குடகுமலையில்தான் காவிரி பிறக்கிறது. தமிழ் சினிமா கவிஞர்களைக் கேட்டால், 'குடகு

மலை உச்சியிலே புறப்படும் தென்றல்' என்று பாட்டாகவே பாடிவிடுவார்கள். காபி ரசிகர்களைக் கேட்டால், கூர்க் - காபியின் பிறப்பிடம் என்பார்கள்.

மேற்குமலைத் தொடரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மலைப் பகுதியின் உணவு, உடை, பேசும் மொழி, மக்கள் என அனைத்திலும் தனி அடையாளங்கள் உண்டு. குடகுமலையில் உருவாகும் காவிரி, பல துணை ஆறுகளுடன் பலம் பெற்று, மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வருகிறது. இங்கிருந்துதான் தமிழகத்தை நோக்கிப் பயணம்.

காபி, மிளகு, ஆரஞ்சு போன்றவை குடகு பயிர்கள். சின்னச் சின்ன குன்றுகள், பசுமை பள்ளத்தாக்குகள், தெளிந்த நீரோடைகள், இதமான பருவநிலை என சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற உல்லாசபுரி குடகு.

புத்தம் புதிதாக அறிமுகமான ஃபியட் லீனியாவில் குடகுமலை செல்ல முடிவெடுத்தொம். அதிகாலை ஆறு மணிக்குப் புறப்பட்டோம் குடகுமலை நோக்கி. தங்க நாற்கரச் சாலையில் காஞ்சிபுரம், வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் சென்று, அங்கிருந்து மைசூர் வழியாக குடகை அடைவது எனத் தீர்மானித்திருந்தோம்.

தாராள இடவசதியுடன் நான்கு பேர் அமர்ந்து பயணிக்க ஏற்ற சொகுசு காராக இருக்கிறது ஃபியட் லீனியா. லக்கேஜ் வைக்க போதுமான இடம், டிரைவர் இருக்கையை நமது வசதிக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, 'ப்ளூ அண்டு மீ' தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக், காற்றுப் பைகள், தரமான இன்டீரியர் என சொகுசு காரில் இருக்கும் அத்தனை வசதிகளும் இருக்கின்றன.

தங்க நாற்கரச் சாலையில் லீனியாவைச் சோதித்தோம். க்ரிப்பான டயர்கள், சுலபமான கியர் ஷிஃப்ட், பவர் ஸ்டீயரிங் ஆகியவை சிறப்பாக இருக்கின்றன. நெடுஞ்சாலையில்

1.3 மல்ட்டிஜெட் இன்ஜின் நல்ல பர்ஃபாமென்ஸை அளிக்கிறது. அதிகபட்ச வேகத்தைச் சோதிக்க ஆக்ஸிலரேட்டரை அழுத்தினோம். மணிக்கு 170 கி.மீ வேகம் வரை பறந்தபோதும், அசராமல் ஈடுகொடுத்தது லீனியாவின் இன்ஜின். இந்த ஒட்டுமொத்தப் பயணத்தில் லிட்டருக்கு 17.5 கி.மீ வரை மைலேஜ் அளித்தது ஆச்சரியம்தான். குறைந்த விலைக்குத் தரமான மிட் சைஸ் கார் என்றால் அது நிச்சயம் லீனியாதான்!

ஆனால், 2000 ஆர்பிஎம் தாண்டும் வரை மந்தமாகச் செயல்படுகிறது லீனியாவின் இன்ஜின். பின்பக்க ஹெட் ரூம், உயரமானவர்களுக்குப் போதுமானதாக இல்லை. தலை, கூரையில் இடிக்கிறது. கிரவுண்ட் கிளியரன்சும் மிகவும் குறைவு. இதை இந்தியச் சாலைகளை மனதில் வைத்து கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம்.

அது மட்டுமல்லாமல், டீசல் டேங்க்கின் வாய்ப்பகுதி மிகவும் சிறிது. பெட்ரோல் பங்குக்கு டீசல் நிரப்பச் செல்லும் போதெல்லாம் இதற்கு ஏற்ற கன் சுலபத்தில் கிடைக்காததால் தடுமாறினோம். அதனால், புனல் மூலமாக டீசல் நிரப்ப வேண்டியதாகி விட்டது.

திட்டமிட்டபடி மதிய உணவு நேரத்துக்கு முன்பே பெங்களூரை அடைந்து மைசூர் சாலையை எட்ட, எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகே எக்ஸ்பிரஸ் வேயில் காரைத் திருப்பினோம். சாலை அற்புதமாக இருந்தது. ஆனால், இன்னும் முழுமையடையாமல் இருக்கிறது. மைசூர் சாலையைச் சென்றடைந்ததும் பிடாடி, சென்னப்பட்டனா ஆகிய ஊர்களைக் கடந்து சாலையோரம் இருந்த மோட்டலில் மதிய உணவு அருந்தினோம். கர்நாடக உணவுகளில் காரமும் உப்பும் அதிகமாக இருக்கின்றன.

மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டனம் ஆகிய ஊர்களைக் கடந்து மைசூர் எல்லையைத் தொட்டபோது, நேரம் மாலை 3.30 மணி.

மைசூரின் நகருக்குள் நுழையாமல் ரிங் ரோட்டின் மூலமாக குடகு சாலையைப் பிடித்து பயணத்தைத் தொடர்ந்தோம். மங்களூர் சாலை வரை நால்வழிச் சாலையாக இருந்து, பின்னர் இருவழிச் சாலையாக மாறுகிறது. இந்தச் சாலையில் போக்குவரத்து அதிகமில்லாமல் இருந்ததற்கு - இது சீஸன் டைம் இல்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம். ஆனாலும், ஒவ்வொரு சாலையோர ஊர்களிலும் ஊர்க்காரர்களே அமைத்த ஸ்பீட் பிரேக்கர்கள் வேகத்துக்குத் தடை போடுகிறது. மேலும் இந்த வேகத்தடைகள் சீராக அமைக்கப்படாததால் கொஞ்சம் அசந்தாலும்... காரின் சேஸி அடி வாங்க வேண்டியது வரும். ஹன்சூர் என்ற ஊரைத் தாண்டியதும் குஷால் நகரை நோக்கிச் செல்கிறது சாலை. இந்த குஷால் நகர்தான் குடகு மாவட்டத்தின் நுழைவாயில். இங்கிருந்து மலைச் சாலையில்தான் பயணிக்க வேண்டும். குஷால் நகரை நெருங்கும்போது சாலையில் எங்கும் திபெத்தியர்கள் நடமாட்டம்.

சரியாக ஆறு மணிக்கு சூரியன் மறையும் முன்பே குடகு மாவட்டத்தின் தலைநகரான

Click to enlarge

மடிக்கேரியை அடைந்தோம். சூரியன் மலைச் சிகரங்களில் நிகழ்த்திய வர்ணஜாலங்களைக் கண்டுகளித்து விட்டு, அன்றைய இரவு அங்கேயே ஓய்வெடுத்தோம்.

குஷால் நகர் அருகே இருக்கும் பைலகுப்பே என்னுமிடத்தில்தான் திபெத்தியர்களின் செட்டில்மென்ட் இருக்கிறது. இங்குள்ள தங்கக் கோயில் மிகவும் பிரபலமானது. வித்தியாசமான கோயில் விமானம், அமைதி தவழும் கோயில் பிரகாரங்கள், பிரம்மாண்ட புத்தர் சிலை, அரக்கு நிற ஆடைகள் அணிந்த புத்த பிட்சுக்கள், விசித்திரமான வழிபாட்டு முறை... ஆச்சரியத்தை அதிகரிக்கிறது.

குடகுப் பயணம் மேற்கொள்பவர்கள் முதலில் மலையின் கீழ்ப்பகுதியில் உள்ள இந்த புத்த கோயிலுக்குச் சென்றுவிட்டு, பின்னர் குஷால் நகரில் இருந்து ஆறு கி.மீ தொலைவில் உள்ள காவிரியின் துணை நதியான ஹேரங்கி அணையைத் தவறாமல் பார்க்க வேண்டும்.

குஷால் நகரிலிருந்து சுமார் 32 கி.மீ தூரத்தில் இருக்கிறது மடிக்கேரி. தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடை வீதிகள் என இங்கே அனைத்தும் பஞ்சமே இல்லாமல் இருக்கின்றன. எல்லா இடங்களுக்கும் போய் வர போக்குவரத்து வசதி, சாலை வசதி என குடகு மாவட்டத்தின் மையத்தில் இருக்கிறது.

மடிக்கேரி நகருக்குள்ளேயே பார்க்க சில இடங்கள் இருக்கின்றன. பழங்கால அரண்மனை, அருமையான சூழலில் அமைந்திருக்கும் புராதனமான சிவன் கோயில், ராஜா சீட் என்ற வியூ பாயின்ட் ஆகியவை நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள். இதில், ராஜா சீட் கிட்டத்தட்ட கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் போன்ற இடம். சூரிய

உதயத்தையும் அஸ்தமனத்தையும் இந்த இடத்தில் இருந்து காண முடியும். ராஜா சீட்டில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் மலை முகடுகளையும், பள்ளத்தாக்கில் நெளியும் தார்ச் சாலைகளையும் கண்டு ரசிக்கலாம். மடிகேரியில் இருந்து எட்டு கி.மீ தொலைவில் 'அப்பே' பால்ஸ் எனும் அருவி இருக்கிறது. கொஞ்சம் அபாயகரமான சாலையில் பயணித்து அருவியை அடைந்தால்... அருகே செல்ல முடியாது. காரணம், ஆபத்தான பகுதி இது. அருவியை ரசிக்க தொங்கு பாலம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். காபித் தோட்டத்தின் நடுவே மலை இடுக்குகளில் 'ஹோ'வெனக் கொட்டும் அருவியை மனம் குளிர ரசிக்கலாம்.

மடிக்கேரியைச் சுற்றி நிறைய ரிஸார்ட்டுகள், கிளப்புகள், தனி பங்களாக்கள் இருக்கின்றன. இங்கே தங்க விரும்பினால், முன்பதிவு செய்துவிட்டுச் செல்வது நல்லது. ரிஸார்ட்டுகளில் மஹிந்திரா கிளப் மடிக்கேரி அருகிலேயே இருக்கிறது. இன்னொரு பெரிய ரிசார்ட்டான ஆரஞ்ச் கவுண்டி சுமார் 40 கி.மீ தூரத்தில் சித்தபுரா அருகே இருக்கிறது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த ஆரஞ்ச் கவுண்டியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் படகில் பயணம் செய்யலாம், மீன் பிடிக்கலாம். இங்கு செயற்கையாக ஒரு சிறு கிராமத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வெளி உலகத் தொடர்பின்றி, தொந்தரவில்லாமல் ரகசியமாகத் தங்கியிருக்க ஆரஞ்ச் கவுண்டி சிறந்த இடம்!

காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, நாகரகொலே விலங்குகள் சரணாலயம், துபாரே தீவில் இருக்கும் யானைகள் பராமரிப்பு கேம்ப், திரிவேணி சங்கமம் என அழைக்கப்படும் பாகமண்டலா, இர்ப்பு அருவி என குடகு மாவட்டம் முழுவதும் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. ட்ரெக்கிங் செல்பவர்களுக்கும், விலங்கின ஆர்வலர்களுக்கும் நிறைய சாய்ஸ்கள் உண்டு. அவசரம் இல்லாமல் ஆற அமர சென்று ரசிப்பதற்கு நேரம் இருப்பவர்களுக்கும் அற்புதமான இடம் குடகுமலை.