மீண்டும் புத்துணர்வு பெற்றிருக்கிறது பழைய கார் மார்க்கெட். உலகப் பொருளாதாரப் பின்னடைவால் கடந்த ஜனவரியில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான பழைய கார் மார்க்கெட்டில், சமீபத்தில் அரசு அறிவித்த சில சலுகைகளால் மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது.

புதிய கார்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்திருப்பதால், குறைந்த பட்ஜெட்டில்

பழைய கார்களை வாங்க, மத்திய தர குடும்பத்தினரிடையே ஆர்வம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. இரண்டிலிருந்து இரண்டரை லட்சத்துக்குள் விலையுள்ள மாருதி 800, ஆல்ட்டோ, சான்ட்ரோ போன்ற சிறிய வகை கார்கள் சுறுசுறுப்பாக விற்பனையாகத் துவங்கி உள்ளன. சென்னை நகரில், சிறிய வகை கார்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நடுத்தர வகை கார்களில் ஹோண்டா சிட்டிக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. அதேபோல், ஹ¨ண்டாய் ஆக்ஸென்ட், ஃபோர்டு ஐகான் போன்ற கார்களின் விற்பனையும் சூடு பிடித்திருக்கின்றன. எம்யூவி, எஸ்யூவி வகைகளில் எப்போதும் போல இனோவாவுக்கு சிறப்பான மார்க்கெட் இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம்

ஸ்கார்பியோ 2.6 இன்ஜின் கொண்ட மாடலின் தயாரிப்பை நிறுத்திவிட்டதால், விற்பனையாகாமல் ஷோரூமில் ஸ்டாக் இருக்கும் 2.6 இன்ஜினுக்கு சுமார் ரூ.50,000 முதல் அதிரடி விலைக் குறைப்பை சமீபத்தில் அறிவித்து இருக்கிறது. மேலும், புதிய மாடல் ஸ்கார்பியோ 'Mighty Muscular' அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதால், பழைய கார் சந்தையில் 2.6 மாடலின் விற்பனை மந்தமடைந்திருக்கிறது.

சென்னையைப் பொருத்தவரை பழைய கார்களுக்கு நிதி நிறுவனங்கள் காரின் விலையில் 60 சதவிகிதம்வரை கடன் வழங்கி வருகிறார்கள். அதனால், பழைய கார் சந்தையில் விற்பனை சற்றே வேகமெடுத்திருக்கிறது. ஆனால், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில நிதி நிறுவனங்கள் மட்டுமே கடன்

Click to enlarge

கொடுக்கின்றன. அதிலும், காரின் விலையில் 50 சதவிகிதம்வரை மட்டுமே கடன் தருகின்றன. இருந்தபோதும் கார்களின் விற்பனை கூடியிருக்கிறது. ''இந்த விற்பனை நீடித்தால் ஏற்கெனவே ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீண்டு விடுவோம்'' என்கிறார்கள் மதுரை, கோவையைச் சேர்ந்த பழைய கார் டீலர்கள்.

ஆன்ட்டி க்ளைமாக்ஸ்!?

சிறிய ரக கார்களின் விற்பனை கூடுதலாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், டாடா நானோவின் வரவு பழைய கார் டீலர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து பழைய கார் வாங்குவதைவிட,

அதே விலைக்குப் புத்தம் புது டாடா நானோ கார் வாங்கும் எண்ணம் மக்களிடம் பரவிவிட்டால், பழைய கார் சந்தையில் விற்பனைக்காகக் காத்திருக்கும் பல பழைய கார்களில் ஒட்டடை சேர ஆரம்பித்துவிடும்.

டாடா நானோவின் உற்பத்தி முழுவீச்சில் ஆரம்பிக்க சற்று காலமாகும் என்ற செய்திதான் பழைய கார் டீலர்களின் வயிற்றில் பாலை வார்த்துக் கொண்டிருக்கிறது!