சார்லஸ்

ஈகோ மோதல் மோட்டோ ஜீபிக்குள்ளும் வெடித்துவிட்டது

யமஹாவின் செல்லப் பிள்ளைகளான வாலன்டினோ ராஸிக்கும், ஜார்ஜ் லாரன்சோவுக்கும் இடையே இதுவரை ரேஸ் டிராக்கில் நடந்து வந்த மோதல், முதன் முறையாக டிராக்கைத் தாண்டி வெளியே எதிரொலித்திருக்கிறது!

''நானா அல்லது லாரன்சோவா? யார் அணியில் இருக்க வேண்டும் என்பதை அடுத்த

ஆண்டுக்குள் யமஹா முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் டுகாட்டிக்குத் தாவிவிடுவேன்'' என்று உலக பைக் ரேஸ் சாம்பியன் வாலன்டினோ ராஸி கொடுத்த பேட்டிதான் இந்த மோதல் வெடிக்க ஆரம்பம்!

''2010-ம் ஆண்டு மோட்டோ ஜீபியில் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வது என் நோக்கமல்ல. 2009-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டியலில் கிடைத்த இரண்டாம் இடமே திருப்திகரமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற கனவும் இல்லை. ராஸிக்கு அடுத்தபடியாக வருவதைப் பெருமையாகவே கருதுகிறேன். ஆனால், ராஸி என் பாஸ் அல்ல; அவரும் என்னைப் போல் யமஹாவுக்காக ரேஸ் ஓட்டும் சக ரேஸர்தான்!'' என்று இதுவரை அமைதியாக இருந்த லாரன்சோ, ராஸி மீது கடுப்பைக் காட்டி இருக்கிறார். லாரன்சோவின் இந்தப் பேட்டியால், இத்தாலி ராஸி மீது செம கடுப்பில் இருக்கிறார்கள் லாரன்சோவின் ஸ்பெயின் ரசிகர்கள்!

2009-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டத்துக்காகக் கடுமையாகப் போராடிய லாரன்சோ, ஒரு கட்டத்தில் ராஸியை வீழ்த்திவிடுவார் என்ற எதிர்பார்ப்பே இருந்தது. ஆனால், பல ரேஸ் போட்டிகளில் விபத்துகளில் சிக்கி பட்டத்தை இழந்தார் லாரன்சோ. ''2011-ல் யமஹா அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை யமஹாதான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு யமஹாவில் நீடிப்பதிலோ, ராஸியுடன் ஒரே அணியில் இருந்து ரேஸ் ஓட்டுவதிலோ எந்தப் பிரச்னையும் இல்லை'' என்றும் சொல்லி இருக்கிறார் லாரன்சோ.

மோட்டோ 2
250 சிசி போட்டிகள் இனி கிடையாது. அதற்குப் பதில் 'மோட்டோ 2.' இதில், 600 சிசி இன்ஜின்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இவை 150 தீலீஜீ சக்தி கொண்டவை என்பதால், மோட்டோ 2 பைக்குகளின் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்-படுகிறது!

1000 சிசி இன்ஜினுடன் மோட்டோ ஜீபி!
2012-ம் ஆண்டு முதல் மோட்டோ ஜீபி பைக்குகளில் 1000 சிசி இன்ஜின்கள் பொருத்தப்பட இருக்கின்றன. இப்போது இருக்கும் 800 சிசி பைக்குகளில் பவர் குறைவாக இருக்கிறது என்று மோட்டோ ஜீபி ரேஸர்கள் தொடர்ந்து புகார் சொன்னதை அடுத்துதான் இந்த மாற்றம். 1000 சிசி இன்ஜின் என்பதால், வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் வேகத்துக்கு மோட்டோ ஜீபியும் வந்துவிடும். அதனால், வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் அமைப்பு, இன்ஜின் பவரை இன்னும் அதிகரிக்கலாமா என்கிற யோசனையில் இருக்கிறது!

''ஒரே பைக், ஒரே டெக்னாலாஜி, ஒரே அணி என இரண்டு வீரர்களும் சம பலத்துடன் மோதும்போதுதானே யார் திறமையானவர் என்பது தெரியவரும். லாரன்«சா யமஹாவில் இருப்பது ஏன் ராஸிக்குப் பிடிக்கவில்லை? லாரன்சோ அணி மாறினால் இவர் ஈஸியாக வெற்றி பெறலாம் என நினைக்கிறார். லாரன்சோ அணி மாறக்கூடாது'' என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் லாரன்சோவின் ரசிகர்கள்.

லாரன்சோ, ராஸி மோதலால் 2010-ம் ஆண்டு ரேஸ் போட்டிகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற பரபரப்பு இப்போதே எகிற ஆரம்பித்து விட்டது!