பனிமலை, புல்வெளி, திக் திக் காடுகளில் நடக்கும் வேர்ல்டு ராலி சாம்பியன் ஷிப் போட்டிகளின் மூன்றாவது சுற்று, மார்ச் 13- முதல் 15-ம் தேதி வரை சைப்ரஸில் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக பல மாறுதல்களுடன் இந்த ஆண்டுதான் சைப்ரஸில் போட்டி நடக்கிறது.

சுட்டெரிக்கும் சூரியன், புழுதி, கற்பாறைக் கலவை என்று தான் சைப்ரஸ் சர்க்யூட்டை வர்ணிக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 14 ஸ்டேஜ். முதல் நாள் முழுவதும் தார் சாலை... மற்ற இரண்டு நாட்களும் கரடுமுரடான கற்பாதை என்பதால், ரசிகர்களுக்கு கலர்ஃபுல் ராலியாக அமைந்தது சைப்ரஸ் போட்டி.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை வென்று வரும் பிரான்ஸ் நாட்டின் செபாஸ்டியன் லோப், இந்த ஆண்டும் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். மற்ற வீரர்கள் முந்த வாய்ப்பே இல்லை என்பது போல இருந்தது அவரது வேகம். ஃபின்லாந்தின் மிகா ஹிர்வோனன் இரண்டாவது இடத்தையும், பீட்டர் ஸால்பர்க் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

சாம்பியன் ஷிப் பட்டியலில் செபாஸ்டியன் லோப் முப்பது புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். புரொடக்ஷன் வேர்ல்டு ராலி சாம்பியன் ஷிப் போட்டியில் சிட்வின் அணி சார்பில் பங்கேற்று வரும் இந்தியாவின் கௌரவ் கில், ஐந்தாவது இடத்தில் பறந்து கொண்டிருந்தார். ஆனால், கௌரவ் கில்லின் காரில் இன்ஜின் கோளாறு எனும் பூதம் கிளம்ப... போட்டியில் இருந்து வெளியேறினார்.

அடுத்த ராலி ஏப்ரல் 2 முதல் -5 வரை போர்ச்சுகலில் நடைபெற இருக்கிறது.