125 சிசி பைக் வாங்கலாமென இருக்கிறேன். சுஸூகி ஜீயஸ் வாங்கலாமா... அல்லது ஹோண்டா ஷைன் வாங்கலாமா?

கார்த்தி, வெள்ளக்கோயில்.

ஹோண்டா ஷைன், சுஸூகி ஜீயஸ் இரண்டு பைக்குகளுமே ஸ்மூத்தான இன்ஜினைக்

கொண்டவை. ஆனால் பர்ஃபாமென்ஸ், மைலேஜ் ஆகியவற்றில் சுஸூகியை முந்திவிடுகிறது ஹோண்டா. மேலும், சௌகரியமான பயண அனுபவத்தைத் தருவதில் ஹோண்டாவே முன்னிலையில் இருக்கிறது. அதனால், ஹோண்டா ஷைனை வாங்குவதே நல்லது!

நான் யமஹா FZ-16 பைக் வைத்திருக்கிறேன். இந்த பைக்கின் ஹெட் லைட் வெளிச்சம் போதுமானதாக இல்லை. பவர்ஃபுல் ஹெட் லைட் பொருத்தலாம் என இருக்கிறேன். என்ன ஹெட் லைட் பொருத்தலாம்?

- ஜெயக்குமார், திண்டுக்கல்.

பவர்ஃபுல் ஹெட் லைட் என்பதைவிட சரியான ஹெட் லைட்டைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பைக்குக்கு பாஷ் நிறுவனத்தின் ஹாலோஜன் பல்புகள் சரியாக இருக்கும். இது அதிக வெளிச்சத்தையும் தரும்!

நான் கடந்த டிசம்பர் மாதம் (2009) புதிய வேகன்-ஆர் வாங்கினேன். காருக்கு அதிக டிஸ்கவுன்ட் கொடுத்ததோடு, ஆக்சஸரிஸும் இலவசமாகக் கொடுத்தார்கள். 'டிசம்பர் மாதம் கார்கள் அதிகமாக விற்பனையாகாது என்பதால்தான் டிஸ்கவுன்ட் கொடுக்கிறார்கள். இந்த காருக்கு ரீ-சேல் மதிப்பு இருக்காது' என்று சொல்கிறார்கள் எனது நண்பர்கள். எது உண்மை? டிசம்பர் மாதம் கார் வாங்கக்கூடாதா?

ராஜரத்தினம், கோவை.

கார் வாங்குவதற்கு நல்ல மாதங்கள் எதுவும் கிடையாது. ஆனால், டிசம்பர் மாதம் கார் வாங்கும்போது அது பழைய ஆண்டின் மாடலாகவே எடுத்துக்கொள்ளப்படும். அதனால், நீங்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கார் விற்பனை செய்யப் போனால், அதை நான்கு ஆண்டுகளான மாடல் என்றே சொல்வார்கள். ரீ-சேல் மதிப்பு ஓரளவுக்குக் குறையும். ஆனால், அதற்குப் பதில் நீங்கள் கார் வாங்கும்போதே அதிக டிஸ்கவுன்ட் வாங்கிவிடுகிறீர்கள் என்பதால், இந்தக் கணக்கு சரியாகிவிடும். மேலும், அடிக்கடி கார் வாங்கி விற்பவர் நீங்கள் இல்லையென்றால், இந்தப் பிரச்னை உங்களுக்கு நிச்சயம் ஏற்படாது!

நான் மாருதி ஸ்விஃப்ட் டீசல் கார் வைத்திருக்கிறேன். அடுத்ததாக மிட்-சைஸ் டீசல் கார் வாங்க வேண்டும். எனக்கு மாருதி கார்தான் வேண்டும். மாருதி எஸ்எக்ஸ்4 டீசல் கார் வெளிவரப்போவதாகக் கேள்விப்பட்டேன். இது எப்போது வெளிவரும்?

- நாகராஜன், சென்னை-23.

டீசல் இன்ஜின்களைத் தயாரிக்கப் போதுமான அளவுக்கு உற்பத்தித் திறன் வசதி இல்லாததால், எஸ்எக்ஸ்4 டீசல் கார் வெளியிடும் திட்டத்தைத் தள்ளிவைத்திருக்கிறது மாருதி. அதனால் எஸ்எக்ஸ்4 டீசல் கார் 2010-ம் ஆண்டுக்குள் வெளிவர வாய்ப்பு இல்லை. ஃபியட் லீனியா போன்ற மற்ற மிட்-சைஸ் கார்களை நீங்கள் பார்க்கலாம்!

ஹோண்டா சிட்டி கார் வைத்திருக்கிறேன். என் அப்பா, அம்மாவுக்கு ஒரு சிறிய ஹேட்ச்பேக் கார் வாங்க வேண்டும். என் அப்பாவுக்கு கார் ஓட்டத் தெரியாது. டிரைவர் வைத்துக்கொள்ள வேண்டும். சௌகரியமாகப் பயணிக்க வேண்டும் என்பதுதான் தேவை. மாருதி ரிட்ஸ் வாங்கலாமா? அல்லது ஹ¨ண்டாய் ஐ10 1.2 மாடல் வாங்கலாமா?

- முருகேசன், ஈரோடு.

மாருதி ரிட்ஸ், நகருக்குள் பயணிக்க நல்ல கார். ஆனால், பின் இருக்கைகளில் இடவசதி மிகவும் குறைவாக இருப்பதோடு, கால்கள் நீட்டி மடக்கி உட்கார வசதியாக இருக்காது. மேலும், உள்ளே போவதும் வருவதும்கூட சற்று சிரமம். டிக்கியில் பொருட்கள் வைத்துக்கொள்ள சுத்தமாக இடம் இருக்காது. ரிட்ஸைவிட அதிக இடவசதி கொண்ட கார் ஐ10. ஆனால், இந்த இரண்டு கார்களைவிடவும் உங்கள் அப்பா, அம்மா சௌகரியமாகப் பயணம் செய்ய இண்டிகா விஸ்டா சரியாக இருக்கும். இதன் பின் இருக்கைகள் அதிக இடவசதியுடன் இருப்பதோடு, வயதானவர்கள் காருக்குள்ளே ஏறி இறங்குவதற்கும் வசதியாக இருக்கும்!

'பஜாஜ் பல்ஸர் 200' - 2007-ம் ஆண்டு மாடல் வைத்திருக்கிறேன். இதில் பாஷ்

நிறுவனத்தின் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தைப் பொருத்தலாமென இருக்கிறேன். இது சரியா? இதனால் மைலேஜில் எந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கும்?

- வினோத்குமார், சென்னை-54.

ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தைப் பொருத்துவது என்பது சாதாரண மாடிஃபிகேஷன் வேலை அல்ல! இதை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். பைக் தொழில்நுட்பத்தில் தேர்ந்த டெக்னீஷியன்களால்தான் இதைச் செய்ய முடியும். ஆனால், இதன் விலை மிகவும் அதிகம் என்பதோடு, மைலேஜில் 4-5 கி.மீ வித்தியாசம்தான் கார்புரேட்டர் இன்ஜினுக்கும், ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜினுக்கும் இருக்கும். அதனால் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் பொருத்தும் திட்டத்தைக் கைவிடுவது நல்லது!

7 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் புதிய கார் வாங்க வேண்டும். நான் எப்படியும் மாதத்துக்கு 1500 கி.மீ-க்கு மேல் பயணிப்பேன். எனக்கு கார் ஸ்டைலாகவும், சௌகரியமாகவும் இருக்க வேண்டும். சர்வீஸ் செலவுகளும் குறைவாக இருக்க வேண்டும். ஃபியட் லீனியா பெட்ரோல், மாருதி எஸ்எக்ஸ்4 இரண்டு கார்களை இறுதி செய்திருக்கிறேன். இதில் எதை வாங்கலாம்? அல்லது இன்னும் பவர்ஃபுல்லான பெட்ரோல் இன்ஜினை ஃபியட் லீனியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக மோ.வி-ல் படித்தேன். அதற்காகக் காத்திருக்கலாமா?

- ஸ்ரீதர், திருச்சி.

மாருதி எஸ்எக்ஸ்4 காரின் விலை குறைவு என்பதோடு வசதிகளும் அதிகம். இதன் சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸுகளின் விலையும் குறைவுதான். ஆனால், இதன் மைலேஜ் மிகவும் குறைவு. நகருக்குள் லிட்டருக்கு கிட்டத்தட்ட 7 கி.மீ-தான் மைலேஜ் கொடுக்கிறது. ஸ்டைல், சௌகரியம் தேவை என்பதால், ஃபியட் லீனியாதான் சரியாக இருக்கும். மோ.வி-ல் நீங்கள் படித்தது போலவே விரைவில் 118 தீலீஜீ சக்திகொண்ட டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மாடல் வெளிவர இருக்கிறது. ஆனால், இதன் விலை அதிகமாக இருக்கும்!

ஐந்து லட்ச ரூபாய் விலையில் புதிய கார் வாங்க வேண்டும். ஹ¨ண்டாய் ஐ20, மாருதி

ஸ்விஃப்ட், மாருதி ரிட்ஸ், வேகன்-ஆர் - இவை நான்கில் எந்த கார் ஓட்டுவதற்கு எளிதாகவும், நல்ல மைலேஜும் கொடுக்கும்? சர்வீஸ் செலவுகளும் குறைவாக இருக்க வேண்டும். பெட்ரோல் கார்தான் வேண்டும்.

- மு.விஜயகுமார், கோவை.

மாருதி ரிட்ஸ் கார் வாங்கலாம். இதன் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் நல்ல மைலேஜ் தருவதோடு, பர்ஃபாமென்ஸில் ஸ்விஃப்ட்டைவிட நன்றாக இருக்கிறது. நகருக்குள் இதை ஓட்டுவதும் எளிது! மாருதி என்பதால் சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் குறைவுதான். ஐ10-ல் இருக்கும் கப்பா இன்ஜின்தான் ஐ20 1.2 லிட்டர் மாடலிலும் இருக்கிறது. எடை அதிகமான இந்த காரில் 1.2 இன்ஜினின் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இல்லை. 1.4 லிட்டர் இன்ஜினோடு விற்பனையாகும் ஐ20 ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை கிட்டத்தட்ட 8 லட்ச ரூபாயைத் தொட்டுவிடுகிறது. அதனால், மாருதி ரிட்ஸை வாங்குவதே உங்களுக்குச் சரியாக இருக்கும்!