கிறது ரசிகர்களுக்கு த்ரில் விருந்து!