சத்தம் இல்லாத பைக்கைக் கேட்டேன்... பெட்ரோல் இல்லாத இன்ஜின் கேட்டேன்... புகையே இல்லாத சைலன்சர் கேட்டேன்...' என ஹை பிட்சில் பாடுபவர்களுக்கான ஒரே சாய்ஸ் இ-ஸ்கூட்டர்ஸ்! பெட்ரோலில் ஓடும் வாகனங்களுக்கு டிமாண்ட் ஒரு பக்கம் இருந்தாலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக் கொண்டு இருப்பதால், இ-ஸ்கூட்டர்களைத் தயாரிக்க பலர் போட்டி போடுகிறார்கள்.

ஹீரோ மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக, சைக்கிள் தயாரிப்பில் கொடி கட்டிப் பறக்கும் பிஎஸ்ஏ நிறுவனமும் இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் குதித்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம், ஐந்து இ-ஸ்கூட்டரெட் மாடல்களை அறிமுகப்படுத்திய பிஎஸ்ஏ நிறுவனத்தின் சென்னை அம்பத்தூர் ஃபேக்டரிக்குள் ஒரு விசிட் அடித்தோம்.

ஃபேக்டரி என்று சொன்னாலும், இது பைக்குகளைத் தயாரிக்கும் இடம் கிடையாது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரெட்டுகளுக்குத் தேவையான பாகங்கள் அனைத்தும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு, இங்கே அசெம்பிள் செய்யப்படுகின்றன. சீனாவில் இருந்து பேட்டரி, மோட்டார், ஃப்ரேம், பாடி என கிட்டத்தட்ட 90 சதவிகித பாகங்கள் இறக்குமதி ஆகின்றன. டயர், பல்ப், ஷாக் அப்ஸார்பர், பிரேக் கேபிள் ஆகியவை இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகின்றன. அசெம்ப்ளி யூனிட்தான் என்றாலும், பல கட்டங்களாக டெஸ்ட்டுகள் இங்கே நடத்தப்படுகின்றன.

சீனாவில் இருந்து பிஎஸ்ஏ ஃபேக்டரிக்குள் நுழையும் பேட்டரிகள் முதலில் செல்லும் இடம் எலெக்ட்ரானிக்ஸ் டெஸ்ட்டிங் ரூம்! இங்கே பேட்டரிகளின் ஆயுள் மற்றும் தரத்தை முழுமையாகச் சோதிக்கிறார்கள். சார்ஜ் செய்தால் எவ்வளவு நேரம் வரை சார்ஜ் நிற்கும், மழை நீரில் ஸ்கூட்டரெட் மூழ்கினால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என பல கட்டப் பரிசோதனைகளுக்கு பேட்டரிகள் உட்படுத்தப்படுகின்றன. ஸ்கூட்டரெட்டில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும் டையக்னைஸிங் யூனிட்டை, பிஎஸ்ஏ மோட்டார்ஸ் நிறுவனமே தயாரித்திருக்கிறது. இதில் இருக்கும் ஒயருடன் ஸ்கூட்டரெட்டை இணைத்ததும், முழு ஜாதகமும் ஸ்கிரீனில் தெரிகிறது.

அடுத்ததாக ஸ்கூட்டரெட்டின் சேஸி டெஸ்ட் செய்யப்படுகிறது. ஒருவர் ஸ்கூட்டரை

ஓட்டினால் எவ்வளவு எடை இருக்குமோ, அதேபோல் இரு மடங்கு எடையை சேஸியின் மேல் வைத்து சோதனை செய்கிறார்கள்.

அடுத்தது, அசெம்பிளி லைன். பாடி பேனல்கள், பேட்டரி, மோட்டார், எலெக்ட்ரிகல்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பாகங்கள் அசெம்பிள் செய்யப்பட்டு முழு இ-ஸ்கூட்டரெட் உருவாகுமிடம். மீண்டும் அடுத்த கட்ட டெஸ்ட்டுக்குச் செல்கிறது முழு ஸ்கூட்டரெட். சேஸிஸ் டைனமோ மீட்டரில் வைத்து அதிகபட்ச வேகம், ஒரு சார்ஜுக்கு எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதையெல்லாம் சோதிக்கிறார்கள்.

இதற்கு அடுத்து டெஸ்ட் டிராக். இங்கேதான் நம்மிடம் பிஎஸ்ஏ மோட்டார்ஸின் ஐந்து ஸ்கூட்டரெட்டுகள் ஒப்படைக்கப்பட்டன. முதலில் நாம் டெஸ்ட் செய்தது பள்ளி மாணவ - மாணவிகளின் பயன்பாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட ஸ்மைல்! சாலையில் நாம் ஏற்கெனவே பார்க்கும் ஸ்கூட்டரெட்டுகளைப் போலவேதான் இருக்கிறது ஸ்மைல். ஆனால், ஸ்டிக்கர்களை வைத்து விளையாடி இருக்கிறார்கள். 250 வாட்ஸ் மோட்டார் கொண்டுள்ள இதில், மணிக்கு அதிகபட்சம் 25 கி.மீ வேகம் வரை செல்ல முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 60 கி.மீ தூரம் வரை செல்லும் என்கிறார்கள். ஆனால், நாம் இதைச் சோதித்துப் பார்க்கவில்லை. இந்த மாடலில் மட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கென்று தனியாக ஒரு சுவிட்ச் உள்ளது. இதைத் தட்டினால் பேட்டரி நீடித்து வரும். ஆனால், வேகம் 20 கி.மீ வரைதான் செல்லும்.

அடுத்தது டீன் டிக்கெட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்டு இருக்கும் 'திவா'! அசப்பில் ஸ்கூட்டி பெப்பின் க்ளோனிங் போல இருக்கிறது. இதுவும் 250 வாட்ஸ் மோட்டார் கொண்டதுதான். ஆனால், இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கி.மீ தூரம் வரை செல்லலாம். அடுத்த மாடல், ஸ்டீரிட் ரைடர். இது கல்லூரி இளைஞர்களைக் கவரக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் 250 வாட்ஸ் மோட்டார். இதுவும் 70 கி.மீ தூரம் வரை செல்லும். இந்த மூன்று 250 வாட்ஸ் ஸ்கூட்டரெட்டுகளிலும் லீடிங் லிங்க் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ரைடு குவாலிட்டி சுமார்தான். ஸ்கூட்டரெட்டில் இருந்து தனியே பேட்டரிகளை எடுத்துக் கொண்டு போய் சார்ஜ் செய்யும் வசதி இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மூன்று ஸ்கூட்டரெட்டுகளும் 250 வாட்ஸ் மோட்டார் கொண்டது என்பதால் லைசென்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் தேவையில்லை. இதன் பேட்டரி 20,000 கி.மீ வரை உழைக்கும் என்கிறார்கள்.

அடுத்தது, 500 வாட்ஸ் கொண்ட 'ரோமர்!' அதிக வேகம் பயணிப்பவர்களுக்கான ஸ்கூட்டர் இது. இது மணிக்கு 40 கி.மீ வரை வேகம் போகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 55 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம். அடுத்தது, இன்னும் கொஞ்சம் சக்தி வாய்ந்த 'ரோமர் ப்ளஸ்'. இதில் இருப்பது 800 வாட்ஸ் மோட்டார். இதன் வேகம் மணிக்கு 45 கி.மீ! ஒரு சார்ஜில் 50 கி.மீ போகலாம். இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் பிஎஸ்ஏவின் டாப்- எண்ட் மாடல்கள். இந்த இரண்டிலுமே முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளதால், கரடுமுரடான பாதைகளில் பயணித்தாலும் ரைடு குவாலிட்டி சிறப்பாக இருக்கிறது. பிரேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரெட்டுகளின் பர்ஃபாமென்ஸ§க்குப் போதுமானதாக இருக்கிறது. இதன் பேட்டரி 15,000 கி.மீ வரை தாங்கும் என்கிறார்கள்.

எடை மிகவும் குறைவு என்பதால் வளைத்து நெளித்து ஓட்டுவது சுலபம்! இன்ஜின் சத்தமோ, அதிர்வுகளோ இதில் கிடையாது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மொத்த எடையில் 40 சதவிகிதம் பேட்டரியின் எடை. பேட்டரிகளை மாற்ற 6,000 ரூபாயில் இருந்து 7,500 ரூபாய் வரை செலவாகும்.

ஏன் இந்த விலை?

''எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பிரச்னையே

வாடிக்கையாளர் சேவையும், சர்வீஸ§ம்தான். இதற்கு நீங்கள் என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்கள்?''

''முருகப்பா குழுமம் என்பது நூற்றாண்டு கண்ட நம்பிக்கையான நிறுவனம். இதன் பிஎஸ்ஏ நிறுவனமும் பல ஆண்டுகளாக சைக்கிள் விற்பனையில் இருக்கிறது. இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இறங்கி இருக்கும் நாங்கள், தொடர்ந்து இந்தத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறோம். வாடிக்கையாளர் சேவையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். சர்வீஸ் பிரச்னைகள் அனைத்தும் உடனுக்குடன் தீர்க்கப்படும். தென் இந்தியா முழுக்க 25 டீலர்கள் இருப்பதால் இது நிச்சயம் சாத்தியம். சென்னையில் மட்டும் 3 டீலர்கள் உள்ளனர். ஏப்ரல் மாத இறுதிக்குள் மேலும் 20 டீலர்களை நியமிக்க இருக்கிறோம்.''

''பெட்ரோல் ஸ்கூட்டர்களின் அளவுக்கு விலை இருக்கிறதே?''

''பேட்டரி உள்ளிட்ட பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுதான் இதற்குக் காரணம். மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரியை அரசு குறைத்தால் விலையும் குறையும்.''

வீட்டுக்கு அருகில் இருந்து மார்க்கெட், காலேஜ், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், விளையாட்டு மைதானத்துக்கு சத்தம் இல்லாமல், புகை இல்லாமல் சென்று வர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நிச்சயம் உதவும்!