ஜி.டி.ஐ எனப்படும் 'கேஸலின் டைரக்ட் இன்ஜெக்ஷன்' (Gasoline Direct Injection -

GDI) தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோலை இன்ஜினுக்குள் செலுத்தும் தொழில்நுட்பத்தின் புதிய வளர்ச்சிதான் ஜி.டி.ஐ.

ஜிடிஐ எப்படி செயல்படுகிறது?

பெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் கார்புரேட்டர், மோனோ பாயின்ட் இன்ஜெக்ஷன் (சிங்கிள் பாயின்ட் இன்ஜெக்ஷன் அல்லது திராட்டில் பாடி இன்ஜெக்ஷன்), மல்ட்டி பாயின்ட் ஃப்யூல் இன்ஜெக்ஷன் (MPFi), சீக்வன்ஷியல் மல்ட்டி ஃப்யூல் இன்ஜெக்ஷன் (Sequential Multi Point Fuel Injection -SMPFi) என்று வளர்ந்து

வந்த இந்த தொழில்நுட்பம் இப்போது, 'கேஸலின் டைரக்ட் இன்ஜெக்ஷன்' என்ற புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது. பொதுவாக, ஜி.டி.ஐ தொழில்நுட்பத்தைத் தவிர மற்ற ஃப்யூல் இன்ஜெக்ஷன் வகைகள், இன்டைரக்ட் இன்ஜெக்ஷன் வகையைச் சார்ந்தவை.

இன்டைரக்ட் இன்ஜெக்ஷனில்... பெட்ரோல், இன்ஜெக்டரில் இருந்து இன்டேக் மேனிபோல்டில் செலுத்தப்படுகிறது. இது காற்றுடன் கலந்து சிலிண்டருக்குள் எரிந்து சக்தியைக் கொடுக்கிறது.

டைரக்ட் இன்ஜெக்ஷனில்... பெட்ரோல், சிலிண்டருக்குள்ளேயே நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

ஜிடிஐ தொழில்நுட்பம், கிட்டத்தட்ட டீசல் இன்ஜின் டைரக்ட் இன்ஜெக்ஷனைப் போல் தோன்றினாலும் டீசல் இன்ஜினுடன் ஒப்பிட முடியாது. காரணம், டீசல் இன்ஜினில் பிஸ்டன் கீழே செல்லும்போது காற்று மட்டுமே உள்ளிழுக்கப்படுகிறது. பின்பு, பிஸ்டன் மேலே உயரும்போது காற்றை அழுத்தி, அதன் மூலம் வெளியாகும் வெப்பத்தில் டீசல் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

ஆனால், ஜி.டி.ஐ தொழில்நுட்பத்தில் காற்றை உள்ளிழுக்கும்போதே நேரடியாக இன்ஜெக்டர் மூலம் பெட்ரோல் செலுத்தப்படுகிறது.

என்ன நன்மைகள்?

பெட்ரோல், அதிக அழுத்தத்துடன் இன்ஜின் சிலிண்டருக்குள்ளேயே நேரடியாகச் செலுத்தப்படுவதால், அதிக சக்தி கிடைக்கிறது.

பெட்ரோல், அதிக அழுத்தத்தினால் மிக மிகச் சிறிய துகள்களாகப் பிரிந்து, காற்றுடன் சீராகக் கலப்பதால், எரிபொருள் வீணாகாமல் முழுமையாக எரிந்து, வாகனத்தில் இருந்து வரும் புகை மாசைக் குறைக்கிறது.

இ.சி.யூ, இன்ஜெக்டரில் இருந்து வரும் பெட்ரோலின் அளவைக் கட்டுப்படுத்துவதால், அதிக மைலேஜ் கிடைக்கிறது.

புகை மாசு கட்டுப்படுத்தப்படுவதால், இவற்றை 2 ஸ்ட்ரோக் இன்ஜினிலும் பயன்படுத்தலாம்.

இந்தத் தொழிநுட்பத்தை உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது பாஷ் நிறுவனம். படிப்படியாக வளர்ச்சியடைந்து இப்போது வெளிநாடுகளில் பரவலாக எல்லா கார் தயாரிப்பாளர்களும் இதைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். நம் நாட்டில் உள்ள கார் தயாரிப்பாளர்களும் விரைவில் இதை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். தற்போது, நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற ஆடி ஏ4 காரில், இந்த தொழில்நுட்பம்தான் 'எஃப்.எஸ்.ஐ' என்ற பெயரில் இருக்கிறது!

ஊட்டி போன்ற மலைப் பகுதியில் பெட்ரோல் வாகனத்தை ஓட்டும்போது குறைவான மைலேஜும், மந்தமான பர்ஃபாமென்சும் இருக்கும். அதே வாகனத்தை கோவையில் ஓட்டினால், அதிக மைலேஜும் நல்ல பர்ஃபாமென்சும் கொடுக்கிறது. இதன் மர்மம் என்ன?

கடல் மட்டத்தில் இருந்து உயரமான இடத்துக்குச் செல்லும்போது, வளிமண்டலத்தின் அழுத்தமும், காற்றின் அடர்த்தியும் குறைகிறது. அதனால், இன்ஜினுக்குள் செல்லும் காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவாகவும், எரிபொருளின் அளவு அதிகமாகவும் இருக்கும். இதனை ரிச் மிக்ஸர் (Rich Mixture) என்று கூறுவார்கள். இதனால், பெட்ரோல் அதிகம் செலவாகும். மேலும், வாகனத்தின் பர்ஃபாமென்சும் பாதிக்கப்படும்.

இது போன்ற சூழ்நிலை மாற்றத்தைச் சரி செய்வதற்காகவே வெளிநாடுகளில், ஆல்டிடுயூட் காம்பன்சேட்டர் (Altitude Compensator) என்ற சாதனம் கார்புரேட்டரில் பொருத்தப்படுகிறது. இதில் இருக்கும் ஊசி, கார்புரேட்டர் ஜெட் மூலமாக பெட்ரோல் வரும் துளையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். கடல் மட்டத்துக்கு மேல் காற்றழுத்தம் குறைவான பகுதியில் செல்லும்போது, பெட்ரோலின் அளவை இது தானாகவே குறைத்துவிடும். எரிபொருளும் வீணாகாது. ஃப்யூல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் உள்ள வாகனத்தில் சென்ஸார்கள் இருப்பதால், இசியூ - வளிமண்டல மாறுபாட்டுக்கு ஏற்ப பெட்ரோலின் அளவைக் கட்டுப்படுத்திவிடும்.

சரி, இந்த தொழில்நுட்பம் இங்கு இல்லையே... நாம் என்ன செய்வது? கார்புரேட்டரில் இருக்கும் 'ஜெட்' அளவை நாம் பயணிக்கும் உயரத்துக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்!