ஃபார்முலா-1 என்றாலே சட்டென்று ஞாபகம் வரும் ஒரே பெயர் மைக்கேல் ஷுமேக்கர். ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இவர், தன்னுடைய வெற்றிக்காக எதையும் செய்யத் துணிந்தவர் என்பதுதான் உண்மை!

ஜேக்கெஸ் வில்லெனவ் காரை இடித்து சாம்பியன் பட்டம் வெல்ல முயன்றது, தகுதிச்

சுற்றின்போது மற்ற வீரர்கள் செல்ல முடியாதபடி ரேஸ் டிராக்கின் நடுவே காரை நிறுத்தியது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மற்ற வீரர்களைப் பதற வைத்து ஓவர்டேக் செய்வது... இப்படி மைக்கேல் ஷ§மேக்கரின் ரேஸ் தந்திரங்கள் பலப் பல!

ஆனால், மைக்கேல் ஷுமேக்கரையே மிரள வைத்த சம்பவமும் ஃபார்முலா-1 உலகில் உண்டு. ஷுமேக்கருக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தவர் மெக்லாரன் அணியின் மிக்கா ஹாக்கினென்.

ஷுமேக்கருக்கும், ஹாக்கினெனுக்கும் இடையிலான யுத்தம் ஃபார்முலா-1-ல் ஆரம்பித்தது அல்ல. இளம் வயதில் ஃபார்முலா-3 போட்டிகளில் கலந்து கொண்ட காலம் தொட்டே இருவருக்கும் இடையே இந்த மோதல் இருந்து வருகிறது. ஃபார்முலா-3 போட்டியில், ஒரு ரேஸ் முடிவடைய கடைசி லேப் இருந்தபோது ஷுமேக்கரின் காரும், ஹாக்கினென்னின் காரும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு பறந்து கொண்டு இருந்த சமயம்... ஹாக்கினென்னை எப்படி வீழ்த்துவது என நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் ஷுமேக்கர். அதேசமயம் ஹாக்கினென், ஷுமேக்கரை

ஓவர்டேக் செய்ய முயல... திடீரென பிரேக் அடித்து வழியை மறித்தார் ஷுமேக்கர். இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஹாக்கினென், காரோடு ரேஸ் டிராக்கைவிட்டு வெளியே போய் விழுந்தார். இந்தச் சம்பவத்தில் இருந்து இருவருக்கும் இடையே ரேஸ் தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

1998-ம் ஆண்டு நடந்த ஃபார்முலா-1 போட்டிகளில் மைக்கேல் ஷுமேக்கரும், மிக்கா ஹாக்கினென் இருவரும் சம புள்ளிகள் பெற்றிருக்க... யார் சாம்பியன் என்பதை முடிவு செய்ய இரண்டு போட்டிகள்தான் எஞ்சியிருந்தன. ஷ§மேக்கரைப் பழி தீர்த்துவிட வேண்டும் என்று துடித்த ஹாக்கினென், பேய் வேகத்தில் பறக்க ஆரம்பித்தார். ஹாக்கினெனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார் ஷுமேக்கர். அவரது தந்திரங்களும் பலன் தரவில்லை. கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஷுமேக்கரிடம் இருந்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிப் பறித்தார் மெக்லாரனின் ஹாக்கினென். எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய சாம்பியன் பட்டம் ஹாக்கினென்னுக்கு அந்த ஆண்டுதான் கிடைத்தது.

1999-ம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா-1 ரேஸிலும் இருவருக்கும் இடையே போட்டா போட்டி தொடர்ந்தது. ஆனால், அந்த ஆண்டு அதிர்ஷ்டம் ஹாக்கினென் பக்கம்தான் இருந்தது. எப்படியும் வெற்றியடைய வேண்டும் என்ற வெறியுடன் ரேஸ் ஓட்டிய ஷுமேக்கர் விபத்தில் சிக்கினார். இதில், அவரது கால் எலும்பு உடைந்ததால் 6 ரேஸ்களில் பங்கு பெற முடியாமல் போனது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் மிக்கா ஹாக்கினென்.

இரண்டு ஆண்டுகள் தொடர் தோல்விக்குப் பிறகு வெகுண்டு எழுந்தார் ஷுமேக்கர். 2000-ம் ஆண்டு ஸ்பெயினின் ஸ்பா ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டி, ரசிகர்களுக்கு மிகவும் த்ரிலிங்காக அமைந்தது. சாம்பியன் பட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்த ஷ§மேக்கருக்கு ஹாக்கினென் பதிலடி கொடுத்த ரேஸ் இது. ரேஸ் மைதானத்தின் நேர் டிராக்கில் டாப் ஸ்பீடில் பறந்தது மைக்கேல் ஷுமேக்கரின் ஃபெராரியும், ஹாக்கினெனின் மெக்லாரனும். ஆனால், உச்சகட்ட வேகத்தில் பறந்த ஹாக்கினென் வெற்றி பெற்றார். இருப்பினும், அடுத்தடுத்தச் சுற்றுகளில் வெற்றி பெற்ற ஷுமி சாம்பியன் பட்டம் வென்றார்.

கடைசியாக 2002-ல் ஓய்வு பெற்று ஷுமேக்கருக்கு நிம்மதி தந்தார் ஹாக்கினென்.