மாதத்துக்கு ஒருமுறை அதிரடி மாற்றங்களை அறிவித்துக் கொண்டு இருக்கிறது ஃபார்முலா-1 நிர்வாகம். 'சாம்பியன் ஷிப் பட்டியலில் அதிக வெற்றிகளைப் பெறுபவர்தான் இனி சாம்பியன்' என அறிவித்தது ஃபார்முலா-1 நிர்வாகம். அதாவது, இதுவரை அதிக புள்ளிகளைப் பெறுபவர்களே ஃபார்முலா-1 சாம்பியனாக அறிவிக்கப்பட்டு வந்தனர். இனிமேல் புள்ளிகளின் கணக்கில் சாம்பியன் கிடையாது. ஒரு ஆண்டில் அதிக வெற்றிகளைப் பெறுபவர்களே சாம்பியன் என்பதுதான் புதிய திட்டம் என அறிவிக்கப்பட்டது!

இருப்பினும், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 10, இரண்டாம் இடத்துக்கு 8 என புள்ளிகள் வழங்கப்படும். ஒரு ஆண்டில், இரண்டு மூன்று வீரர்கள் ஒரே

எண்ணிக்கையில் வெற்றி பெற்றால், புள்ளி அடிப்படையில் அதிக புள்ளிகளைப் பெறுபவர் சாம்பியனாக அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது ஃபார்முலா-1 நிர்வாகம். ஆனால் இதற்கு அணிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் 2010 ஆம் ஆண்டு வரை புதிய விதிமுறைகளை நிறுத்திவைப்பதாக திடீரென அறிவித்துள்ளது.

ரிச்சர்ட் பிரான்ஸன் வாங்குவதாக இருந்த ஹோண்டா அணி கை மாறியிருக்கிறது. ஃபெராரி அணியின் முன்னாள் தொழில் நுட்ப இயக்குனர் ராஸ் பிரானிடம், ஹோண்டா அணியை விற்றுவிட்டதாக அறிவித்திருக்கிறது ஹோண்டா நிர்வாகம். இனிமேல் ஹோண்டா அணி, 'பிரான் ஜீபி ஃபார்முலா-1 அணி' என்று அழைக்கப்படும். இந்த அணிக்கு மெர்சிடீஸ் பென்ஸ் இன்ஜின்களை வழங்கும்.

இதற்கிடையே ஜெரஸ் நகரில் நடைபெற்ற ஃபார்முலா-1 இறுதி டெஸ்ட்டிங்கில் பிரான் அணியின் ஜென்சன் பட்டன், லூயிஸ் ஹாமில்டனைத் தோற்கடித்து முதலிடம் பிடித்திருப்பதுதான் ஆச்சரியம்.

இந்த ஆண்டு ரேஸ் டிராக்கில் மோத இருக்கும் அணிகள் பற்றி ஒரு அப்டேட்...

மெக்லாரன்

லூயிஸ் ஹாமில்டன் தங்கள் அணியில் இருப்பதையே பெரிய பலமாகக் கருதுகிறது மெக்லாரன். 1999-ம் ஆண்டுக்குப் பிறகு 2008-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்தவர் லூயிஸ். ஆனால், சென்ற ஆண்டு மற்றொரு வீரரான ஹெக்கி கோவால்னைன் பல போட்டிகளில் சொதப்பியதால், அணிகளுக்கான பட்டத்தை ஃபெராரியிடம் இழந்தது மெக்லாரன். இந்த ஆண்டும் லூயிஸ், கோவால்னைன் என்கிற பழைய கூட்டணியிலேயே களம் இறங்குகிறது.

ஃபெராரி

மைக்கேல் ஷ¨மேக்கர் இருந்தவரை ஃபெராரி காட்டில் மழைதான். 2005 மற்றும் 2006-ம் ஆண்டில் ரெனோ அணியிடம் சாம்பியன் பட்டத்தை இழந்த ஃபெராரி, 2007-ம் ஆண்டு மீண்டும் கிமி ராய்க்கோனன் மூலம் வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. 2008-ம் ஆண்டு 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஹாமில்டனிடம் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டு, விரக்தியின் உச்சிக்கே போனது ஃபிலிப் மாஸா மற்றும் ஃபெராரி டீம்! இந்த ஆண்டும் ஃபார்முலா-1-ல் அனுபவசாலிகளான கிமி ராய்க்கோனன், மாஸா இருவரின் பலத்துடன் மோத இருக்கிறது ஃபெராரி.

பிஎம்டபிள்யூ

1993 முதல் ஃபார்முலா-1 ரேஸில் இருக்கும் பிஎம்டபிள்யூ அணிக்கு, கடந்த ஆண்டுதான் முதல் வெற்றி கிடைத்தது. ராபர்ட் குபிகாதான் அந்த வெற்றி நாயகன். நிக் ஹெட்ஃபிட் மற்றும் ராபர்ட் குபிகா இருவருமே சென்ற ஆண்டு பல போட்ட

ிகளில் 2 மற்றும் 3 இடங்களைப் பிடித்ததால் ஃபெராரி, மெக்லாரன் அணிகளுக்கு அடுத்தபடியாக வந்தது பிஎம்டபிள்யூ. இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றுவிட வேண்டும் என்பதுதான் இதன் திட்டம்.

ரெனோ

2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற ரெனோ அணிக்கு, அலான்சோ அணி மாறியதில் இருந்தே தலைவலி ஆரம்பித்தது. 2007-ல் மோசமாகத் தோல்வி அடைந்த ரெனோ அணி, 2008-ல் அலான்சோவின் வருகையால் மீண்டும் பலம் பெற்றது. இருந்தாலும் இன்ஜின் பல சமயங்களில் காலை வாரியதால் சோர்ந்து போனார் அலான்சோ. இந்த ஆண்டு மீண்டும் ஃபார்முக்கு வரத் துடிக்கிறது ரெனோ. அலான்சோவுக்குத் துணையாக நெல்சன் பிக்யூட்!

ஃபோர்ஸ் இந்தியா

இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோர்ஸ் இந்தியா, கடந்த ஆண்டு அனைத்துப் போட்டிகளிலுமே மண்ணைக் கவ்வியது. ஒரு புள்ளிகூடப் பெறாததால் டென்ஷன் ஆன விஜய் மல்லையா, ஃபெராரி இன்ஜினில் இருந்து மெக்லாரன் இன்ஜினுக்குத் தாவி இருக்கிறார். ஆனால், வீரர்களை மாற்றவில்லை. ஆட்ரியான் சுட்டில் மற்றும் ஃபிஸிகெல்லா இருவருமே இந்த ஆண்டும் ஃபோர்ஸ் இந்தியாவுக்காக ரேஸில் பறக்க இருக்கின்றனர்.

டொயோட்டா, ரெட்புல், டோரோ ரோஸோ, பிரான் ஜீபி, வில்லியம்ஸ் போன்ற அணிகளும் இந்த ஆண்டுக்கான சாம்பியன் ரேஸில் இருக்கின்றன.

இந்த இதழ் உங்கள் கைகளில் இருக்கும்போது ஃபார்முலா-1 போட்டிகளின் முதல் சுற்று ஆஸ்திரேலியாவில் மார்ச் 29-ம் தேதி முடிந்திருக்கும்!

இரவினில் ஆட்டம்!

இரவில் ரேஸ் ஓட்டப் பழகிக் கொண்டு இருக்கிறார்கள் மோட்டோ

ஜீபி வீரர்கள். கத்தாரில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி இரவு நடைபெற இருக்கிறது மோட்டோ ஜீபி-யின் முதல் சுற்று. மெகா சைஸ் விளக்குகளின் துணையுடன் ஒளி வெள்ளத்தில் நடைபெறும் இந்த ரேஸ் கொஞ்சம் சவாலானது. அதனால், கத்தாரில் கேம்ப் அடித்திருக்கும் அனைத்து ரேஸ் வீரர்களும் இரவில் ரேஸ் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே செப்டம்பர் 20-ம் தேதி ஹங்கேரியில் நடைபெற இருந்த மோட்டோ ஜீபி போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய ரேஸ் டிராக் கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருவதால்தான் இந்த ஒத்திவைப்பு. 'ஹங்கேரிக்குப் பதிலாக வேறு எங்கும் ரேஸ் போட்டிகள் நடைபெறாது' என்று மோட்டோ ஜீபி போட்டிகளை நடத்தும் டோர்னா ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது.